Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெங்களூர் துணை நடிகை ஊர்வசி.. மனைவியை பிரிந்து வாழும் ஆண்கள் அறிய வேண்டிய பெரிய பாடம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரு பாகலகுண்டே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட விஜயலட்சுமி லே-அவுட்டில் நடராஜ் என்பவருக்கு சொந்தமான வீட்டில் கடந்த 1-ந் தேதி துர்நாற்றம் வந்தது. போலீசாரின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, நம்ப முடியாத அளவிற்கு காட்சிகள் இருந்தது. ஒரு நிதி நிறுவன உரிமையாளர் இருந்த நிலை அவர்களை ஆடிப்போக வைத்தது. இந்த வழக்கில் சினிமா துணை நடிகை உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். எப்படி இந்த சம்பவம் நடந்தது என்று பார்ப்போம்.

கள்ளக்காதல்கள் இப்போது சர்வ சாதாரணமாக அதிகரித்துவிட்டது. குடிப்பழக்கம் எப்படி சமூகத்தில் பலரது கல்லீரலை காலி செய்கிறதோ, அதுபோல் குடும்பம் என்ற கல்லீரலை கள்ளக்காதல் காலி செய்த வருகிறது. பல குடும்பங்களில் ஆண், பெண் இருவருமே பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனையை பேசி தீர்க்காமல் வேறு பாதையை தேர்வுசெய்கிறார்கள். இது பெரும்பாலும் சிக்கலில் முடிகிறது.

Bangalore supporting actress Urvashi A big lesson for men living apart from their wives to learn


கள்ளக்காதல்

இந்தியாவில் கள்ளக்காதல் என்பது சட்ட ரீதியாக தவறும் இல்லை.. அதாவது ஒரு ஆண் திருமணமான பெண்ணுடனோ, ஒரு பெண் தன் கணவனை விட்டுவிட்டுஇன்னாரு திருமணம் ஆன ஆணுடன் ஒன்றாக உறவு வைத்துக் கொள்வது என்பது சட்ட ரீதியாக தவறு இல்லை என்பது தான் கசப்பான உண்மை. அதேநேரம் தார்மீக ரீதியாக தவறு என்பதால், பாதிக்கப்பட்ட பெண் அல்லது ஆண், தங்கள் துணையை விட்டு பிரிய இந்த வாதத்தை சிவில் கோர்டில் வைக்க முடியும். அவ்வளவு தான் அவர்களுக்கு உள்ள ஒரே வாய்ப்பு.. இப்படியான சூழல் இருப்பதால், பல தவறுகள் எளிதாக நடக்கின்றன. அப்படியான ஒரு சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.

பெங்களூரு பாகலகுண்டே காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட விஜயலட்சுமி லே-அவுட் இருக்கிறது.இங்கு நடராஜ் என்பவருக்கு சொந்தமாக வீடு ஒன்று இருக்கிறது. இந்த வீட்டில் கடந்த 1-ந் தேதி கடும் துர்நாற்றம் வந்தது. போலீசார் விரைந்து வந்து வீட்டுக்கதவை உடைத்தார்கள். பின்னர் வேகமாக உள்ளே சென்றனர்.

நிதி நிறுவன அதிபர்

அப்போது கை, கால்கள் கட்டப்பட்டும், வாயில் பிளாஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில் ஒருவர் இறந்தார். அவர் நிதி நிறுவன உரிமையாளர் மோகன் கிருஷ்ணா (வயது 38) என்பது போலீசாருக்கு தெரியவந்தது. அவரது உடலும் அழுகிய நிலையில் இருந்தது. பெங்களூரு பாகலகுண்டே போலீஸ் விசாரித்த போது, அங்கு மோகன் கிருஷ்ணா வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தாராம். அங்கு அவருடன் தங்கி இருந்த மனைவி ஊர்வசி கொலை செய்துவிட்டு தப்பியது தெரியவந்தது.

3 பேர் கைது

இந்த நிலையில், மோகன் கிருஷ்ணா கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ஊர்வசி என்ற பிந்து, அவரது கள்ளக்காதலன் வினய் மற்றும் தனுஷ் கவுடா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தார்கள். கைதான ஊர்வசி கன்னட சினிமாக்களில் துணை நடிகையாகவும், சின்னத்திரை தொடர்களில் சிறிய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கணவனை பிரிந்து வாழ்ந்த நடிகை

மோகன் கிருஷ்ணாவுக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால் மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையால், அவரை மோகன் கிருஷ்ணா பிரிந்து வாழ்ந்தார். அதுபோல், ஊர்வசிக்கும் திருமணமாகி கணவர் உள்ளார். ஆனால் அவர் கணவருடன் வாழப் பிடிக்காமல் பிரிந்து வாழ்ந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் தான் மோகன் கிருஷ்ணா, ஊர்வசி இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் ஒரே வீட்டில் கணவன், மனைவி போல் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள்.

கள்ளக்காதல்

இந்த நிலையில் மோகன் கிருஷ்ணாவிடம் இருந்த ஈர்ப்பு வினய்யிடம் ஊர்வசிக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வினய் ஊர்வசி இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் மோகன் கிருஷ்ணா இவர்கள் சேர்ந்து வாழ தடையாக இருந்தாராம்.இதனால் மோகன் கிருஷ்ணாவை கொலை செய்ய ஊர்வசி, கள்ளக்காதலன் வினய், தனுஷ் திட்டமிட்டு உள்ளனர். இதனால் அவரது கை, கால்களை கட்டியும், வாயில் பிளாஸ்டர் போட்டு ஒட்டியும் கொலை செய்துவிட்டு 3 பேரும் தப்பி ஓடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+