பெட்ஷீட் தராத அக்கா.. இரவெல்லாம் அழுத தங்கை.. பெங்களூரை அதிர வைத்த "போர்வை".. இப்படி கூடவா நடக்கும்?
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் நடந்த துயர சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை தந்து வருகிறது. இந்த சின்ன விஷயத்துக்கு இப்படியெல்லாம் முடிவெடுப்பார்களா? என்று இளம்பெண்ணின் உறவினர்கள் கதறி அழுது சொல்லி கொண்டிருக்கிறார்கள். என்ன நடந்தது?
பெங்களூரில் சாமராஜ் பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஷ்ரவ்யா.. இவருக்கு 19 வயதாகிறது.. அங்குள்ள கல்லூரி ஒன்றில் BBA 2ம் வருடம் படித்து வருகிறார்... இவருக்கு ஒரு உடன்பிறந்த அக்கா இருக்கிறார்.

அக்கா - தங்கைகள்: ஆனால், ஷ்ரவ்யா எப்போது பார்த்தாலும் அக்காவுடன் சண்டை போட்டுக் கொண்டே இருப்பாராம். அப்படித்தான், அக்டோபர் 18ம் தேதி இரவு தன்னுடைய அக்காவுடன் பெட்ஷீட் வேண்டும் என்று சண்டை போட்டிருக்கிறார்.. போர்வைக்காக அக்கா-தங்கைகள் சண்டை போடுவதை பார்த்த பெற்றோர், 2 பேரையுமே சமாதானமாக்கி தூங்க வைத்திருக்கிறார்கள்.
எனினும், ஷ்ரவ்யாவுக்கு தூக்கம் வரவில்லை.. பெட்ஷீட் பிரச்சனையை நினைத்தது நினைத்து மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது.. ஆனால், மறுநாள் காலை நீண்ட நேரமாகியும், ஷ்ரவ்யா ரூமை விட்டு வெளியே வரவில்லை.. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர், கதவை உடைத்து கொண்டு சென்று பார்த்தபோது, ஷ்ரவ்யா தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அலறினார்கள்.
பெட்ஷீட்: இதுகுறித்து தகவலறிந்த போலீசாரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஷ்ரவ்யாவின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பான விசாரணையையும் மேற்கொண்டு வருகிறார்கள்.. ஆனால், ஷ்ரவ்யாவின் பெற்றோர் இடையேயும் கருத்து வேற்றுமைகளால், தகராறுகள் வீட்டில் நடந்திருக்கிறது. இதனால், தான் மன உளைச்சலுக்கு ஆளாவதாக தன்னுடைய நண்பர்களிடம் ஷ்ரவ்யா அடிக்கடி சொல்லி வருத்தப்படுவாராம்.
மனவேதனை: ஏற்கனவே மனவேதனையில் இருந்த ஷ்ரவ்யா, தன்னுடைய அக்காவுடன் சண்டை போட்டதில் மேலும் மன உளைச்சலுடன் இரவெல்லாம் தவித்துவந்த நிலையில், திடீரென மன அழுத்தம் அதிகமாகி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிகிறது.
இப்படித்தான் ஒரு மாதத்திற்கு முன்பு இதேபோன்ற ஒரு சம்பவம் பெங்களூரில் நடந்தது.. 20 வயது மாணவர், அவருக்கு புதிய பைக் வாங்க தர மறுத்ததால் தற்கொலை செய்து கொண்டார். இந்த இளைஞரின் அப்பா இறந்துவிட்டார்.. அதனால், வீட்டு வேலை செய்து இளைஞரை படிக்க வைத்து வருகிறார் அவரது அம்மா.
பணக்கஷ்டம்: பணக்கஷ்டம் அதிகமாக இருப்பதால் உடனடியாக தன்னால் பைக் வாங்கி தர முடியவில்லை என்றும், சற்று பொறுமையாக இருக்கும்படியும் அந்த ஏழை தாய் சொல்லியிருக்கிறார்.. இதனால் விரக்தியடைந்த மகன், தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், ஒரு சிறிய பிரச்சனைக்காக இளம் பெண் விபரீத முடிவு எடுத்தது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுக்கெல்லாமா? தற்கொலை செய்து கொள்வது என்று இணையவாசிகள் தங்கள் ஆதங்கத்தை கொட்டி வருகிறார்கள். ஏற்கனவே தன்னுடைய குடும்பத்தில் நடக்கும் சண்டைகளை மன உளைச்சலில் இருந்த பெண்ணை, யாருமே கவனிக்காமல் விட்டுவிட்டார்களே? என்றும் இணையவாசிகள் கவலையை தெரிவித்து வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications