பெங்களூரில் நேற்று எதிர்க்கட்சிகள் கூட்டம்! இன்று குண்டுவெடிப்பு சதி.. கைதான 5 பேரும் பயங்கரவாதிகளா?
பெங்களூர்: பெங்களூரில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியதாக 5 பேரை பெங்களூர் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நேற்றைய தினம் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்த குண்டுவெடிப்பு சதி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு: பெங்களூர் நகரில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்த சதி திட்டம் தீட்டியதாக சையத் கஹெல், உமர், ஜானித், முதாசிர், ஜாஹித் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 5 பேரும் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுகிறது. இவர்கள் 5 பேரும் 2017ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அங்கு அவர்களுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கலாம் என விசாரணையில் தகவல் கிடைத்தது.
கைதான 5 பேரிடம் இருந்து வெடிப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பெங்களூரில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியிருக்கலாம் என தெரிகிறது. வேறு எங்கெல்லாம் இவர்களது டீம் இருக்கிறார்கள் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஏற்கெனவே வேறு எங்காவது குண்டு வெடிப்பை நிகழ்த்த சதி செய்துள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications