ராட்சசன்.. ரயில்வே குப்பையில் அழுகிய உடல்! அடுத்தடுத்த பெண்கள் கொலை! பெங்களூரில் சீரியல் கில்லர்?
இது சீரியல் கொலையாக இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
பெங்களூர்: பெங்களூரில் அடுத்தடுத்து மூன்று பெண்கள் ஒரே ஸ்டைலில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூர் மக்கள் இடையே இந்த தொடர் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரில் இருக்கும் பையப்பனஹள்ளி ரயில்வே நிலையத்தில் நேற்று முதல்நாள் இரவு உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த உடல் கண்டுபிடிக்கப்பட்ட விதம்தான் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
படங்களில் காட்டப்படுவது போல ரயில்வே நிலையத்தில் முதலில் கெட்ட வாடை அடித்து உள்ளது. பிணம் அழுகிய வாடை அடித்து மக்கள் பலர் புகார் அளித்துள்ளனர்.

தூய்மை
இதையடுத்து தூய்மை பணியாளர்கள் அங்கே இருக்கும் குப்பை டிரம் ஒன்றை சோதனை செய்து பார்த்து உள்ளனர். அதன் உள்ளே கை ஒன்று தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் ரயில்வே போலிஸாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். உடனே ரயில்வே போலீசார் அங்கே விசாரணை நடத்தி உள்ளனர். அந்த தொட்டியை திறந்து பார்த்தவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்து இருந்தது. காரணம் உள்ளே ஒரு பெண்ணின் உடல் சுருட்டி வைக்கப்பட்டு இருந்தது. இறந்த நிலையில்.. அழுகிபோய் மிக மோசமாக ஒரு பெண்ணின் உடல் உள்ளே சுருட்டி வைக்கப்பட்டு இருந்தது.

ரயில் நிலையம்
ரயில் நிலையத்தில் பிளாட் பார்ம் உள்ளே இப்படி ஒரு உடல் கொண்ட குப்பை தொட்டி எப்படி வந்தது என்பதே தெரியவில்லை. அந்த அளவிற்கு யாரோ நேக்காக செயல்பட்டு உடலை கொண்டு வந்து போட்டுவிட்டு சென்றுள்ளனர். இதையடுத்து பெண்ணின் உடல் உடனே பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதில் அந்த பெண் ஒருவாரத்திற்கு முன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிவித்து உள்ளனர். அதோடு அந்த உடலை கொண்ட பெண்ணுக்கு 31. - 35 வயது இருக்கலாம் என்றும் தெரிவித்து உள்ளனர்.

சிசிடிவி
இதையடுத்து ரயில்வே போலீசார் அங்கே இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். ரயில்வே ஸ்டேஷன் மற்றும் அருகிலுள்ள கடைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளில், உடலை ஆட்டோ ரிக்ஷாவில் மூன்று பேர் கொண்டு வந்தது தெரிய வந்துள்ளது. இவர்களை அடையாளம் காண்பதற்கான பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. வீடியோவில் இருக்கும் ஆட்டோ நம்பரை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்தான் இது சீரியல் கொலையாக இருக்குமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதன்படி கடந்த 3 மாதங்களில் இதேபோல் மேலும் இரண்டு சம்பவங்கள் நடந்து உள்ளன.

3 மாதங்கள்
அதன்படி ஜனவரி மாதம், பெங்களூரு யஷவந்த்பூர் ரயில் நிலையத்தில் உள்ள குப்பை தொட்டி டிரம்மில் 31-35 வயதுடைய பெண்ணின் சடலம் இதேபோல் கண்டெடுக்கப்பட்டது. கடந்த டிசம்பரில், பையப்பனஹள்ளி ரயில் நிலையத்தில் உள்ள பங்காரப்பேட்டை-சர் எம் விஸ்வேஸ்வரய்யா டெர்மினல் பகுதியில் முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டி ஒன்றில் மஞ்சள் சாக்கில் மற்றொரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அங்கே இந்த சாக்கு நீண்ட நேரமாக இருந்ததால் நடத்தப்பட்ட சோதனையில் அதில் இருந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இதுவரை எந்த ஒரு தடயமும் போலீஸாருக்கு கிடைக்கவில்லை. இந்த சம்பவங்களுக்கு இடையில் இருக்கும் தொடர்பை போலீசார் விசாரித்து வருகின்றனர். இது சீரியல் கொலையாக இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. பெங்களூரில் அடுத்தடுத்து மூன்று பெண்கள் ஒரே ஸ்டைலில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூர் மக்கள் இடையே இந்த தொடர் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications