பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெங்களூரை உலுக்கிய சத்தம்.. பூகம்பம் இல்லை, மிராஜ் விமானம் பறக்கவில்லை.. பரபர பின்னணி இதுவா?

Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூர் நகர மக்களை பீதிக்குள்ளாக்கியுள்ளது ஒரு பேரொலி. இன்று மதியம் வெளியான அந்தப் பேரிரைச்சல் நகர மக்களை நடுக்கத்திற்கு உள்ளாக்கிவிட்டது. இந்த சத்தம் ஏன் எழுந்தது, என்பது பற்றிய பல்வேறு தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

Recommended Video

    பெங்களூரை உலுக்கிய சத்தம்.. பரபர பின்னணி இதுவா?

    இன்று மதியம் சுமார் 1 மணி 20 நிமிடம் அளவுக்கு என்ற சப்தம் டமால் என்ற ஒலியுடன் பெங்களூரில் வெளிப்பட்டது. ஏதோ ஒரு பகுதியில் மட்டும் இந்த ஒலி கேட்கவில்லை. ஒரே நேரத்தில், பல்வேறு பகுதிகளிலும் இந்த ஒலி உணரப்பட்டது.

    கிழக்கு பெங்களூர் பகுதியான, கே.ஆர்.புரம் துவங்கி இந்திரா நகர், கோரமங்களா, ஒயிட்பீல்டு, பன்னேருகட்டா சாலை, பொம்மனஹள்ளி, பேகூர், எலக்ட்ரானிக் சிட்டி என சம்பந்தமே இல்லாத தொலைதூர பகுதிகளிலுள்ள மக்களும் ஒரே நேரத்தில் இந்த சத்தத்தை உணர்ந்துள்ளனர்.

    குறிப்பாக கே.ஆர்.புரம் பகுதியில் தான் இந்த ஒலியின் அளவு மிக அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து உடனடியாக பத்திரிகையாளர்கள் மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவை தொடர்பு கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். விரைவில் பதில் அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

    சென்னையில் கொரோனா கிடுகிடு உயர்வு... எங்கு எவ்வளவு பாதிப்பு.. வெளியானது லிஸ்ட்சென்னையில் கொரோனா கிடுகிடு உயர்வு... எங்கு எவ்வளவு பாதிப்பு.. வெளியானது லிஸ்ட்

    எப்படி இருந்தது சத்தம்

    எப்படி இருந்தது சத்தம்

    டிரான்ஸ்பார்மர் வெடித்தால் எப்படி சத்தம் வருமோ அது போன்ற சத்தம் இது என்கிறார்கள் நகர மக்கள். இதற்கு முன்பு இதுபோன்ற ஒரு சத்தத்தை கேட்டதே கிடையாது, என்று நடுக்கத்தோடு தெரிவிக்கிறார்கள். இந்த சத்தம் மிகவும் வித்தியாசமாக இருப்பதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். வாழ்க்கையிலேயே இப்படி ஒரு சத்தம் கேட்டதில்லை என்கிறார்கள் அவர்கள்.

    வெடிகுண்டு


    பெங்களூரிலுள்ள பல்வேறு மக்களும், தங்களுக்குள் வாட்ஸ்அப் குரூப்பில் இதுகுறித்துதான் பீதியோடு பேசி வருகிறார்கள். தொலைக்காட்சி சேனல்களுக்கும் தொலைபேசியில் அழைப்புவிடுத்து பேசி வருகிறார்கள். பலரும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து பார்த்ததாக கூறுகிறார்கள்.
    வெடிகுண்டு வெடித்தது போல சத்தம் இருந்ததாகவும், வளைகுடாவில், அமெரிக்கா குண்டு வீசியபோது இதுபோன்ற சத்தத்தை தான் கேட்டதாக பிரகாஷ் என்ற பெங்களூர்வாசி கன்னட தொலைக்காட்சி சேனலுக்கு தெரிவித்தார். அவரது குரலிலும் நடுக்கம் இருந்தது. சிலரோ, வீட்டு கண்ணாடி உடைந்ததாக தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து விமானப்படையிடமும் நகர காவல்துறை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டுள்ளது. இந்த சம்பவம் பெங்களூரில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    சோனிக் பூம்

    சோனிக் பூம்

    இதனிடையே மிராஜ் போன்ற போர் விமானங்கள் பறந்ததால் ஏற்பட்ட சத்தமாக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்தது. இதை சோனிக் பூம் (sonic boom) என்று சொல்வார்கள். ஒலியின் வேகத்தை விட ஒரு பொருள் காற்றில் வேகமாக பயணித்தால் எழக்கூடிய ஒலி, சோனிக் பூம் என்று அழைக்கப்படும்.
    சோனிக் பூம் பயங்கர ஒலி ஆற்றலை உருவாக்கும். இந்த சத்தம் இடி போன்ற ஒலியை ஏற்படுத்தும்.

    விமானம் இயங்கவில்லை

    விமானம் இயங்கவில்லை

    எனவே, இந்த சந்தேகத்தின் அடிப்படையில், பெங்களூரில் உள்ள எச்ஏஎல் அமைப்பை நிருபர்கள் தொடர்பு கொண்டனர். ஆனால், அவர்கள் எந்தவிதமான விமானமும் இன்று இயங்கவில்லை என்று தெரிவித்தனர். அதே போன்று, மாநிலத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை அமைப்பின் அதிகாரிகள், பெங்களூரு நகரில் பூகம்பம் ஏற்படவில்லை என்றும் எனவே இந்த சத்தத்திற்கும் பூகம்பத்திற்கும் தொடர்பு இல்லை என்று தெரிவித்தனர்.

    வளிமண்டல வெடிப்பு

    இந்த நிலையில்தான் வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் சிலர் இது பற்றி கூறுகையில், அம்பன் புயல் தெற்கு வங்க கடலில் இருந்து வடக்கு நோக்கி நகர்ந்தபடி இருக்கிறது. மேற்கு வங்கத்தை அது நெருங்கிவிட்டது. எனவே பெங்களூரு உள்ளிட்ட தென்னிந்திய நிலப்பரப்பின் மேலே உள்ள வளிமண்டலத்தில் வெற்றிடம் உருவாகி உள்ளது. இந்த வெற்றிடத்தின் காரணமாக வளிமண்டல வெடிப்பு ஏற்பட்டு, இதுபோன்று சத்தமாக எதிரொலித்து இருக்கும். எனவே அச்சப்படத் தேவையில்லை என்று தெரிவிக்கிறார்கள்.

    English summary
    Bangalore people feel a loud rumble and vibrations for a few seconds in Bangalore around 1:20 pm, It sounded like an explosion.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X