ஆர்டர் செய்யாத உணவுடன் வீட்டிற்கே வரும் மர்ம நபர்.. கதவை திறந்தால் அவ்வளவுதான்! பெங்களூரில் திக்திக்
பெங்களூர்: டிஜிட்டல் யுகத்தில் நாம் நினைத்துக் கூட பார்க்கவே முடியாத வகையில் பலவித மோசடிகள் அரங்கேறி வருகிறது. இதனால் நாம் பார்த்து பத்திரமாக இருக்க வேண்டி இருக்கிறது. அப்படி தான் இப்போது பெங்களூரில் ஒரு புதுவித மோசடி அரங்கேறி வருகிறது. இது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தும் சூழலில், இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்த நவீன உலகில் எல்லாமே டிஜிட்டல் வசமாகி வருகிறது. ஷாப்பிங் முதல் டேட்டிங் வரை அனைத்தையும் நம்மால் இணையத்திலேயே செய்ய முடிகிறது. பொருட்கள் வீடு தேடி வந்துவிடுவதால் பலரும் அப்படியே ஆர்டர் செய்ய விரும்புகிறார்கள்.

மோசடி:
அதேநேரம் இதை வைத்து சில மோசடி சம்பவங்களும் நடந்து வருகிறது. நாம் ஜாக்கிரதையாக இல்லாமல் போனால் பெரும் தொகையை இதனால் நாம் இழக்க வேண்டி இருக்கிறது. அப்படிதான் பெங்களூரில் இப்போது புதுவித மோசடி ஒன்று அரங்கேறி வருகிறது. இது பெங்களூர்வாசிகளை குழப்பத்திலும் அச்சத்திலும் ஆழ்த்துவதாக இருக்கிறது.
அதாவது அங்கு வசிக்கும் பெண் ஒருவருக்கு ஸ்விக்கி டெலிவரி டிரைவர் என்று கூறி கால் வந்துள்ளது. உணவு டெலிவரி செய்ய வேண்டும் என அந்த நபர் கூறியிருக்கிறார். இருப்பினும், வீட்டில் யாரும் இல்லாத சூழலில் வீட்டு வாசலில் ஆர்டரை விட்டுச் செல்லும்படி அந்த பெண் கூறியிருக்கிறார். அந்த பெண் செயலியில் பல முறை பார்த்த போதிலும் ஆர்டர் எதுவும் இல்லை. சரி, வீட்டிற்கு சென்று என்னவென்று பார்த்துக் கொள்ளலாம் என அந்த பெண்ணும் விட்டுவிட்டார்.
குழப்பம்:
"உடலுறவு.." பணக்கார பெண்களை கர்ப்பமாக்கினால் பல கோடி தரோம்! மோசடி பேர்வழிகளை தட்டி தூக்கிய போலீஸ்
வீடு திரும்பியவுடன் தான் அந்த பெண்ணுக்கு மிகப் பெரிய குழப்பம் காத்திருந்தது. அதாவது வீடு திரும்பியபோது, அங்குப் பொருள் எதுவுமே இல்லை. அதாவது அந்த டெலிவரி நபர் வாசலில் விட்டுச் செல்வதாகச் சொன்ன எந்தவொரு பொருளும் இல்லை. இதுவே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆர்டர் எதுவும் இல்லை என்றால் நம்பர் எப்படி அந்த நபருக்குப் போனது.. வீட்டு முகவரியைக் கண்டுபிடித்து இருப்பானோ என அந்த பெண்ணுக்கு பல்வேறு குழப்பங்கள் எழுந்துள்ளது.
நெட்டிசன்கள் கருத்து:
ரெட்டிட் தளத்தில் இது தொடர்பாக போஸ்ட் செய்துள்ளார். மேலும், இதுபோல வேறு யாருக்காவது நடந்துள்ளதா என்று கேட்டிருந்தார். அப்போது தான் பலர் தங்களுக்கும் இதுபோல நடந்ததாகவும் யார் இதுபோல செய்கிறார்கள் எனத் தெரிவதில்லை எனப் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். இன்னும் சிலர் ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள இடங்களிலேயே இதுபோல கால் வருவதாகவும் கதவை திறக்கவே முதலில் சொல்வதாகவும் குறிப்பிடுகிறார்கள்.
மோசடி:
இன்னொரு நபர் அதற்கு, "இது சிலர் செய்யும் மோசடி.. இது குறித்துக் கவலைப்பட வேண்டாம். ஏதேதோ சொல்லி பணம் பறிக்கப் பார்ப்பார்கள். நண்பர் ஆர்டர் செய்துவிட்டார். கேஷ் ஆன் டெலிவரி அப்படி இப்படி எனச் சொல்வார்கள். அதை எதுவும் நம்பி பணத்தை இழக்க வேண்டாம்" என்று பதிவிட்டுள்ளார். இன்னும் சிலர் முன்பு செய்த டெலிவரியை வைத்து அந்த பெண்ணின் நம்பரை எடுத்து டெலிவரி நபர் பாலோ செய்திருக்கலாம் என்றும் கூறி வருகிறார்கள்.
ஆனால், இதுவரையிலும் கூட இந்த மோசடிக்குப் பின்னணி என்ன! இதன் மூலம் என்ன செய்ய பிளான் செய்திருந்தனர் என எதுவும் தெரிவதில்லை. இதனால் பெங்களூர்வாசிகள் ஒரே குழப்பத்திலும் அச்சத்திலும் உள்ளனர்.












Click it and Unblock the Notifications