சாட் ஜிபிடி இருக்கட்டும்.. கீதா ஜிபிடி உருவாக்கிய இந்திய இன்ஜினியர்! பகவத் கீதையிலிருந்து பதில்!
சாட் ஜிபிடி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை போல் கீதா ஜிபிடி என்ற பெயரில் பகவத் கீதைக்கான செற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து இருக்கிறார் பெங்களூரு மென்பொறியாளர்
பெங்களூரு: மென்பொருள் தொழில்நுட்ப உலகத்தையை திரும்பி பார்க்க வைத்திருக்கும் சாட் ஜிபிடி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை போல் கீதா ஜிபிடி என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து இருக்கிறார் பெங்களூருவை சேர்ந்த மென்பொறியாளர் சுகுரு சாய் வினீத்.
ஓபன் ஏஐ நிறுவனம் கண்டுபிடித்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான சாட் ஜிபிடி கடந்த சில மாதங்களாக சர்வதேச அளவில் மென் பொருள் தொழில்நுட்ப நிறுவனங்களை உலுக்கி இருக்கிறது.
இஸ்டாகிராமுக்கு இணையாக கிடுகிடுவென வளர்ந்த சாட் ஜிபிடிக்கு போட்டி என்று கூறி ஜிபிடி என்று முடியும் வகையில் புது புது பெயர்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து வருகிறார்கள்.

சாட் ஜிபிடி ஏன்?
ஆனால், சாட் ஜிபிடி அருகில் கூட அந்த தொழில்நுட்பங்களால் நெருங்க கூட முடியவில்லை. பள்ளி வீட்டுப்பாடங்கள் செய்வது, புதிய நாவல் எழுதுவது, சமூக வலைதள பதிவுகளை எழுதுவது, பணி குறித்த விரிவுரைகளை தயாரிப்பது தொடர்ந்து சாதாரண கடிதம் எழுதுவது வரை அனைத்தையும் சாட் ஜிபிடி நமக்கு செய்து கொடுக்கும்.

கீதை ஜிபிடி
இந்த நிலையில்தான் அதற்கு போட்டியாக புதிய யோசனையுடன் இந்தியாவில் கீதா ஜிபிடி என்ற தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. சாட் ஜிபிடியிலிருந்து சற்று மாறுபட்ட இந்த கீதா ஜிபிடியை கூகுளில் பணியாற்றிய மென் பொறியாளர் சுகுரு சாய் வினீத் கண்டுபிடித்து இருக்கிறார். இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை குறித்த அனைத்து தகவல்களையும் இதில் பெற முடியுமாம்.

என்ன பயன்?
சாட் ஜிபிடி போன்றே 700 வசனங்களை கொண்ட நீண்ட நூலான பகவத் கீதையிலிருந்து உள்ள கருத்துக்கள் தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகளுக்கான விளக்கங்களை இது வழங்கும் என்றும் கூறும் அவர், வாழ்க்கை பிரச்சனைகளுக்கு மக்கள் பகவத் கீதையிலும் விடை காண வேண்டும் என்ற அடிப்படையில் இதை உருவாக்கியதாக தெரிவித்தார்.

3 மொழி வசதி
பெங்களூருவை சேர்ந்த மென் பொறியாளர் சுகுரு சாய் வினீத், சாட் ஜிபிடி போல் தன்னுடைய மென்பொருளும் பிரபலமடையும் என்று நம்புகிறார். செயற்கை நுண்ணறிவு கொண்ட இந்த சாட் வசதி மூன்று மொழிகளில் இயங்கும். பகவத் கீதை குறித்த கூடுதல் விழிப்புணர்வை தன்னுடைய இந்த மென்பொருள் ஏற்படுத்தும் என்றும் நம்புகிறார்.

பகவத் கீதை குறித்து கேட்கலாம்
சாடி ஜிபிடி போன்றே 700 வசனங்களை கொண்ட நீண்ட நூலான பகவத் கீதையிலிருந்து உள்ள கருத்துக்கள் தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகளுக்கான விளக்கங்களை இது வழங்கும் என்றும் கூறும் அவர், வாழ்க்கை பிரச்சனைகளுக்கு மக்கள் பகவத் கீதையிலும் விடை காண வேண்டும் என்ற அடிப்படையில் இதை உருவாக்கியதாக தெரிவித்தார்.

சிக்கல்கள்
புரட்சிகரமான தொழில்நுட்பம் என்று கீதா ஜிபிடியை அதை உருவாக்கியவர்கள் கூறினாலும், சாட்ஜிபிடி போல நடப்பு விஷயங்கள், விவகாரங்கள் குறித்த கேள்விகளுக்கு கண்டிப்பாக அதில் பதில் கிடைக்காது. இது ஆன்மீகத்திற்கான ஜிடிபியாக மட்டும் கருதப்படுகிறது. சாட் ஜிபிடி இந்து கடவுள்களை அவமதிப்பதாக குற்றம்சாட்டு எழுந்திருக்கும் நிலையில் கீதா ஜிபிடி இந்தியாவில் நிச்சயம் வரவேற்பை பெறும் என்று நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications