பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வாங்க சார் வாங்க.. வரலாற்று சிறப்புமிக்க இடம் பாருங்க.. பெங்களூர் நிலைமையை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூரில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அங்குள்ள சாலைகள் குண்டும் குழியுமாக மாறின. எனினும் இன்னும் சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளதால் அந்த சாலைகள் குறித்த புகைப்படங்கள் கூகுள் லொக்கேஷனில் வெளியாகி தீயாய் பரவின. நெட்டிசன்கள் பலரும் இதனை கலாய்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இந்த ஆண்டு கனமழை கொட்டி தீர்த்தது.

தென்மேற்கு பருவமழையின் போது கர்நாடகாவில் நல்ல மழை பொழிவு இருக்கும் என்றாலும் இந்த ஆண்டு அதிக அளவு பெய்தது.

பெங்களூரில் அரசு நிர்வாகம் தடுமாற்றம்.. வெள்ளம் வடிந்தாலும் குடிநீர் வினியோகம் இல்லை! மக்கள் தவிப்பு பெங்களூரில் அரசு நிர்வாகம் தடுமாற்றம்.. வெள்ளம் வடிந்தாலும் குடிநீர் வினியோகம் இல்லை! மக்கள் தவிப்பு

கனமழையால் சாலைகள் சேதம்

கனமழையால் சாலைகள் சேதம்

அதுவும் தலைநகர் பெங்களூரில் வரலாறு காணாத மழை பெய்தது. இந்த மாத துவக்கத்தில் விடிய விடிய மழை கொட்டியது. இதனால், பெங்களூருவில் பெரும் பணக்காரர்கள் வசிக்கும் எலைட் பகுதிகள் கூட முட்டளவு தண்ணீரில் மிதந்தது. கனமழையால் பல இடங்களில் சாலைகளும் சேதம் அடைந்தன. குண்டும் குழியுமான சாலைகளால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். கார்களில் சென்றவர்களுக்கே இந்த நிலமை என்றால் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை பற்றி சொல்லவா வேண்டும்.

சீர் செய்யப்படவில்லை

சீர் செய்யப்படவில்லை

அந்த அளவுக்கு நகரின் சாலைகள் மோசம் அடைந்தன. இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று சொல்லப்படும் பெங்களூருவில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் உள்ளன. மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் ஐடி நிறுவனங்களின் ஊழியர்கள் படகுகளிலும் கனரக வாகனங்களிலும் அலுவலகம் சென்று வந்த காட்சிகள் கூட வைரலாகி இருந்தன. தற்போது மழை விட்டு இயல்பு நிலை திரும்பி விட்டாலும் இன்னமும் சாலைகள் பல இடங்களில் முழுவதுமாக சீர் செய்யப்படவில்லை என்று சமூக வலைத்தளங்களில் பரவலாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

சாலைகள் மோசமாக இருப்பதை

சாலைகள் மோசமாக இருப்பதை

இதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இணையதளங்களில் பலரும் இது தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். பல நெட்டிசன்கள் ஜாலியாக கலாய்த்தும் சாலைகள் மோசமாக இருப்பதை சுட்டிக்காட்டுவது கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் தான், சாலைகளில் காணப்படும் பெரிய பள்ளங்களை சுட்டிக்காட்டி இணையத்தில் ஒருவர் பதிவிட்டு இருந்து நெட்டிசன்கள் மத்தியில் டிரெண்ட் ஆகி வருகிறது.

 பெரிய பள்ளங்கள்

பெரிய பள்ளங்கள்

ட்விட்டரில் மிகவும் பிரபலமாக உள்ள நிமோ டை என்ற அக்கவுண்டில் இது தொடர்பான ஸ்க்ரீன் ஷாட்கள் பகிரப்பட்டுள்ளன. இதில், சாலைகளில் உள்ள பெரிய பள்ளங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதோடு வரலாற்று சிறப்பு வாய்ந்த இடம், கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்ற ரிவ்யூக்களும் எழுதப்பட்டுள்ளன. பெங்களுருவின் தென்கிழக்கு புறநகர் பகுதியான பெல்லந்தூரில் உள்ள சாலையில் இருக்கும் பள்ளத்தைதான் இப்படி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நெட்டிசன்கள் கேலி

நெட்டிசன்கள் கேலி

நெட்டிசன்கள் மத்தியில் இது தொடர்பான பதிவுகள் வைரலாக பரவி வருகின்றன. உங்கள் கார்களின் சஸ்பென்ஷன் லெவலை பரிசோதிக்கழ் என ஒருவர் ரிவியூ எழுதியிருக்கிறார். அதேபோல், இந்த பள்ளம் சிறந்த இடம் என்றும் அருகிலேயே மளிகை கடைகள், பள்ளிகள் என அனைத்து வசதிகளும் உள்ளது என்று கேலி செய்துள்ள்ளார்.

எம்.பி/ எம்.எல்.ஏ பெயர்களை போட்டு பதிவிடுங்கள்

எம்.பி/ எம்.எல்.ஏ பெயர்களை போட்டு பதிவிடுங்கள்

இந்த பகுதியின் எம்.பி/ எம்.எல்.ஏ பெயர்களை போட்டு பதிவிடுங்கள் அப்போதுதான் அவர்களது பொறுப்பை உணர்வார்கள் என நெட்டிசன்கள் சிலர் பதிவிட்டு இருக்கின்றனர். இது தொடர்பான ட்விட் வைரல் ஆனது.. கூகுல் லொகேஷனில் இருந்த இந்த லிங்க் அழிக்கப்பட்டுவிட்டதாக தெரிகிறது. இருந்தாலும் ஏற்கனவே பதிவிட்டு வைத்திருந்த ஸ்கீரின்ஷாட்டை வைத்து இணையத்தில் வைரலாக்கி கொண்டு இருக்கின்றனர் நெட்டிசன்கள்.

English summary
The roads in Bengaluru have become potholes due to the rains in Bengaluru for the past few days. However, as the roads are still not repaired, the photos of those roads were released on Google Location and spread like wild fire. Many netizens are enjoying it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X