50 கோடி கொடுத்து எதற்கு நாய் வாங்கினார் பெங்களூர்க்காரர்.. பெரிய பின்னணியே இருக்கிறது
பெங்களூர்: பெங்களூரை சேர்ந்த ஒருவர் கேடபாம்ப் ஒகாமி என்ற அரிய வகை ஓநாய் நாயை சுமார் ரூ. 50 கோடி கொடுத்து வாங்கியது செய்திகளில் வைரலாகியுள்ளது. ஆனால் பெங்களூரைப் பற்றி தெரிந்தவர்களுக்கு இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஏனெனில், பெங்களூர் நகரம் எப்போதுமே செல்ல நாய்களுக்கு சொர்க்கபுரியாகும். இங்குள்ள மக்களின் மனநிலை, விலங்குகளுக்கு உணவு, பராமரிப்பு, மருத்துவ சேவைகள் என அனைத்து வசதிகளும் கிடைப்பது, செல்ல பிராணிகளுக்கு பிறந்தநாள் கொண்டாட்டங்கள், 24 மணி நேர பராமரிப்பு போன்ற சிறப்பு சேவைகளும் இங்கு கிடைக்கின்றன. இதனால், பெங்களூர், இந்தியாவிலேயே Pet Animalகளுக்கான நகரம் என்ற பெயரைப் பெற்றுள்ளது.
சிறப்பு விஷயம்
மராட்ட் ஹாஸ்பிடாலிட்டியின் கார்ப்பரேட் மார்க்கெட்டிங் தலைவர் கிருஷ்ணபிரியா பாலகிருஷ்னன் தனது இரண்டு நாய்கள் பாம்பி மற்றும் லியோவுக்கு தனித்தனியான உணவு, 24 மணி நேர பராமரிப்பு, பிறந்தநாள் கொண்டாட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அளிக்கிறார். அவர் ஆங்கில ஊடகம் ஒன்றிடம் கூறுகையில், "மக்கள் சொல்வார்கள், அடடா, நீங்க அவ்வளவு பணத்தை அவங்களுக்காக செலவழிக்கிறீங்கன்னு. ஆனா எனக்கு தெரிஞ்சு, குழந்தைகள் இருக்கிற என் நண்பர்கள் அவங்க குழந்தைகளுக்கு ABCD கத்துக்க சொல்லி பயங்கரமான பள்ளி கட்டணம் கட்டறாங்க, நாய் மட்டும் என்ன குறைச்சலா" என்கிறார். இந்த கேள்வியை வேறு ஒரு நகரத்திலுள்ள ஒரு பெண் அவ்வளவு ஈஸியாக கேட்க மாட்டார்கள் அல்லவா. அதுதான் பெங்களூரின் செல்ல பிராணி கலாச்சாரம்.

பெங்களூரின் விலங்கு பராமரிப்பு வசதிகள்
பெங்களூரில் விலங்குகளுக்கான பராமரிப்பு மற்றும் சமூக சப்போர்ட் பல நகரங்களை விட அதிகமாக உள்ளது. பிற நகரங்களில் இருந்து வந்து இங்கு தங்கியிருப்போருக்கு அந்த வித்தியாசம் எளிதில் தெரியும். எந்த ஒரு சாலையிலும் நாய்களுக்கான சிறப்பு தீனி கடைகளை இங்கு பார்க்க முடியும். இங்குள்ள மிதமான வானிலை காரணமாக, அனைத்து நாடுகளைச் சேர்ந்த நாய்களையும் செல்ல பிராணிகளாக வளர்க்க முடியும். ஐடி ஊழியர்களின் பரந்த மனதும் செல்ல பிராணிகளை அதிகம் வளர்க்கும் சூழ்நிலைக்கு காரணம். குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து வேலை பார்க்கும் அவர்கள் கையில் பணமும் இருப்பதால் அதை செல்ல பிராணிகளுக்காக செலவிட்டு அன்பை பெறுகிறார்கள். அக்குயிலார் ஸ்டிரேட்டஜிக் சர்வீஸின் சிஇஓ அஞ்சலி பாயிஸ் நாய் மற்றும் மூன்று பூனைகளை வளர்த்து வருகிறார். அவர் கூறுகையில், "ஒரு செல்ல பிராணி பெற்றோராகதான் என்னை கருதிக்கொள்கிறேன். சென்னையில் செல்ல பிராணி வளர்ப்பில் எனக்கு மிக மோசமான அனுபவம் இருந்தது, மும்பையில் கூட கொஞ்சம் கஷ்டப்பட்டேன், ஆனா பெங்களூரில் வித்தியாசமா இருந்துச்சு," என்று குறிப்பிடுகிறார்.
