பெங்களூரில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழை.. கோடை வெயிலுக்கு நடுவே ஜில்லென மாறிய கிளைமேட்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் இன்று பிற்பகலுக்கு மேல் திடீரென கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் கடந்த சில நாட்களாக கோடை வெயிலால் தகித்த பெங்களூர் இன்று மாலை அப்படியே ஜில்லென மாறியது. ஆலங்கட்டி மழையும் கொட்டியது. கனமழை மற்றும் காற்றுடன் கூடிய மழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்த சம்பவங்களும் நடந்தன.

தமிழகம் மட்டுமின்றி கர்நாடக தலைநகர் பெங்களூர் உள்பட பல்வேறு நகரங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பெங்களூரிலும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மதிய நேரங்களில் வீட்டை விட்டு வெளியே செல்லவே பலரும் அச்சப்பட்டனர். ஆனால் இன்று பெங்களூர் உள்பட மாநிலத்தின் சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதன்படி, நேற்று வட கர்நாடக மாவட்டங்களில் மழை பெய்திருந்தது.

Bangalore Heavy Rain Sudden Hailstorm Turns Weather Cool Amid Summer Heat

பெங்களூரில் ஆலங்கட்டி மழை

ஆனால் பெங்களூரில் இன்று காலையில் இருந்து மதியம் வரை வெயில் கொளுத்தியது. அனலாக தகித்த வெப்பத்தால் மக்கள் அவதியடைந்தனர். இதனால் மழை எங்கே பெய்ய போகிறது என்று நினைத்தவர்களுக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக, மாலை 4 மணிக்கு இடி, மின்னலுடன் பெங்களூரில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக பெங்களூர் நகர் முழுவதும் பலத்த சூறைக்காற்று வீசியது.

அத்துடன் நகரில் ஒரு சில பகுதிகளில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. சூறைக்காற்று வீசியதால் நகரில் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து சில இடங்களில் பாதிக்கப்பட்டது. மாநகராட்சி ஊழியர்களும் முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டன. கோடை வெயிலில் சிக்கி தவித்த மக்களுக்கு திடீர் மழை மகிழ்ச்சியை அளித்தது.

ஆனால் இந்த மழையால் சோகமான ஒரு நிகழ்வும் நடைபெற்றுள்ளது. அதாவது சுவர் இடிந்து விழுந்து 7 பேர் பலியாகியுள்ளனர். பெங்களூர் சிவாஜி நகரில் பேரிங் மருத்துவமனை உள்ளது. இது அரசு மருத்துவமனையாகும். இந்த மருத்துவமனையை சுற்றி 8 அடி உயரத்துக்கு காம்பவுண்டு சுவர் உள்ளது. அந்த சுவரை சுற்றி இருக்கும் நடைபாதைகளில் வியாபாரிகள் கடைகளை அமைத்துள்ளனர்.

சில வியாபாரிகள் தங்களது குடும்பத்துடன் அங்கிருந்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில்தான், கனமழையால் பேரிங் மருத்துவமனையின் 8 அடி உயரம் கொண்ட காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளுக்குள் சிக்கி 7 பேர் பலியாகியுள்ளனர். சிலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+