பெங்களூரில் 3வதும் பெண் குழந்தை.. கணவன் செயலால் ஆடிப்போன மனைவி
பெங்களூர்: பெங்களூர் நகர் பகுதியில் வசித்து வருபவர் வரலட்சுமி. இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ராஜஸ்தானை சேர்ந்த ஹாரிஷ் என்பவருக்கும் காதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு முதல் இரண்டு குழந்தைகளும் பெண் குழந்தைகள் ஆவார். 3வதாக ஆண் குழந்தை பிறக்கும் என ஹரிஷ் நினைத்தாராம். ஆனால் 3-வதும் பெண் குழந்தை பிறந்ததால் காதல் மனைவியை பிரிந்து சென்றுவிட்டாராம் தனியார் நிறுவன மேலாளர். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
பெங்களூர் நகர் பகுதியில் வசித்து வரும் வரலட்சுமி என்பவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்சாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ராஜஸ்தானை சேர்ந்த ஹாரிஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதில் ஹாரிஷ் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை மேலாளராக வேலை செய்து வந்தார்,

மேலும் 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் 2 பேரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து, தங்களது காதலை வீட்டில் தெரிவித்துள்ளனர். இதில் 2 பேரின் பெற்றோரும் காதலுக்கு மறுப்பு தெரிவித்தனர். இதனால் அவர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர்.
ஆரம்பத்தில் இவர்களது திருமண வாழ்க்கை சந்தோசமாக இருந்தது. மேலும் இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளது. ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்ட ஹாரிஷ், பெண் குழந்தைகள் பிறந்ததால் மனைவி வரலட்சுமியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தாராம். இந்தநிலையில் வரலட்சுமி 3-வதாக கர்ப்பம் ஆனார். இது ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் என்று ஹாரிஷ் ஆசைப்பட்டு வந்துள்ளார். பின்னர் வரலட்சுமி கடந்த மாதம் பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு 3-வதும் பெண் குழந்தை பிறந்தது.
இதில் ஆத்திரம் அடைந்த ஹாரிஷ் மனைவியிடம் தகராறு செய்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி வேறு ஒரு பெண்ணிடம் தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வரலட்சுமி 3 பெண் குழந்தைகளையும் வைத்து கொண்டு படிக்க வைக்கவும், வீட்டு செலவுகளுக்கும் பணம் இல்லாமல் தவித்து வந்துள்ளார்.
மேலும் கணவர் வேறு ஒரு பெண்ணிடம் வசித்து வருவது குறித்து அறிந்த வரலட்சுமி மகளிர் போலீசில் 3-வதும் பெண் குழந்தை பிறந்ததால் கணவர் தன்னை விட்டு பிரிந்து வேறு பெண்ணுடன் வசித்து வருவதாக புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
கரப்பான் பூச்சி கட்சியுடன் கைகோர்க்கும் பிரகாஷ் ராஜ்! கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ்! பெங்களூரில் ஷாக் -
அமைச்சர் பதவிக்கு குட்பை? பெங்களூர் வளர்ச்சி துறையின் பல்லை பிடுங்கிய டிகே சிவக்குமார்.. கிருஷ்ணபைரே கவுடா அதிருப்தி -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி












Click it and Unblock the Notifications