பெங்களூரின் முன்னிலை
2019-ல் நடத்தப்பட்ட Paws சர்வே அறிக்கையின்படி, பெங்களூர் மும்பையை விட விலங்கு நட்பு நகரம் என்று தெரியவந்துள்ளது. 2023-ல் சூப்பர் டெயில்ஸ் நடத்திய ஆய்வில், பெங்களூரின் 55% விலங்கு உரிமையாளர்கள் விலங்கு பராமரிப்பிற்காக மாதம் சராசரியாக ₹3,000 செலவிடுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. இது மும்பை சகாக்களை விட சற்று அதிகம். சூப்பர் டெயில்ஸின் இணை நிறுவனர் வினீத் கண்ணா, இந்த நகரத்தின் செல்ல பிராணிகள் மீதான ஈர்ப்பை இளம் மக்கள் தொகை மற்றும் வளர்ந்து வரும் தொழில் துறைதான் காரணம் என சுட்டிக் காட்டுகிறார்.
டிஜிட்டல் துறை
பெங்களூரில் விலங்கு பராமரிப்பு பரிணாமம் டிஜிட்டல் துறை வரை நீண்டுள்ளது. இங்கு, குறிப்பிடத்தக்க அளவில் விலங்கு தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்கள் உள்ளன. டிராக்ஸன் வெளியிட்ட ஜனவரி 2023 அறிக்கையின்படி, பெங்களூரு 86 விலங்கு தொழில்நுட்ப நிறுவனங்களின் தாயகமாகும். இந்த டிஜிட்டல் முதல் அணுகுமுறைதான் பெங்களூரு புதிய செல்ல பிராணி தொடர்பான யோசனைகளுக்கான சோதனை மைதானமாக கருதப்படுவதற்கான ஒரு காரணம்.
சவால்கள் மற்றும் எதிர்காலம்
பெங்களூர் வீட்டு விலங்குகளுக்கான சிறந்த வசதிகளை வழங்கினாலும், கிரூமிங் போன்ற சேவைகளுக்கான விலைகள் பிற பெருநகரங்களில் உள்ளதை விட கணிசமாக அதிகம் என்று அஞ்சலி பாயிஸ் சுட்டிக்காட்டுகிறார். மேலும், நகரத்தின் அடிப்படை கட்டமைப்பு பிரச்சினைகள் விலங்குகள் மற்றும் அவற்றின் உரிமையாளர்களின் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கிறது என்று அவர் வாதிடுகிறார். செல்ல பிராணி பராமரிப்பிற்கான மையமாக நகரம் தொடர்ந்து வளர்ந்து வருவதால், சில சவால்களும் உள்ளன. இருப்பினும், செல்ல பிராணிகளை நேசிக்கும் சமூகத்தின் கட்டமைப்பு, எப்போதுமே செல்ல பிராணிகளுக்கு பெங்களூர்தான் செல்ல நகரம் என்பதை சுட்டிக்காட்டுகிறது.
-
சிறைக்கு தள்ளப்படும் Byjus ரவீந்திரன்.. பெங்களூரை கலக்கிய Byju's நிறுவனருக்கு கெட்ட காலம்! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
இந்திய டெக் ஊழியர்களை கதறவிட்ட Meta.. 3 பிரிவில் கண்ணை மூடிக்கொண்டு பணிநீக்கம்.. எங்குபோய் முடியுமோ -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications