பெங்களூர் கலவரம்.. சர்ச்சைக்குரிய பேஸ்புக் பதிவு.. எம்எல்ஏ சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன் கைது!
பெங்களூர்: பெங்களூரில் நேற்று இரவு காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தியின் வீடு முன் கலவரம் ஏற்பட்ட நிலையில் சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
பெங்களூரில் நேற்று கலவரம் ஏற்பட்ட நிலையில், தற்போது பெங்களூர் முழுக்க 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அங்கு புலிகேசி நகர் பகுதியில் இருக்கும் காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தி வீடு முன் கலவரம் நடந்தது.

காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன் என்பவர் செய்த பேஸ்புக் பதிவுதான் இந்த கலவரத்திற்கு காரணமாகும். இவர் இஸ்லாம் குறித்தும் முகமது நபி குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் பேஸ்புக்கில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து இவருக்கு எதிராக சீனிவாச மூர்த்தியின் வீடு முன் நேற்று இரவு பெரிய கலவரம் நடந்தது. அதேபோல் நவீனுக்கு எதிராக கலவரக்காரர்கள் கொடுத்த புகாரை போலீசார் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் புகார் உள்ளது. இதனால் நேற்று பெங்களூர் டிஜே ஹள்ளி போலீஸ் நிலையம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த கலவரத்தில் ஈடுப்பட்ட நபர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் தற்போது சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தன்னுடைய பேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று நவீன் தற்போது போலீசில் விளக்கம் அளித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications