Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரெஸ்ட் ரூம் பயன்படுத்த கட்டுப்பாடு.. கெடுபிடி காட்டும் பெங்களூர் "மால்.." நெட்டிசன்கள் கொந்தளிப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கியவர்களுக்கு மட்டுமே தரைதளத்தில் உள்ள டாய்லட் பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும் என பெங்களூரில் உள்ள பிரபல மால் ஒன்றில் கெடுபிடி காட்டப்படுவதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. பெங்களூர் மாலின் இந்த செயலுக்கு நெட்டிசன்கள் பலரும் தங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

பெங்களூரில் உள்ள பிரபல மால் ஒன்றில், டாய்லெட் பயன்படுத்துவதற்கு அனைவருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை எனவும் ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கும் மேல் பொருட்கள் வாங்கியதற்கான பில் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாகவும் நெட்டிசன் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். சமூக வலைத்தளத்தில் நெட்டிசன் ஒருவர் பதிவிட்ட இந்த பதிவு இணையத்தில் அதிகம் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

bangalore mall weird

நாட்டின் ஹைடெக் சிட்டியான பெங்களூரின் ஒயிட்ஃபீல்டு பகுதியில் தனியார் வணிகவளாகம் (மால்) ஒன்று உள்ளது. இந்த மாலின் தரை தளத்தில் உள்ள ரெஸ்ட் ரூமிற்கு விஐபி அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதை பயன்படுத்த வரும் கஸ்டமர்கள் ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கியதற்கான பில் காட்டினால் மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும் ரெட்டிட் சமூக வலைத்தளத்தில் நெட்டிசன் ஒருவர் தன் ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார்.

அந்த மாலுக்கு சென்று விட்டு தரை தளத்தில் உள்ள ரெஸ்ட் ரூம் செல்ல முயன்ற போது அங்கிருந்த நபர், அதை பயன்படுத்த அனுமதி மறுத்துவிட்டதாகவும் இதனால், மேல் தளத்தில் உள்ள ரெஸ்ட் ரூமிற்கு மீண்டும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அங்குள்ள ரெஸ்ட் ரூமும் சுத்தமானதாக இல்லை. முறையான பராமரிப்பு இன்றி இருந்தது. என்னை போல பலரும் திருப்பி அனுப்பப்பட்டார்கள். மிகவும் மோசமான அனுபவமாக அது இருந்தது.

அவசர நேரத்தில் பயன்படுத்தக் கூடிய அளவிலான ரெஸ்ட் ரூமை தேடுவது மிகவும் வேதனையான விஷயம்" என்று பதிவிட்டுள்ளார். இது போன்ற பாகுபாட்டை பின்பற்றுவது சட்ட ரீதியாக செல்லத்தக்கதுதானா? தேவையற்ற சமுதாய பிளவை ஏற்படுத்தும் விதமாக உள்ளது எனவும் தனது ஆதங்கத்தை கொட்டி தனது பதிவில் கூறியிருந்தார்.

இவரது பதிவுக்கு நெட்டிசன்கள் பலரும் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், இது நூறு சதவிகிதம் உண்மை. அந்த மாலில் ஒரு பெண் பாதுகாவலர் நின்று கொண்டு ரெஸ்ட் ரூம் செல்பவர்களிடம் பணம் கேட்பதோடு, சில பாஸ்களையும் கேட்கிறார்கள். அங்கு இருப்பது தங்க டாய்லட்டா? அல்லது வேறு எதுவும் இருக்கிறதா? சாதாரண மக்களிடம் இருந்து மறைத்து வைக்கும் அளவுக்கு அங்கு என்ன இருக்கிறது? எனக் கேட்டு இருந்தார்.

மற்றொரு நெட்டிசன் கூறுகையில், "2024 ல் இப்படி எல்லாம் நடக்கிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை.. அடுத்து என்ன விஐபி எலவேட்டரா?" என்றார். மேலும் சில நெட்டிசன்கள் கூறுகையில், "அடிப்படை வசதிகளை பெற அனைவருக்கும் உரிமை உள்ளது. இது முற்றிலும் பாரபட்சமான நடவடிக்கை" என்று பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+