"ஓநாய் நாய்.." ரூ.50 கோடி கொடுத்து வாங்கிய பெங்களூர் இளைஞர்! கிட்ட போனால் ஒரு எலும்பு தேறாது
பெங்களூர்: பெங்களூரை சேர்ந்த ஒருவர் விலையுயர்ந்த மற்றும் அரிய வகை நாய் ஒன்றை வாங்கியுள்ளார். கேடபாம்ப் ஒகாமி என்ற அரிய வகை ஓநாய் நாயை அவர் 5.7 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 50 கோடி) கொடுத்து வாங்கியுள்ளார். இந்த நாய்க்கு ஏன் இவ்வளவு விலை.. ஏன் இது அரிதான நாயாகக் கருதப்படுகிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்த காலத்தில் நாய்களை வாங்கி வளர்க்கப் பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அரிய வகை நாய்களை வாங்கப் பலருக்கும் ஆர்வம் இருக்கிறது. அப்படி தான் பெங்களூரை சேர்ந்த ஒருவர் தனித்துவமான நாய் ஒன்றை ரூ.50 கோடி கொடுத்து வாங்கியுள்ளார்.

ஓநாய் நாய்
இந்த தனித்துவமான நாய் என்பது காட்டில் இருக்கும் ஓநாய் மற்றும் காகசியன் ஷெப்பர்ட் இன நாய்க்கும் இடையே பிறக்கும் கலப்பின நாயாகும். இதுபோல ஓநாய்- நாய் இடையே நாய் பிறப்பது ரொம்பவே அரிதாகும். இதன் காரணமாகவே இது உலகின் மிகவும் விலையுயர்ந்த நாய்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதைத் தான் பெங்களூருவைச் சேர்ந்த எஸ். சதீஷ் சுமார் ரூ.50 கோடி கொடுத்து வாங்கியுள்ளார். சதீஷ் ஏற்கனவே சுமார் 150க்கும் மேற்பட்ட வெவ்வேறு இன நாய்களை வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "இந்த நாயைக் குட்டியாக வாங்கும் போதே எனக்கு சுமார் 50 கோடி செலவானது. எனக்கு நாய்கள் மீது தனி பிரியம் இருக்கிறது. தனித்துவமான நாய்களை வளர்க்க விரும்புகிறேன். வித்தியாசமான இனங்களை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன்" என்றார்.
8 மாத குட்டி
இவர் வளர்க்கும் ஓநாய் நாயான கேடபாம்ஸ் ஒகாமி அமெரிக்காவில் பிறந்துள்ளது. அதை அமெரிக்காவில் இருந்து வாங்கியுள்ளார். இந்தளவுக்கு அதிகமாகச் செலவிட இதுவும் ஒரு முக்கிய காரணமாகும். கேடபாம்ஸ் ஒகாமியை பார்க்க ஏதோ பெரிய ஆள் மாதிரி இருக்கும். ஆனால், அது வெறும் 8 மாத குட்டியாம். அதற்குள் பல கிலோ எடையில் கம்பீரமாக இருக்கிறது கேடபாம்ஸ் ஒகாமி. நாய் ஆரோக்கியமாக வளர வேண்டும் என்பதற்காக கேடபாம்ஸ் ஒகாமிக்கு பச்சை கறியைத் தான் சதீஷ் போடுகிறாராம்.
பணம் சம்பாதிப்பது எப்படி
தினசரி 3 கிலோ வரை கறியை மட்டும் கேடபாம்ஸ் ஒகாமி சாப்பிடுவதாகக் கூறுகிறார். இந்த நாய்க்குட்டியை சதீஷ் கடந்த பிப்ரவரி மாதம் வாங்கியுள்ளார். இவ்வளவு கோடி கொடுத்து வாங்கியுள்ளாரே இதை வைத்து என்ன செய்வார் என்ற கேள்வி உங்களுக்கு வரும். இதை அவர் நாய்கள் ஷோக்களுக்கு அழைத்துச் சென்று பணம் சம்பாதிப்பதாக சதீஷ் கூறுகிறார். இதற்கு 30 நிமிடங்களுக்கு $2,800 (சுமார் ரூ.2.41 லட்சம்) முதல் ஐந்து மணி நேரத்திற்கு $11,700 (சுமார் ரூ.10 லட்சம் ) கட்டணமாகவும் வசூலிக்கிறாராம்.
சதீஷ் மேலும் கூறுகையில், "இந்த நாய்கள் அரிதானவை என்பதாலேயே நான் பெரிய தொகையைச் செலவிட்டேன். மேலும், மக்கள் எப்போதும் இந்த வகை நாய்களைப் பார்க்க ஆர்வமாக இருப்பதால் எனக்கு போதுமான பணம் கிடைக்கிறது.. நாய்களுடன் செல்ஃபிகள் மற்றும் போட்டோக்களை மக்கள் எடுக்க ஆர்வம் காட்டுகிறார்கள். சினிமா நடிகரை விட எனது நாய்க்கு அதிக கூட்டம் வருகிறது. அதி கவனத்தை எங்களால் ஈர்க்க முடிகிறது" என்கிறார்.
ஒகாமி ஷெப்பர்ட்
இது ஒகாமி ஷெப்பர்ட் இனத்தின் ஒரு பகுதி என்கிறார்கள் வல்லுநர்கள். மேலும், இந்த வகை நாய்களுக்கு இயல்பாகவே தங்கள் உரிமையாளரைப் பாதுகாக்க வேண்டும் என்ற உள்ளுணர்வு இருக்கும். அதீத புத்திசாலித்தனம் கொண்ட நாயாகும். பயிற்சி இல்லாதவர்கள் இந்த வகை நாயை வாங்குவது சொந்தமாகப் பிரச்சினையை வாங்கிக் கொள்வதற்குச் சமமாகும்.
7 ஏக்கர் பண்ணையில் வளரும் நாய்கள்
இந்த கேடபாம்ஸ் ஒகாமி மட்டுமின்றி பல அரிய வகை நாய்களை சதீஷ் வளர்க்கிறார். குறிப்பாகக் கடந்தாண்டு அவர் $3.25 மில்லியன் (சுமார் ரூ.28 கோடி) கொடுத்து ஒரு அரிய சௌ சௌ நாயை வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோல பல அரிய நாய்களை வாங்கும் சதீஷ் அதைத் தனது ஏழு ஏக்கர் பண்ணையில் வைத்து நன்கு பராமரிக்கிறார். ஒவ்வொரு அரிய வகை நாய்க்கும் 20 அடிக்கு 20 அடி தனி அறையும் இருக்கிறதாம்.
-
பெங்களூரில் நாளை மாபெரும் போராட்டம்.. தமிழர்களை தமிழில் அழைத்த காக்ரோச் ஜனதா பார்ட்டி சௌரவ் தாஸ்! -
மூழ்கடிக்கப்படும் ரூ.63,000 கோடி.. கடலுக்கு அடியில் அமையும் 73,000 டன் பிரம்மாண்டம்! என்ன மேட்டர் -
போலீசாருக்குப் பயந்து ஓடி.. நேராக முதலையிடம் மாட்டிய நபர்.. ஒரே கடியில் கையை கடித்து துப்பிய முதலை -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு












Click it and Unblock the Notifications