பெங்களூர்: வருமான வரித்துறையினர் நெருக்கடி! அலுவலக கட்டிடத்திலிருந்து குதித்த ரியல் எஸ்டேட் நிறுவனர்
பெங்களூர்: பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான கான்ஃபிடன்ட் குரூப் தலைவர் சி.ஜே.ராய், பெங்களூரில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்திக்கொண்டிருந்த போதே, ராய் தனது அலுவலகத்தில் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார்.
இன்று மதியம் ராய் லேங்ஃபோர்ட் சாலை அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் ரெய்டு மேற்கொண்டிருந்தனர். அதிகாரிகள் மதிய உணவு இடைவேளையில் இருந்தபோது அல்லது சோதனையின் ஒரு பகுதியாக ஆவணங்களைச் சரிபார்த்துக் கொண்டிருந்தபோது, சி.ஜே. ராய் தனது அறைக்குள் சென்று இந்த விபரீத முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சத்தம் கேட்டு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஓடிச் சென்று பார்த்தபோது அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். உடனடியாக அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
பெங்களூருவைத் மையமாக கொண்டு கேரளா, துபாய் உள்ளிட்ட பல இடங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் வணிக வளாகங்களைக் கட்டி முடித்த ரியல் எஸ்டேட் ஜாம்பவான் இவர். இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். அம்மாநில முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பல ரியாலிட்டி ஷோக்களுக்கு இவரது நிறுவனம் நீண்ட காலம் ஸ்பான்சராக இருந்துள்ளது.
மலையாளத் திரையுலகில் பல படங்களைத் தயாரித்தும், விநியோகம் செய்தும் ஒரு முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்தார். இருப்பினும், கடந்த சில நாட்களாக அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் நடந்த அதிரடி சோதனைகள் அவருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதேபோல இவர் சமீபத்தில் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறார்.
ரியல் எஸ்டேட் துறையில் நிலவி வந்த சுணக்கம் அல்லது நிதி சார்ந்த சிக்கல்கள் ஏதேனும் இருந்ததா என்பது குறித்தும் காவல்துறை விசாரித்து வருகிறது. பெங்களூரு போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடக்கும்போது முறையாக விதிமுறைகளைப் பின்பற்றினார்களா என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
-
"மதம் மாறலைன்னா வேலையை விட்டு தூக்கிடுவோம்.." விப்ரோவில் பெண் ஐடி ஊழியருக்கு மிரட்டல்! என்ன நடந்தது -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications