ஓரினச்சேர்க்கை.. பெங்களூரில் 38 வயதில் இப்படியொரு தாய்? அந்த குழந்தை அழுதுட்டே போலீசில் சொன்ன கொடுமை
பெங்களூர்: கிரைண்டர் ஆப்பை பயன்படுத்தி, ஆண் ஓரின சேர்க்கையாளர்கள் சந்திப்பு எனக் கூறி பலரிடம் மோசடிகள் நடந்து வருவது அதிர்ச்சியை உண்டுபண்ணி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடந்துள்ள இந்த சம்பவம் ஒட்டுமொத்த பேரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது. இது தொடர்பான விசாரணையையும் போலீசார் நடத்தி வருகிறார்கள். என்ன நடந்தது?.
சமீபத்தில், சென்னை காவல் ஆணையர் அருண், முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.. அதில் டேட்டிங் செயலியாக உள்ள கிரைண்டர் மொபைல் ஆப்பை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்..

ஏனென்றால், போதைப்பொருள் விற்பனைக்கு கிரைண்டர் ஆப் அதிகமாக பயன்படுத்தப்படுவதால், அதனை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொண்டிருந்தார்.
கிரைண்டர் ஆப் கொடுமை
எனினும் கிரைண்டர் ஆப் பயன்படுத்தி பல கொடுமைகள் நடந்து வருகின்றன.. அதிலும் ஓரினச்சேர்க்கை தொடர்பான விளம்பரங்களை பரப்பி, குற்றங்களும் நடந்துள்ளன. 2 மாதங்களுக்கு முன்பு, சென்னை வியாசர்பாடியில் தொழிலதிபர் ஒருவரின் 26 வயது இளைஞர், கிரைண்டர் ஆப் மூலம் ஏற்கனவே பழக்கமான நபர் ஒருவரை ஓரின சேர்க்கைக்காக தன்னுடைய வீட்டிற்கு அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், அந்த நபருடன் 2 ஆண், 1 பெண் என 3 பேரும் ஆட்டோவில் வந்து, இளைஞரை கட்டிப்போட்டு விட்டு பாத்ரூமில் அடைத்துவைத்துவிட்டு, வீட்டிலிருந்த 31 சவரன் நகை, 4 கிலோ வெள்ளி பொருட்களை எடுத்து சென்றுவிட்டனர். பாத்ரூமிலிருந்தே போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு தகவல் தந்தபிறகு இளைஞர் மீட்கப்பட்டார்.
தாம்பரம் நகைகள் பறிப்பு
அதேபோல தர்மபுரியில் குணசேகரன் என்பவரிடம் சிவகாசி திருத்தங்கல் பகுதியை சேர்ந்த முனீஸ்வரன் 'கிரைண்டர் ஆப்' மூலம் பழகி நட்பாகி, மோசடிக்கு ஆளாக்கப்பட்டார்.. இப்படி ஆண் ஓரின சேர்க்கையாளர்கள் சந்திப்பு எனக் கூறி பலரிடம் மோசடிகள் நடந்துவருகின்றன.. பலர் மிரட்டப்பட்டும் வருகின்றனர்.. ஏமாந்த இளைஞர்கள் பலர் இதுகுறித்து புகார் அளிக்க தயக்கம் காட்டுவதால் மோசடியில் ஈடுபடும் நபர்களும் அவர்களின் கைவரிசையை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஓரினச்சேர்க்கை கொடுமை ஆன்லைனில்தான் இப்படி ஒருபக்கம் நடந்து வருகிறதென்றால், பெங்களூருவில் ஒரு பயங்கரம் நடந்துள்ளது..
பெங்களூர் பெண்
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த அந்த பெண்ணுக்கு 38 வயதாகிறது.. திருமணமாகிவிட்டது.. ஆனால், கணவரை 8 வருடம் முன்பே பிரிந்துவிட்டார்.. இதனால், 6 வயது குழந்தையுடன் தனியே வந்துவிட்டார்.
இந்த குழந்தைக்கு இப்போது 14 வயதாகிறது.. பெங்களூருவில் உள்ள ஒரு தனியார், 9-ம் வகுப்பு படித்து வருகிறார். வாடகை வீட்டில் தாய் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் அவரது பள்ளியில் பாலியல் வன்கொடுமை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.. அதில் பங்கேற்ற மாணவி, திடீரென ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.. அதாவது கடந்த 6 ஆண்டுகளாகவே, தன்னுடைய தாய் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி வருவதாக கூறினார்.
ஆசிரியைகள் விசாரணை
இதைக்கேட்டு அங்கிருந்த ஆசிரியைகள் உட்பட அனைவருமே அதிர்ச்சி அடைந்தனர். பிறகு, பள்ளியின் தலைமை ஆசிரியர் தரப்பிலிருந்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.. போலீசாரும் விரைந்து அந்த பள்ளிக்கு வந்தார்கள்.. பாதிக்கப்பட்ட மாணவியிடம் தனியாக விசாரணையும் நடத்தினார்கள்.
அப்போது, மாணவி தனக்கு நேர்ந்த கொடுமைகளை எல்லாம் சொல்லி அழுதுள்ளார்.. இதைக்கேட்டு அதிர்ச்சியைடந்த போலீசார், உடனே அந்த மாணவியின் அம்மாவிடமே இதுகுறித்து விசாரணை நடத்தினார்கள்..
அதற்கு அந்த தாய், "திருமணத்துக்கு பிறகு கணவனுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தான், என்னுடைய மகளுக்கு கற்றுக்கொடுத்தேன்" என்று கூலாக பதில் சொன்னார்.. இதையடுத்து, போலீசார் மாணவியின் தாயை கைது செய்தனர். தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
மகளுடன், தாய் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications