அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026
பெங்களூர்: தென்னிந்தியாவின் மிக முக்கியமான 2 தொழில் நகரங்களான சென்னை மற்றும் பெங்களூரு இடையிலான பயணத்தில் ஒரு மிகப்பெரிய புரட்சி ஏற்படப் போகிறது.. ஆம், பல வருஷங்களாகவே பேசப்பட்டு வந்த சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே (Expressway) பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.. அதுகுறித்த ஒரு குட்நியூஸ்தான் தற்போது வெளியாகி உள்ளது,
பெங்களூரு - சென்னை அதிவேக நெடுஞ்சாலை வரும் ஜூன் 2026 முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டம் முழுமையடையும்போது, தற்போது சுமார் 6 முதல் 7 மணி நேரம் வரை நீடிக்கும் பயண நேரம், வெறும் 2.5 மணி நேரமாகக் குறையும் என்பது வாகன ஓட்டிகளுக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.. இது பயணிகள், தொழிலதிபர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு புதிய பயண அனுபவத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.
பெங்களூரு - சென்னை எக்ஸ்பிரஸ்வே
இந்த புதிய பெங்களூரு - சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டத்தில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் அதிவேகப் பயணத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.. பழைய தேசிய நெடுஞ்சாலையில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அபாயங்களைத் தவிர்க்கும் வகையில், இந்தச் சாலை முற்றிலும் புதிய பாதையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் பல இடங்களில் வாகனங்கள் தடையின்றி செல்ல ஏதுவாக எலிவேட்டட் ரோட்டரி, புறவழிச்சாலைகள் மற்றும் அணுகு சாலைகளை இணைக்கும் பிரம்மாண்டமான சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.. இதன் மூலம் வாகனங்கள் எங்கும் நிற்காமல் சீரான வேகத்தில் செல்ல முடியும்.. இது எரிபொருள் செலவைக் குறைப்பதுடன், பயணிகளின் நேரத்தையும் பெருமளவு மிச்சப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது..
வணிகப் பணிகள் - பொருளாதார வளர்ச்சி
பெங்களூரு - சென்னை சாலை பயன்பாட்டிற்கு வரும்போது லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சரக்கு போக்குவரத்துத் துறை மிகப்பெரிய வளர்ச்சியை சந்திக்கும்.. சென்னைத் துறைமுகத்தில் இருந்து பெங்களூரு தொழில் நிறுவனங்களுக்குச் செல்லும் சரக்கு வாகனங்கள் சில மணி நேரங்களிலேயே தங்கள் இலக்கையும் அடைய முடியும். இது வணிகப் பணிகள் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு மிகப்பெரிய தூண்டுதலாக அமையும் என்கிறார்கள் அதிகாரிகள்
அதுமட்டுமல்ல, ரயில்வே மற்றும் விமான சேவைகளுக்கு இணையாக, இந்த எக்ஸ்பிரஸ்வே சாலைப் போக்குவரத்தை ஒரு அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்றும் குறிப்பாக வார இறுதி நாட்களில் பெங்களூரு மற்றும் சென்னை இடையே பயணிக்கும் ஆயிரக்கணக்கான ஐடி ஊழியர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய நிம்மதியைத் தரும் செய்தியாகும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
2 பக்கமும் பசுமைப்போர்வை
இந்த திட்டத்தில் இன்னொரு ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், சாலையின் 2 பக்கமும பசுமைப் போர்வையை உருவாக்கும் மரக்கன்றுகள் நடப்பட்டு, நவீனக் கட்டமைப்புகளுடன் இந்தச் சாலை உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் அவசரக் கால உதவி மையங்கள் மற்றும் நவீன உணவக வசதிகளும் ஆங்காங்கே அமைக்கப்பட உள்ளன.. ஜூன் 2026 முதல் இந்தச் சாலையை மக்கள் முழுமையாகப் பயன்படுத்தத் தொடங்கலாம்.
இந்த மெகா திட்டமானது தமிழகம் மற்றும் கர்நாடகா இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்துவதுடன், தென் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கும் ஒரு மைல்கல்லாக அமையும் என்ற நம்பிக்கை அதிகரித்தபடியே உள்ளது...!!!!
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
பெங்களூருவுடன் ஒப்பிடுவது தவறு.. பரந்தூர் விமான நிலையம் குறித்து பூவுலகின் நண்பர்கள் கருத்து -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications