6,000 ஏக்கர் தேர்வு.. ஓசூருக்கு போட்டியாக பெங்களூரின் 2வது விமான நிலையம் எங்கு அமைகிறது தெரியுமா?
பெங்களூர்: தமிழக அரசு சார்பில் தமிழக - கர்நாடகா எல்லையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு போட்டியாக பெங்களூரில் 2வது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான பணிகள் தீவிரமாக நடந்தது. அதன்படி தற்போது 2வது விமான நிலையத்தை அமைக்க 6,000 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழக - கர்நாடகா எல்லையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு நிறுவனங்களின் தொழிற்சாலைகள் உள்ளது. இதனால் ஓசூரில் 2 ஆயிரம் ஏக்கரில் ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளைக் கையாளக்கூடிய வகையில், ஒரு பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தமிழக சட்டசபையில் 110வது விதியின் கீழ் அறிவித்தார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து கர்நாடகா அரசு பெங்களூரில் புதிதாக 2வது விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்தது. பெங்களூரில் தற்போது கெம்பேகவுடா விமான நிலையம் உள்ள நிலையில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று கர்நாடகா அரசு தெரிவித்தது.
ஏற்கனவே ஒரு விமான நிலையம் பெங்களூரில் இருந்தாலும் கூட ஓசூரில் அமைக்கப்படும் விமான நிலையத்தால் கர்நாடகாவின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் கர்நாடகா அரசு இந்த 2வது விமான நிலைய திட்டத்தை கையில் எடுத்தது. அதன்பிறகு விமான நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணி தொடங்கியது.
இந்நிலையில் தான் பெங்களூரில் 2வது விமான நிலையம் அமைப்பதற்கான இடம் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. அதன்படி பெங்களூர் புறநகர் மாவட்டம் நெலமங்களா - குனிகல்லில் தேசிய நெடுஞ்சாலை 75-ன் பக்கத்தின் அமைய உள்ளது. இதற்கான விரிவான டிஜிட்டல் சர்வே ஹெலிகாப்டர் உதவியுடன் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக சுற்றுச்சூழல் மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள், சர்வேயர்கள் அடங்கி குழு இந்த சர்வேவைய மேற்கொண்டது. அதன்பிறகு அந்த இடம் தொடர்பான மேப் என்பது தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் பெங்களூரின் 2வது விமான நிலையம் நெலமங்களா - குனிகல் ரூட்டில் அமைவது உறுதியாகி உள்ளது.
இங்கு விமான நிலையத்துக்காக 3 கிராம பஞ்சாயத்துகளில் மொட்டகொண்டனஹள்ளி, நெலமங்களா, சோம்புரா, என்டகானஹள்ளி, சோழதேவனஹள்ளி உள்ளிட்ட பகுதியில் மொத்தம் 6 ஆயிரம் ஏக்கர் நிலம் என்பது தேர்வு செய்யப்பட்டு எஸ்இபி மார்க்கர்ஸ் (SCP Markers) வைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு ஹெலிகாப்டர் சர்வே நடத்தப்பட்டது.
இருப்பினும் இந்த இடத்தில் மேலும் சில திட்ட பணிகள் செல்கிறது. அதன்படி ஹாசன் வழியாக பெங்களூர் - மங்களூர் ரயில்வே வழித்தடம், பெங்களூர் - மங்களூர் தேசிய நெடுஞ்சாலை, சோலூரில் புறநகர் டவுன்ஷிப் திட்டம், ஹேமாவதி குடிநீர் திட்டத்துக்கான பைப்லைன் உள்ளிட்வை இந்த பகுதியின் வழியே செல்கிறது. இதற்க என்ன மாற்று ஏற்பாடு செய்யப்பட உள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையே தான் அந்த பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதாவது விமான நிலையம் அமையும் இடம் என்பது அர்க்காவதி மற்றும் குமுத்வாதி ஆற்றுப்படுகை பகுதியான திப்பகொண்டனஹள்ளி அணைப்பகுதியில் உள்ளது. இங்கு விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரசு சார்பில் இருந்து முறையான அறிவிப்பு எதுவும் வராமல் சர்வே செய்கின்றனர். இதில் எந்த விஷயத்தையும் மறைக்காமல் அரசு சார்பில் விவசாயிகளிடம் பேச வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
அதேபோல் நெலமங்களா சட்டசபை தொகுதி எம்எல்ஏ சீனிவாஸ் (காங்கிரஸ்) விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இதுபற்றி அவர், ‛‛2வது விமான நிலையம் தேவை என்பதை காட்டிலும்விவசாயிகளின் நலனை தான் முதலில் கருத்தில் கொள்ள வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
முன்னதாக பெங்களூரில் 2வது விமான நிலையம் அமைக்க பல இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. குறிப்பாக பெங்களூர் புறநகர் பகுதிகளான பிடதி, ஹாரோஹள்ளி, டாபஸ்பேட்டை, சிரா, நெலமங்களா உள்பட பிற இடங்களும் பரிசீலனை செய்யப்பட்டன. முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஆகியோர் நெலமங்களா - குனிகல் ரூட்டில் விமான நிலையத்தை அமைக்க ஒப்புதல் வழங்கிய நிலையில் சர்வே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications