மீண்டும் பெங்களூர்.. சுசிலாவுக்கு இதே வேலை.. அந்த டிரம்முக்குள்ள பார்த்தீங்களா? வெலவெல கே.ஆர்.புரம்
பெங்களூர்: யார் இந்த சுசீலா? பெங்களூர் முழுக்க இதே பரபரப்பாக உள்ளது.. போலீசாரும் தீவிரமான விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்பு, பெங்களூரில் திகில் கொலைகள் நடந்தன.. வெறும் பெண்கள் மட்டுமே அடுத்தடுத்து கொல்லப்பட்டனர்.. அதுவும் ஒரே மாதிரியாக கொல்லப்பட்டனர்... அதுவும் ரயில்வே ஸ்டேஷன்களில் இந்த பெண்களின் உடல்கள் டிரம்களில் கண்டெடுக்கப்பட்டன.

பையப்பனஹள்ளி ரயில்வே ஸ்டேஷன், உட்பட 3 ரயில்வே ஸ்டேஷன்களில் பெண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.. உடல்கள் அழுகிப்போய், நாற்றமெடுத்து, அதற்கு பிறகுதான் போலீசுக்கு தகவல் தரப்பட்டு வரவழைக்கப்பட்டனர்.
என்ன காரணம்: ரயில்வே ஸ்டேஷனில், குப்பைகளை போடுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் பெரிய டிரம்களில் இந்த பிணங்கள் கிடந்தன.. ஆனால், உடல் பாகங்கள் வெட்டப்பட்டிருந்தன.. கை, கால் விரல்கள் மட்டும் துண்டாக வெட்டப்பட்டு, உடலை டிரம்மில் போட்டிருந்தனர்.
கொலைகளை வேறு எங்கேயோ செய்து விட்டு, அதற்கு பிறகு கொலையாளிகள் இங்கு கொண்டுவந்து சடலத்தை டிரம்மில் போட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்பட்டனர். வேறு வேறு நாட்களில் இந்த கொலைகள் நடந்தாலும், அந்த பெண்கள் அனைவருமே 35 வயதுக்கு குறைந்தவர்கள் என்பதுதெரியவந்தது.
ரயில்வே போலீஸ்: ரயில்வே போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஆட்டோ ரிக்ஷாவில் சடலத்தை கொண்டுவருவது உட்பட பல்வேறு தடயங்கள் கிடைத்தன.. ஆனால், கொலையாளிகள் யார் என்று தெரியவில்லை. பெங்களூரில் ஒரே மாதிரி ஸ்டைலில் கொலை நடந்ததால், இந்த கொலைகளை செய்தது, சீரியல் கில்லராக இருக்குமோ என்றுகூட சந்தேகம் கிளம்பியது.
ஆனால், 6 மாதங்களுக்கு முன்பு, இதில் ஒரு கொலை பற்றின துப்பு கிடைத்தது.. பீகாரைச் சேர்ந்த அபார்ட்மெண்ட் செக்யூரிட்டி ஒருவர், அதே அபார்ட்மெண்ட்டில் வசித்து வந்த பீகார் பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்தாராம்.. அதற்கு அந்த பெண் இணங்காததால் அவரை கொன்று டிரம்மில் உடலை அடைத்து, பெங்களூரு ரயில் நிலையத்திற்கு வெளியே வைத்து விட்டு போனது வெளிச்சத்துக்கு வந்தது. இது தொடர்பாக கொலையாளிகள் 3 பேரை கைது செய்திருந்தனர்.
சடலம்: இந்நிலையில், மீண்டும் ஒரு பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு கே.ஆர்.புரத்தில் இந்த கொலை நடந்துள்ளது.. இவரது சடலத்தையும், டிரம்மில் அடைத்துவிட்டு போயிருக்கிறார்கள். இவரது உடலும் துண்டு துண்டாக வெட்டப்பட்டுள்ளது..
கே.ஆர்.புரத்தில் உள்ள நிசர்கா லே-அவுட்டில் வசிப்பவர் சுசீலாம்மா.. இந்த பெண்ணுக்கு 65 வயதாகிறது.. இவர் தன்னுடைய மகள், பேத்தியுடன் வசித்து வந்திருக்கிறார். சுசீலா அடிக்கடி வீட்டிலிருந்து காணாமல் போய்விடுவாராம்.. உடனே இவரை குடும்பத்தினர் தேடி கண்டுபிடிப்பார்களாம். அல்லது சுசீலாவே தன்னுடைய வீட்டுக்கு திரும்பி வந்துவிடுவாராம். எப்போதுமே இது வாடிக்கையாக இருந்துள்ளது.
துர்நாற்றம்: இப்படிப்பட்ட சூழலில், சுசீலா வசித்து வந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த டிரம்மில் துர்நாற்றம் வீசியது.. இதனால், அங்கிருந்த குடியிருப்புவாசிகள் டிரம்மை திறந்து பார்த்தபோது, உள்ளே சுசீலாவின் சடலம் இருப்பதை கண்டு அலறினார்கள். உடனடியாக கே.ஆர்.புரம் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர்.
போலீஸார் விரைந்து வந்து டிரம்மை பார்த்தபோது, சுசீலாவின் கை, கால்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டும், உடல்பகுதி மட்டும் தனியாக இருந்ததாம். சுசீலாம்மாவின் சடலத்தை மீட்டு, போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.. சுசீலாம்மாவின் குடும்பத்தினரிடம் விசாரணை ஆரம்பமானது.
விசாரணை: சுசீலாவை கடந்த சனிக்கிழமைதான் எல்லாரும் கடைசியாக பார்த்தார்களாம்.. வழக்கம்போல் வெளியே செல்பவர், அவராகவே வீட்டுக்கு திரும்பி விடுவார் என்றும் நினைத்தார்கள். அதனால், சனிக்கிழமையிலிருந்து அவரை தேடாமலேயே விட்டுவிட்டார்களாம்.
சுசீலாவை யார் கொன்றார்கள் என்று தெரியவில்லை.. ஆனால், ஒரே மாதிரியாக பெண்கள் கொலை செய்யப்படுவதும், கை, கால்களின் விரல்கள் மட்டும் துண்டிக்கப்பட்டு, உடல்களை டிரம்களில் போட்டு செல்வதும் தொடர்கதையாகி வருகிறது.. போலீசார் இது தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தியிருந்தாலும், பெங்களூர்வாசிகள் குலைநடுங்கி போயிருக்கிறார்கள்..!!












Click it and Unblock the Notifications