பெங்களூர் கேஜிஎஃப் பாபு.. அமிதாப் பச்சன், அமீர்கானிடம் வாங்கிய பல கோடி கார்.. வாயை பிளக்க வைத்த வரி
பெங்களூர்: பெங்களூருவில் வசித்து வருபவர் கே.ஜி.எஃப். பாபு முன்னாள் காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஆவார். பிரபல அரசியல்வாதியான இவர் பெரிய தொழில் அதிபர் ஆவார். இவருக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளன. ஜேஜிஎப் பாபு அமிதாப் பச்சன் மற்றும் அமீர்கானிடம் இருந்து தலா ஒரு ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை பல கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருந்தார். அந்த கார்களுக்கு வரியாக மட்டும் சுமார் 38 லட்சம் வரியாக மட்டும் கட்டியிருக்கிறார். அவரது காரை பறிமுதல் செய்ய அதிகாரிகள் போன போது, வரியை கட்டினார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வசித்து வருபவர் கே.ஜி.எஃப். பாபு. தொழில்அதிபரான இவருக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்துகள் உள்ளன. முன்னாள் காங்கிரஸ் கட்சி நிர்வாகியான இவர்,கே.ஜி.எஃப். தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டதால், கே.ஜி.எஃப். பாபு என்று அழைக்கப்படுகிறார்.

கேஜிஎப் பாபு யார்
இவரது உண்மையான பெயர் யூசுப் ஷெரீப். ரியல் எஸ்டேட் துறையில் பிரபலம் ஆவார். இவருக்கு ரோல்ஸ் ராய்ஸ் உட்பட பல சொகுசு கார்கள் உள்ளன. இவர் 2023 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 80 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது என்று கூறியதால், கட்சியின் தலைமை இவர் மீது ஆக்ஷன் எடுத்து ஓரம் கட்டியது.
அமிதாப் பச்சன், அமீர்கான் கார்கள்
கேஜிஎஃப் பாபு கடந்த 2019 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சன் மற்றும் அமீர்கானிடம் இருந்து தலா ஒரு ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை பல கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருந்தார்.அந்த 2 சொகுசு கார்களும், மகாராஷ்டிரா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டவை ஆகும். ஆனால் அதே மகாராஷ்டிரா மாநில பதிவெண்ணுடன் அவர் பெங்களூருவில் அந்த கார்களை ஓட்டி வந்தார்.
கேஜிஎப் பாபு கார்கள்
அந்த கார்களுக்கு கே.ஜி.எஃப். பாபு வரி செலுத்தாமல் இருந்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. மேலும் இந்த காரின் பதிவு அவரது பெயருக்கு மாற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆகஸ்ட் 2021 இல், சாலை வரி மீறல்களுக்காக இந்த கார் ஆர்டிஓ அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இப்போது, வரி ஏய்ப்பு குற்றச்சாட்டின் பேரில் ஆர்டிஷ குழு மீண்டும் ஒரு முறை சோதனை நடத்தி அதிரடி ஆக்ஷன் எடுத்தது.
கதவை திறக்கவில்லை
வசந்த் நகரில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் காலையில் ஆர்டிஓ இணை ஆணையர் ஷோபா தலைமையில் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கொண்ட குழுவினர் சென்றனர். சிறிது நேரம் கே.ஜி.எஃப். பாபு முன்பக்க கதவை திறக்கவில்லை. பின்னர் சிறிது நேரம் கழித்து கதவை திறந்ததும் உள்ளே சென்ற அதிகாரிகள், மகாராஷ்டிரா பதிவெண் கொண்ட சொகுசு கார்களை பெங்களூருவில் ஓட்டி வருவதற்கு வரி செலுத்தும்படி கூறினார்கள்.
அதிகாரிகள் விளக்கம்
அதாவது இந்த கார்கள் கர்நாடகாவில் ஓடினாலும், அவை பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே மேலும் மாநில சாலை வரி செலுத்தப்படவில்லை.. அதாவது கர்நாடக மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, ஒரு வருடத்திற்கும் மேலாக மாநிலத்தில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் உள்ளூர் வரியைச் செலுத்த வேண்டும். இதுபற்றி அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
38 லட்சம் வரி
இதை கேட்ட கேஜிஎஃப் பாபு, தனது கார்களுக்கு வரி கட்டப்பட்டுள்ளதாக கூறி அதிகாரிகளுடன் ஆவேசமாக பேசினார். பின்னர் ஒரு வழியாக அதிகாரிகளின் கேள்விகளை புரிந்து கொண்ட ஜேஜிஎஃப் பாபு, வரி செலுத்த சம்மதித்தார். அதன்படி, அமீர்கானிடம் வாங்கிய காருக்காக ரூ.19 லட்சத்து 73 ஆயிரமும், அமிதாப் பச்சனிடம் இருந்து வாங்கிய காருக்காக ரூ.18 லட்சத்து 53 ஆயிரத்தையும் காசோலை மூலமாக கே.ஜி.எஃப். பாபு செலுத்தினார்.












Click it and Unblock the Notifications