வீடியோ காலில் டார்ச்சர்.. ராஜினாமா செய்த பிறகு மிரட்டல்! கதறும் பெங்களூர் ஐடி ஊழியர்.. ரொம்ப பாவம்!
பெங்களூர்: இந்த காலத்தில் சில நிறுவனங்கள் தனது ஊழியர்களை மிக மோசமாக நடத்துகின்றன. ஊழியர்களுக்கு மிகக் கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்தி, வேலை வாங்குகின்றன. இவை பல்வேறு விதமான பாதிப்புகளை மக்களிடையே ஏற்படுத்துகின்றன. இதற்கிடையே ஐடி ஊழியர் ஒருவர் தனது வேலையின் அழுத்தம் தாங்க முடியாமல் ராஜினாமா செய்துள்ளார். அவரது போஸ்ட் ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
இப்போது பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களைக் கண்ணியமான முறையிலேயே நடத்துகின்றன. ஆனால் சில நிறுவனங்கள் மட்டும் இன்னுமே தனது ஊழியர்களை மிக மோசமாக நடத்துகின்றன. அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் அழுத்தம் தாங்க முடியாமல் சில மோசமான முடிவுகளை எடுக்கும் சம்பவங்களைக் கூட நாம் பார்த்து இருக்கிறோம்.

பெங்களூர் ஐடி ஊழியர்
அப்படி ஒரு டாக்சிக்கான ஆபீசில் வேலை செய்து வந்த பெங்களூரைச் சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர் தனது கனவு வேலையாக இருந்த போதிலும் அவர் ராஜினாமா செய்துவிட்டார். வேலை செய்ய முடியாமல் அவர் வேலையை விடவில்லை.. ஆபீசில் இருந்த டாக்சிக்கான சூழலே அவரை வேலையை விட வைத்துள்ளது.
வேலை செய்யும் இடம் எப்போதுமே தன்னை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும் என அவர் சாடியுள்ளார். மேலும், பிராஜக்டில் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூட தெளிவாகச் சொல்ல மாட்டார்களாம். இதனால் செய்த வேலையையே பல முறை திரும்பத் திரும்பச் செய்ய வேண்டி இருக்கும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். ஒரு முறை தெளிவான வழிமுறைகள் இல்லாமல் குழப்பியதால் வீடியோ காலில் அழுதுவிட்டதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
திட்டுகள்
என்ன வேண்டும் என்பதைத் தெளிவாகச் சொல்லாததால் தன்னால் வேலை செய்ய முடியாமல் போனதாகவும் அப்போது மேனேஜர் மற்றவர்கள் முன்னிலையில் அவரை அவமானப்படுத்தியதாகவும் குறிப்பிடுகிறார். நள்ளிரவு நேரங்களிலும் கால் வருமாம்.. வேலை முடித்துவிட்டால் அதற்கு வேறு ஒருவருக்குப் பாராட்டு போகும் நிலையில், வேலை நடக்கவில்லை என்றால் மட்டும் திட்டுகள் தங்களுக்கு வரும் எனக் கூறியுள்ளார்.
வீடியோ காலில் அழுகை
இது தொடர்பாக அந்த நபர் தனது லிங்ட் இன் பக்கத்தில், "பெங்களூரில் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் வேலையை விட்டுவிட்டேன்.. சரியாக வேலை செய்யாமல் இல்லை.. மனதளவில் உடைந்து போய்விட்டேன். என்ன வேண்டும் என்பதைக் கூட தெளிவாகச் சொல்லாததால் ஒரு முறை கூகுள் வீடியோகாலில் அழுதே விட்டேன். என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாகச் சொல்ல மாட்டார்கள்.
கேட்டால் நீங்கள் கண்டுபிடியுங்கள் என்பார்கள். நீங்கள் மேனேஜர் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்படவில்லை என்றால் எல்லார் முன்னிலையிலும் அவமானப்படுத்துவார்கள்.. ஒரு கட்டத்தில் பாராட்டு இல்லாவிட்டால் பரவாயில்லை.. அவமானப்படுத்தாமல் இருந்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்.
மேனேஜர் மிரட்டல்
அவரது மேலாளர் நள்ளிரவைத் தாண்டியும் அழைப்பார்.. பிரச்சினைகளைச் சொன்னால் தீர்வு வராது.. மாறாகத் திரும்பக் குறைசொல்வார். ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.. அதன் பிறகாவது மேனேஜர் அமைதியாக இருப்பார் எனப் பார்த்தால்.. முடிஞ்சா வேறு வேலை கண்டுபிடி எவ்வளவு நாள் தாக்குப்பிடிக்கிறாய் என்று பார்க்கலாம் என மிரட்டும் தொனியில் பேசுகிறார்.
இது டாக்சிக் வேலை சூழல். மக்கள் எந்தவொரு கம்பெனியை விட்டும் விலகுவதில்லை. மாறாக, அவர்கள் தங்கள் சுயமரியாதை காக்கவே தங்கள் வேலையை ராஜினாமா செய்கிறார்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications