பஸ்ஸில் மகளிருக்கு இலவசம்.. பெங்களூருவில் அடியோடு மாறிய நிலைமை.. ஆட்டோ ஓட்டுநர் கண்ணீர் வீடியோ
பெங்களூரு: கர்நாடகாவில் அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. பலரும் அரசு பேருந்துகளில் மட்டுமே பயணிப்பதால் வாடகை வாகன ஓட்டுநர்களும், தனியார் பேருந்து உரிமையாளர்களும் வருமானம் இன்றி தவிக்கிறார்கள்.
தமிழ்நாட்டை போல் கர்நாடகாவிலும், அரசு பேருந்துகளில் கட்டணம் மகளிருக்கு இல்லை என்பதால் இந்த இருமாநிலங்களிலுமே தனியார் பேருந்துகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை பணம் கொடுத்து பயணித்த மக்கள், இலவசமாக பயணிப்பதால், வேலைக்கு செல்லவும், பொது இடங்களுக்கு செல்லவும் அரசு பேருந்தில் மட்டுமே செல்வதால் தங்கள் பணத்தை பெரிய அளவில் மிச்சம் பிடித்துள்ளனர். அதேநேரம் தனியார் வாடகை வாகன ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் இந்த புதிய மாற்றத்தால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதன் காரணமாக காங்கிரஸ் சார்பில் முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் கடந்த ஜூன் 13-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
இதனால் மக்கள் பெரும்பாலானோர் அரசு பேருந்துகளில் மட்டுமே ஏறுகிறார்கள். குறிப்பாக பெண்கள் அரசு பேருந்துகளில் காத்திருந்து ஏறுகிறார்கள். பெண்கள் பலர் வெளியில் போவதும் அதிகரித்துள்ளது. சுற்றுலா தலங்களுக்கும், ஆன்மீக தலங்களுக்கும் செல்லும் பெண்களின் எண்ணிக்கை பெரிய அளவில் கர்நாடகாவில் அதிகரித்துள்ளது.
பெங்களூரு நகரில் மக்கள் பலர் அரசு பேருந்துகளில் ஏறுவதால், ஆட்டோ, வாடகை டாக்சி, வேன் ஆகியவற்றில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை கடுமையாக சரிவடைந்துள்ளது. பெங்களுரூவில் நிலைமை இப்படி என்றால், மற்ற மாவட்டங்களில் தனியார் பேருந்துகளில் பெண்கள் பயணிப்பதையே தவிர்த்து வருகிறார்கள். இதனால் தனியார் பேருந்துகளில் கூட்டம் கணிசமாக குறைந்துள்ளது. ஓலா, ஊபர் போன்ற செயலிகளைப் பயன்படுத்தி பயணம் செய்வது பெங்களூருவில் மட்டுமே கணிசமாக உள்ளது. மற்ற மாவட்டங்களில் பெரிய அளவில் குறைந்துள்ளது.
இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கண்ணீர் மல்க பேசும் வீடியோவே இதற்கு சாட்சியாக பார்க்கப்படுகிறது. அவர் அந்த வீடியோவில், நான் காலை 8 மணியில் இருந்து பிற்பகல் 1 மணிவரை ஆட்டோ ஓட்டி இருக்கிறேன். வெறும் 40 ரூபாய் மட்டுமே வருமானம் வந்துள்ளது என்று கண்ணீருடன் பேசுகிறார்.
இந்த வீடியோவை டிரைவர்கள் ஏராளமானோர் பகிர்ந்து, இலவச பயண திட்டத்தால் ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக அரசை விமர்சித்துள்ளனர்.அதேநேரம் பொதுமக்களோ அரசின் திட்டத்தை வெகுவாக பாராட்டி உள்ளனர்.
-
அமைச்சர் பதவிக்கு குட்பை? பெங்களூர் வளர்ச்சி துறையின் பல்லை பிடுங்கிய டிகே சிவக்குமார்.. கிருஷ்ணபைரே கவுடா அதிருப்தி -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
கரப்பான் பூச்சி கட்சியுடன் கைகோர்க்கும் பிரகாஷ் ராஜ்! கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ்! பெங்களூரில் ஷாக் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?












Click it and Unblock the Notifications