Bangalore: பெங்களூரில் நாளை முதல் ஹோட்டல்கள் இயங்காது.. சிலிண்டர் தட்டுப்பாட்டால் உரிமையாளர்கள் முடிவு
பெங்களூர்: சிலிண்டருக்கு தடுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பெங்களூர் முழுவதும் உள்ள ஹோட்டல்கள் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது ஹோட்டல் துறைக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளதாக பெங்களூர் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால், சாதாரண மக்கள், மூத்த குடிமக்கள், மானவர்கள் என ஹோட்டல்களை நம்பி உள்ள பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. 70 நாட்களுக்கு கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படாது என்று மத்திய அரசு கூறியது.

பெங்களூரில் நாளை முதல் ஹோட்டல்கள் மூடப்படும்
ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் மோதல் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு (எல்பிஜி) விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்து இருப்பதால் சர்வதெச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. கத்தார் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்து வரும் எல்பிஜி ஏற்றுமதி வாராந்திர அளவில் 30 சதவீதம் குறைந்துள்ளது.
இதனால், இந்தியாவிலும் சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான் கேஸ் சிலிண்டர் விநியோகம் இறுத்தப்பட்டுள்ளதால் பெங்களூரில் உள்ள ஹோட்டல்கள் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெங்களூர் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் கூறியிருப்பதாவது:-
சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது
சிலிண்டருக்கு தடுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பெங்களூர் முழுவதும் உள்ள ஹோட்டல்கள் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட உள்ளன. வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது ஹோட்டல் துறைக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது. 70 நாட்களுக்கு கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படாது என்று மத்திய அரசு கூறியது.

ஆனால், திடீரென கியாஸ் சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது ஹோட்டல்கள் தொழிலுக்கு பெரும் அடியாக அமைந்துள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்றும் வணிக சிலிண்டர் விநியோக்த்தை மீண்டும் தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ஹோட்டல்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஐடி ஊழியர்கள் பாதிக்கப்படுவர்
சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால், சாதாரண மக்கள், மூத்த குடிமக்கள், மானவர்கள் என ஹோட்டல்களை நம்பி உள்ள பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஐடி ஊழியர்கள் அதிகம் பணியாற்றும் பெங்களூரில் வெளி மாநிலத்தை சேர்ந்த ஏராளான டெக் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் பலரும் ஹோட்டல் உணவையே நம்பியுள்ள நிலையில், பெங்களூர் ஹோட்டல் சங்கம் எடுத்த முடிவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
எரிபொருள் விநியோகம் பாதிப்பு
ஈரான்-அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பிரச்சினை இந்தியாவிலும் எதிரொலித்தது.
கடந்த சனிக்கிழமை எரிவாயு சிலிண்டர் விலை 60 ரூபாய் உயர்த்தப்பட்டது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 50 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், நேற்று முன் தினம் திடீரென எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
-
பெங்களூர் பன்னரகட்டா ரோட்டில் மெட்ரோ ரயில் சேவை.. வெளியான குட்நியூஸ்! செம -
எங்களுக்கு மட்டும் ஆசையா? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு ஏன் தெரியுமா? இன்னமும் 703 ரூபாய் லாஸ் தானாம்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு












Click it and Unblock the Notifications