"இதெல்லாம் பெங்களூரில் மட்டுமே நடக்கும்.." மேம்பால கேப்பில் இளைஞர் செய்த சம்பவம்! மக்கள் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் ஒரு நபர் உயரத்தில் பில்லருக்கு நடுவே தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவிய நிலையில், பலரும் இது குறித்து கேள்வி எழுப்பினர். இதையடுத்து இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உயரத்தில் பில்லரில் அந்த நபர் தூங்கும் வீடியோ இணையத்திலும் டிரெண்டாகி வருகிறது.

இந்தியாவின் ஐடி தலைநகராக பெங்களூர் இருக்கிறது. இதனால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இளைஞர்கள் பெங்களூருக்கு வந்து வசிக்கிறார்கள். அந்த பெங்களூர் நகரில் பல வினோதமான சம்பவங்கள் எப்போதும் நடக்கும். அப்படி நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

Bangalore Flyover Mystery Man Spotted Sleeping Inside Pillar at Jalahalli Cross Netizens shocked

பில்லருக்கு நடுவே

அங்கு ஜலஹள்ளி கிராஸ் பகுதியில் உள்ள மேம்பால பில்லர் ஒன்றின் உள்ளே, ஒருவர் படுத்துத் தூங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் டிரெண்டானது. அந்த வழியாகச் சென்றவர்களிடையே இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாகவே மெட்ரோ பில்லர் அல்லது மேம்பாலத்தில் பில்லர்கள் அமைக்கப்பட்டு, அதன் மேல் தான் மெட்ரோ தடம் அல்லது சாலைகள் இருக்கும். அந்த பில்லருக்கும் மேற்புறத்திற்கும் நடுவே ஒரு சிறிய கேப் இருக்கும். அந்த கேப்பில் தான் இந்த ஆசாமி படுத்துத் தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். அப்பகுதியில் சென்ற சிலர் இதை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

சோஷியல் மீடியா

அந்த சோஷியல் மீடிய பதிவில், "ஜலஹள்ளி கிராஸில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. மேம்பாலத் தூணின் உள்ளே ஒரு நபர் படுத்து இருக்கிறார். இந்த வினோதமான சம்பவத்தைப் பார்த்தவுடனே மக்கள் அங்கு கூடினர். இவ்வளவு குறுகிய இடத்தில் அவர் எப்படி இருக்கிறார் என்பது யாருக்கும் புரியவில்லை. மேலும், அந்த ஆபத்தான இடத்திற்கு அவர் எப்படிச் சென்றார் என்பதும் கூட பலருக்கும் ஆச்சரியமாகவே இருக்கிறது

வெளியே இதைப் பார்க்க மக்கள் கூட்டம் கூடிவிட்ட போதிலும் அந்த நபர் எந்தவொரு சலசலப்பும் இல்லாமல் நீண்ட நேரம் அங்கேயே ஓய்வெடுத்து வந்திருக்கிறார். மேம்பால பில்லர் என்பது தங்குமிடமோ வீடோ அல்ல.. இத்தகைய அமைப்புக்குள் இருப்பது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

நெட்டிசன்கள் கேள்வி

இவ்வளவு கண்காணிப்பு இருக்கும் பகுதியில் ஒரு நபர் எப்படி யார் கண்ணிலும் படாமல் அந்த இடத்தில் நுழைந்தார் என்பது குறித்து பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்தச் சம்பவம், நகர்ப்புறங்களில் வீடு இல்லாதவர்கள் பிரச்சனை அதிகரித்து வருவதையே காட்டுகிறது. மேலும், நகர்ப் புறங்களில் கண்காணிப்பும் எந்தளவுக்கு இருக்கிறது என்பதையும் இது காட்டுவதாக இருக்கிறது.

இந்த வீடியோ சில மணி நேரங்களிலேயே பல லட்சம் வியூஸ்களை பெற்றது. நெட்டிசன்கள் இது தொடர்பாகப் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர், "இது தீவிரமாக ஆராயப்பட வேண்டும். அந்த நபர் உதவி தேவைப்பட்டால்.. அவருக்கு உடனடியாக உதவி வழங்க வேண்டும்.. சும்மா த்ரிலுக்கு அவர் இதைச் செய்திருந்தால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலையிட்ட பெங்களூர் போலீஸ்

நெட்டிசன்கள் பலரும் அந்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். உள்ளூர் அதிகாரிகளை டேக் செய்தும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இது பெரியளவில் டிரெண்டான நிலையில், பெங்களூர் போலீசாரும் அதற்குப் பதிலளித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்த பினியா காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு உத்தரவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+