பெங்களூரில் சோகத்தில் முடிந்த பப் பார்ட்டி.. ஐடி பெண் ஊழியர், ஆண் நண்பர் பரிதாப பலி
பெங்களூர்: ஐடி தலைநகரான பெங்களூரின் மத்திய பகுதியிலுள்ள ஒரு பப்பில் கீழே தவறி விழுந்து இரு இளைஞர்கள் பலியான சம்பவம் பெரும் அ்திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐடி தலைநகரமான பெங்களூர், மதுபான பப்களுக்கும் பெயர் பெற்றது. அதிலும் மத்திய பெங்களூரின் முக்கியமான கமர்ஷியல் ஏரியாவான எம்ஜிரோடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் பப் கலாச்சாரத்திற்கு பெயர் பெற்றவை.

இந்த நிலையில், எம்ஜிரோடு பகுதியிலுள்ள சர்ச் ஸ்ட்ரீட்டிலுள்ள ஒரு பப்பில் நேற்று நள்ளிரவு விபரீத சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றின், மூன்றாவது மாடியில், அபிஷேக் என்பவருக்கு சொந்தமான BEiR என்ற பப் இயங்கி வருகிறது. நேற்று இரவு சுமார் 11.30 மணிக்கு, பப்பில் இருந்து 2வது தளத்திற்கு, பவன் அட்டாவர் (36) என்பவரும், அவரது தோழி வேதா என்பவரும் பார்ட்டியை முடித்துக் கொண்டு, நடந்து வந்துள்ளனர்.
அப்போது, 2வது தளத்தின் போர்ட்டிகோ பகுதியில் பெரிய இடைவெளி இருந்துள்ளது. இது தெரியாமல் ஒருவர் பின் ஒருவராக பவன் மற்றும் வேதா இருவரும் வழுக்கி சரிந்தனர். இதனால், நேராக தரைத் தளத்தில் சென்று விழுந்துள்ளனர். இந்த சம்பவத்தில் வேதா அதே இடத்தில் பலியானார். பவுரிங் மருத்துவனையில், சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட, பவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதில் பவன், பப்ளிகேஷன் ஒன்றில் வேலை பார்த்து வந்தவர். வேதா ஒரு ஐடி துறை ஊழியர். இதனிடையே கப்பன் பார்க் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து அபிஷேக் மற்றும் பப் மேலாளர் மனி ஆகியோருக்கு எதிராக 304A பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அஜாக்கிரதையால் ஒருவர் உயிரிழக்க காரணமாக இருந்தால் தண்டனை கொடுக்க வகை செய்யும் சட்டப் பிரிவு இதுவாகும்.
-
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications