பெங்களூர் கோவில் திருவிழாவில் திசை மாறிய திருமணமான ஹரிணி.. 17 முறை.. மனசாட்சியே இல்லாத இன்ஜினியர்
பெங்களூர்: பெங்களூர் கெங்கேரி அருகே ஹரிணி என்ற பெண், திருமணம் ஆகி கணவன் மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். ஹரிணி கெங்கேரியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் 25 வயதாகும் இளைஞருடன் பழகி உள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய கள்ளக்காதலாக மாறியது. இந்த கள்ளக்காதலை ஒரு கட்டத்தில் வேண்டாம் என்று விலக முயன்ற பெண்ணுக்கு நடந்த சம்பவம், மொத்த பெங்களூரையும் ஆடிப்போக வைத்துள்ளது.
பெங்களூரு கெங்கேரி அருகே 36 வயதாகும் ஹரிணி என்பவருக்கு திருமணமாகி தாசேகவுடா என்ற கணவரும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். நன்றாக போய் கொண்டிருந்த ஹரிணியின் வாழ்க்கை பயணம் கோயில் திருவிழாவில் திசை மாறி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கெங்கேரியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் 3-வது நபர் மூலமாக ஹரிணிக்கும், தலகட்டபுராவை சேர்ந்த யசஷ் (25) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது 2 பேரும் தங்களது செல்போன் எண்ணை பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள்.

ஓயோ மூலம் ரூம் புக்கிங்
அதன்பிறகு, 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி நண்பர்களாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. ஓயோ மூலம் ஓட்டலில் ரூம் புக்கிங் செய்து 2 பேரும் அடிக்கடி உல்லாசமும் அனுபவித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. மனைவி ஹரிணியின் கள்ளக்காதல் ஒரு கட்டத்தில் தாசேகவுடாவுக்கு தெரியவந்தது.. அவரும் ஹரிணியை கடுமையாக கண்டித்தார்.
செல்போனை பிடுங்கினார்
மேலும் ஹரிணியிடம் இருந்து செல்போனையும் அவர் வாங்கி வைத்து கொண்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஹரிணியை அவரது காதலன் யசஷால் தொடர்பு கொள்ள முடியாமல் போனது. பின்னர் நடந்த சம்பவங்களுக்கு தனது கணவரிடம் ஹரிணி மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த வாலிபருடன் பேச மாட்டேன் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். இதையடுத்து, ஹரிணியிடம், தாசேகவுடா செல்போனை கொடுத்துள்ளார்.
ஓட்டலில் உல்லாசம்
ஆனாலும் கள்ளக்காதலன் யசஷ் உடனான தொடர்பை கைவிட முடியாததால், அவரை ஹரிணி செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த ஜூன் 6-ந் தேதி கெங்கேரி அருகே பூர்ணபிரஜா லே-அவுட்டில் உள்ள தனியார் ஓட்டலில் இவரும் சந்தித்து பேசுவதற்கு 2 பேரும் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. யசஷ் அந்த ஓட்டலில் அறை முன்பதிவு செய்திருக்கிறார். கடந்த 6-ந் தேதி 2 பேரும் ஓட்டலுக்கு சென்றுள்ளனர். அங்கு வைத்து 2 பேரும் உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.

17 முறை தாக்குதல்
அப்போது தன்னிடம் இருந்து திடீரென விலகி இருந்தது ஏன்? என்பது குறித்து ஹரிணியிடம் யசஷ் கேட்டு சண்டை போட்டாராம். இந்த விவகாரம் தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த யசஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஹரிணியை கண்மூடித்தனமாக 17 முறை குத்தியாக கூறப்படுகிறது. இதில், சம்பவ இடத்திலேயே ஹரிணி உயிரிழந்தார்.
ஓட்டல் அறையில் ஹரிணி
பின்னர் ஓட்டலில் இருந்து யசஷ் தப்பிச் சென்றுவிட்டார். ஆனால் யசஷ் முன்பதிவு செய்த அறை நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்த காரணத்தால், சந்தேகம் அடைந்த ஊழியர்கள், நேற்று முன்தினம் காலையில் கதவை திறந்து பார்த்தார்கள். அப்போ ஹரிணி கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி உடனடியாக போலீசாருக்கு ஓட்டல் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து ஹரிணியின் உடலை கைப்பற்றி விசாாித்தனர். அப்போது ஹரிணியை அவரது கள்ளக்காதலன் யசஷ் தான் கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து யசஷை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications