லட்சத்திலிருந்து கோடி.. 5 ஆண்டுகளில் 3150% உயர்ந்த பாஜக வேட்பாளரின் சொத்து! பெங்களூரில் சலசலப்பு
பெங்களூர்: பாஜக சார்பில் பெங்களூர் தெற்கு லோக்சபா தொகுதியில் போட்டியிடும் தேஜஸ்வி சூர்யாவின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 3150% உயர்ந்திருப்பது பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது.
தேர்தல்: கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் கடந்த முறையை போல் அல்லாமல் இந்த முறை எதிர்க்கட்சிகள் ஒரே கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. எனவே பாஜகவுக்கு இந்த முறை கடும் போட்டி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் பெங்களூர் தெற்கு லோக்சபா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தேஜஸ்வி சூர்யாவின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 3150% உயர்ந்திருப்பது பேசு பொருளாகியுள்ளது.

கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ம் தேதி ஒரு கட்டமாகவும், மே 7ம் தேதி இரண்டாவது கட்டமாகவும் தேர்தல் நடத்தப்படுகிறது. எனவே வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்த கையோடு, தீவிர பரப்புரையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேஜஸ்வி யாதவின் வேட்புமனு விவரங்கள் சோஷியல் மீடியாக்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. காரணம், அவருடைய சொத்து மதிப்புதான்.
சொத்து மதிப்பு: கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் அவர் தாக்கல் செய்திருந்த வேட்புமனுவில், தனக்கு அசையா சொத்துக்கள் இல்லையென்றும், மொத்த சொத்தின் மதிப்பு ரூ.13 லட்சம் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இப்போது இவருடைய சொத்து மதிப்பு ரூ.4.10 என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது கடந்த 5 ஆண்டுகளில் இவருடைய சொத்து மதிப்பு 3150% உயர்ந்திருக்கிறது. மொத்த சொத்தில் ரூ.1.99 மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடாக இருக்கிறது. ரூ.1.79 கோடியை பங்குகளில் முதலீடு செய்திருக்கிறார்.
யார் இந்த தேஜஸ்வி சூர்யா: பெங்களூர் தெற்கு தொகுதி பாஜகவின் கோட்டை. இந்த கோட்டையில் 1991லிருந்து பாஜக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இங்கு தொடர்ந்து எம்பியாக தேர்வாகி வந்த அனந்த குமார் கடந்த 2018ல் உயிரிழந்த நிலையில், 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேஜஸ்வியை பாஜக களமிறக்கியது. இவர் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-லிருந்து கட்சிக்கு வந்தவர். பாஜக இளைஞரணியின் தேசிய தலைவராக இருந்திருக்கிறார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நெருங்கிய நண்பராவார்.
கர்நாடக அரசியல்: கர்நாடக அரசியலை பொறுத்த அளவில், இந்த முறை எப்படியாவது அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றிவிட வேண்டும் என்று பாஜக திட்டமிட்டு வருகிறது. ஆனால், பாஜகவில் உட்கட்சி பூசல் அதிகமாக இருப்பதால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறைவு என்று பலரும் கூறுகின்றனர். குறிப்பாக ஷிமோகா தொகுதியில் பாஜக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகனை எதிர்த்து போட்டியிடப்போவதாக பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை முதலமைச்சருமான ஈஸ்வரப்பா அறிவித்துள்ளார். லோக்சபா தேர்தலில் அவருக்கு போட்டியிட சீட் மறுக்கப்பட்ட நிலையில் இந்த முடிவை அறிவித்திருக்கிறார்
இது குறித்து அமித்ஷாவை சந்தித்து விவாதிக்க டெல்லி சென்ற ஈஸ்வரப்பாவை, அமித்ஷா சந்திக்கவில்லை. எனவே கட்சிக்குள் அதிருப்தி அதிகரித்து வருகிறது.
அதிருப்தி: ஷிமோகா தொகுதி மட்டுமல்லாது சித்ரதுர்கா தொகுதியில் மத்திய அமைச்சராக இருந்த நாராயணசாமிக்கு சீட் மறுக்கப்பட்டதால் பாஜகவுக்கு எதிராக போர்க்கொடியை அவர் உயர்த்திருக்கிறார். பெங்களூர் வடக்கு தொகுதியை பொறுத்த அளவில் சிட்டிங்க் எம்பியான சதானந்த கவுடாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால், புதிய வேட்பாளர் கரந்தலஜேவுக்கு எதிரான போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
சிக்கமங்களூர், மைசூர், தாவணகரே உள்ளிட்ட தொகுதிகளும் இதே பிரச்னை எழுந்திருக்கிறது. பாஜக வேட்பாளருக்கு எதிராக அக்கட்சியை சேர்ந்த தலைவர்களே போர் கொடி தூக்கியுள்ளனர். இதற்கு மத்தியில் தேஜஸ்வி சூர்யாவின் சொத்து மதிப்பும் சர்ச்சையை கிளப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக -
ராம ஸ்ரீனிவாசனை கடைசி நேரத்தில் கைவிட்ட நயினார்.. பிரச்சாரத்திற்கு வராமல் எஸ்கேப்பான பாஜக தலைமை! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன் -
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம் -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
கோவை திமுகவை அழிக்க செந்தில் பாலாஜி ஸ்கெட்ச்.. அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு












Click it and Unblock the Notifications