பெங்களூரில் உலா வந்த சிறுத்தை.. எலக்ட்ரானிக் சிட்டி பகுதி மக்கள் பீதி! ஹை அலர்ட்டில் வனத்துறை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரின் முக்கிய பகுதிகளில் ஒன்றான எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் சிறுத்தை ஒன்று தென்பட்டுள்ளது. அங்குள்ள டோல் பிளாசா அருகே உள்ள மேம்பாலத்தை ஒட்டி சாலையை கடந்து சென்ற சிறுத்தை அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளில் பதிவாகியுள்ளது. சிறுத்தை தென்பட்டதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் எலெக்ட்ரானிக் சிட்டி பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் சிறுத்தை ஒன்று சாலையில் உலா வந்தது. இந்த சிறுத்தை நடமாட்டம் குறித்த காட்சி அப்பகுதியில் இருந்த சுங்க சாவடியின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. மேலும் அதிகாலையில் அந்த வழியாக வாகனத்தில் சென்றவர்கள் சிலர், சிறுத்தை நடமாடியதை பார்த்து இருக்கிறார்கள்.

bangalore leopard weird

இதனால் பீதியடைந்த வாகன ஓட்டிகள் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் அளித்தனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சிறுத்தை நடமாடியது உறுதியானது. ஆனால் சிறுத்தை எங்கு சென்றது? என்பது தெரியவில்லை. நெட்டூர் டெக்னிக்கல் டிரெயினிங்க் பவுண்டேஷன் அருகே உள்ள பனக் இந்தியா கம்பெனி பகுதிக்குள் சிறுத்தை சென்று இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

மீண்டும் அந்த சிறுத்தை வருவதற்கு வாய்ப்பு இருக்கலாம் என அச்சம் நிலவுகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் இரவு நேரங்களில் உஷாராக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதேநேரம் வனத்துறையினரும் அந்த சிறுத்தையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் கூண்டு வைக்கவும் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சிறுத்தை நடமாட்டத்தால் எலெக்ட்ரானிக் சிட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூரில் சிறுத்தை தென்படுவது இது முதல் முறை கிடையாது. கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ஜிகானி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது. எனவே அதே சிறுத்தைதான் மீண்டும் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் நடமாடியிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக என்டிடிஎப் பிரின்சிபால் சுனில் ஜோஷி கூறுகையில், சுங்க சாவடி கேமராவில் இருந்து எங்களுக்கு வீடியோ கிடைத்தது. அதில் சிறுத்தை சுற்றுச்சுவர் அருகே நடமாடுவது தெரிகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வளாகம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிறுத்தை இல்லை என்பதை வனத்துறையினர் உறுதி செய்து இருக்கிறார்கள். சிசிடிவி கேமரா காட்சிகளின் படி பார்த்தால் சுற்றுச்சுவர் பகுதியில் இருந்து நகர்ந்து செல்கிறது.

எனவே நாங்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பயிற்சி மைய வளாகத்தில் எடுத்துள்ளோம். அனைத்து அறைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து இருக்கிறோம். ஆனால் இதுவரை சிறுத்தை இருப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. காம்பவுண்ட்டிற்கு அடுத்தால் போல் உள்ள பாதையில் சிறுத்தை தென்பட்டது. ஆனால் தற்போது எங்கு உள்ளது என்பது தெரியவில்லை" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+