6 மாதம்.. மாஜி காதலியை மிரட்டி 2 நண்பர்களோடு பலாத்காரம் செய்த நடன ஆசிரியர்! ஷாக் பின்னணி
பெங்களூர்: பெங்களூரில் சேர்ந்து எடுத்த போட்டோக்களை காட்டி மிரட்டி முன்னாள் காதலியை 6 மாதமாக நடன ஆசிரியர் ஒருவர் 2 நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்துள்ளார். தற்போது 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவத்தின் பின்னணி பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெங்களூர் கொடிகேஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் அன்டி ஜார்ஜ் (வயது 28). நடன ஆசிரியர். இவருக்கும், 23 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து இருவரும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் நலம்விசாரித்து கொண்டனர். இந்த நலம் விசாரிப்பு அவர்கள் இடையேயான உறவை வலுப்படுத்தியது. இதையடுத்து இருவரும் செல்போன் எண்களை பரிமாறி கொண்டு பேச தொடங்கினர்.
இருவரும் நல்ல நண்பர்களாக மாறினர். மேலும் அவர்கள் 2 பேரும் அடிக்கடி பெங்களூரில் சேர்ந்து சுற்ற தொடங்கினர். இருவருக்கும் இடையேயான இந்த நட்பு காதலாக மாறியது. இருவரும் பரஸ்பரம் காதலிக்க தொடங்கினர். இதை தொடர்ந்து அடிக்கடி அவர்கள் 2 பேரும் வெளியே சென்று செல்போனில் போட்டோக்கள் எடுத்துள்ளனர். இருவரும் சேர்ந்து இருந்து போட்டோக்களை எடுத்து கொண்டனர்.
இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு இருவரின் காதலிலும் பெரிய இடி இடித்தது. அன்டி ஜார்ஜ், இளம்பெண் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இருவர் இடையேயான காதல் முறிந்து போனது. அதன்பிறகு இருவரும் காதலை கைவிட்டு பிரிந்தனர். இதற்கிடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அன்டி ஜார்ஜ், தனது முன்னாள் காதலியாக இளம்பெண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது ‛‛காதலித்த சமயத்தில் எடுத்த போட்டோக்கள் என்னிடம் உள்ளது. எனது ஆசைக்கு இணங்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த போட்டோக்களை வெளியிட்டு விடுவேன்'' என மிரட்டல் விடுத்துள்ளார். அதோடு, ‛‛எனது ஆசைக்கு இணங்கிவிட்டால் போட்டோக்களை அழித்து விடுவேன்'' என தெரிவித்துள்ளார். இதனால் இளம்பெண் செய்வதறியாது திகைத்தார். மேலும் அன்டி ஜார்ஜ் ஆசைக்கு அவர் இணங்கவில்லை.

இருப்பினும் அன்டி ஜார்ஜ் விடவில்லை. தொடர்ந்து மிரட்டி இளம்பெண்ணை பலாத்காரம் செய்தார். அதோடு அன்டி ஜார்ஜ் தனது நண்பர்கள் சந்தோஷ் (28), சசிக்குமார் (30) ஆகியோரையும் சேர்த்து கொண்டு இளம்பெண்ணை வன்புணர்வு செய்துள்ளார். இந்த தொல்லை தொடர்ந்து வந்துள்ளது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான இளம்பெண் சம்பவம் குறித்து தனது தோழியிடம் தெரிவித்தார்.
அப்போது அவர், சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யும்படி அறிவுறுத்தினார். இதையடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண் சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்டி ஜார்ஜ், சந்தோஷ், சசிக்குமார் ஆகியோரை கைது செய்தனர். இதில் அன்டி ஜார்ஜுக்கு திருமணம் ஆகவில்லை.
மாறாக சந்தோஷ், சசிக்குமார் ஆகியோர் திருமணம் ஆனவர்கள் என்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து செல்போன், மடிக்கணினி, பென் டிரைவ் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications