Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெங்களூர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் துப்பு துலங்கியது.. போலீசுக்கு கிடைத்த முக்கிய தடயம்?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் ஹோட்டல் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளி பற்றி துப்பு துலங்கி இருப்பதாகவும் முக்கிய ஆதாரங்கள் கிடைத்து இருப்பதால் விரைவில் குற்றவாளி பிடிபடுவது உறுதி என்று கர்நாடக அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள பிரபல உணவகம் ராமேஸ்வரம் கஃபே. இந்த உணவகத்தின் ஒயிட் லீட் கிளையானது 80 அடி சாலையில் அமைந்திருக்கிறது. இந்த கஃபேயானது நேற்று வழக்கம் போல் செயல்பட்டு வந்தது. அப்போது மதிய நேரத்தில் கஃபேயில் இருந்து மர்ம பொருள் ஒன்று திடீரென வெடித்து சிதறியது. இதனால் ஹோட்டல் முழுவதும் புகை மண்டலமாக மாறியது.

Bengalore Rameshwaram Cafe blast We are exploring every angle says Karnataka minister

ஹோட்டலில் இருந்த கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. தரையில் பதிக்கப்பட்டு இருந்த கிரானைட் கற்களும் உடைந்து சிதறின. ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். குண்டுகள் வெடித்த சம்பவத்தில் ஒரு பெண் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். பெங்களூர் ஓட்டலில் நடத்தப்பட்ட தாக்குதல் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் கர்நாடகா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8 தனிப்படைகள்: இந்த சம்பவம் குறித்து பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள். சந்தேகத்தின் அடிப்படையில் 4 பேரை கைது செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். குண்டுவெடிப்பு நடந்து 3 நாட்கள் ஆகியும் இன்னும் குற்றவாளி கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில், பெங்களூர் ராமேஸ்வரம் கபே ஹோட்டலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன், காவல்துறை அமைச்சர் பரமேஸ்வர் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பரமேஸ்வர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெங்களூர் ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. பல்வேறு கோணங்களில் இந்த விசாரணை நடக்கிறது. குண்டுவெடிப்பு நடந்த ஹோட்டலில் இருந்து கைப்பற்றப்பட்ட வெடிப்பொருட்களை தொழில்நுட்ப முறைப்படி ஆய்வு நடத்தி வருகின்றனர்.

வளர்ச்சி பிடிக்காத காரணத்தால்: இந்த குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட மர்மநபர் குறித்த முக்கிய ஆதாரம், தகவல்கள் காவல்துறைக்கு சிக்கி உள்ளது. துப்பு துலங்கி உள்ள நிலையில் கூடிய விரைவில் குண்டுவெடிப்பு நிகழ்த்திய குற்றவாளி நிச்சயம் கைது செய்யப்படுவார். ராமேஸ்வரம் கபே ஹோட்டலுக்கு 12 கிளைகள் இருப்பதாகவும், அந்த ஹோட்டலின் வளர்ச்சி பிடிக்காத காரணத்தால் தான் திட்டமிட்டு குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டு இருப்பதாகவும், அப்பகுதி மக்கள் பேசுவதாக காவல்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

தேர்தல் நெருங்குவதன் காரணமாக குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதா?, அல்லது தொழில் துறையில் வேகமாக வளர்ந்து வரும் பெங்களூர் நகரத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் முன் வருவதால், அதை கெடுக்கும் விதமாக குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதா? உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது. குண்டு வெடிப்பு நடைபெற்ற நேரத்தில் 26 பேருந்துகள் அங்கு சென்றுள்ளன.

மங்களூர் டெக்னிக்கை பயன்படுத்தி: விசாரணையில் அருகில் உள்ள சிசிடிடியில் கிடைத்த காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம். எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் அரசியல் செய்யக்கூடாது. மங்களூர் குண்டு வெடிப்புக்கும் இந்த குண்டு வெடிப்புக்கும் தொடர்பு உள்ளதா என்று தெரியவில்லை. அதே மெட்டீரியல், டெக்னிக்கை பயன்படுத்தியே பெங்களூர் குண்டு வெடிப்பும் நிகழ்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+