இனி பெங்களூர் டிராபிக்கை ஈஸியாக சமாளிக்கலாம்.. ஸ்பெஷல் திட்டத்தை இறக்கும் போலீஸ்.. வாவ் சூப்பர்!
பெங்களூர்: பெங்களூரில் டிராபிக் எந்தளவுக்கு மோசமாக இருக்கும் என்பதைத் தனியாகச் சொல்லத் தேவையில்லை. ஒவ்வொரு நாளும் பெங்களூரில் ஆபீஸ் சென்று வீடு திரும்புவதே அங்கு வசிக்கும் மக்களுக்கு போராட்டமாக இருக்கிறது. இந்த டிராபிக் சிக்கலை எளிதாகக் கையாளும் வகையில் பெங்களூர் டிராபிக் போலீசார் புதிய சூப்பர் செயலி ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளனர்.
நமது நாட்டிலேயே அதிக டிராபிக் கொண்ட நகரங்களில் ஒன்றாகப் பெங்களூர் இருக்கிறது. காலை, மாலை என பீக் ஹவரில் வெளியே சென்றால் வீடு திரும்பவே கணிசமான நேரம் சாலையில் நிற்க வேண்டி இருக்கிறது.

சமீபத்தில் கூட சின்ன மழையால் பெங்களூர் சாலைகளில் நீர் தேங்கவே.. பல மணி நேரம் வரை டிராபிக் பாதிப்பு நீண்டது. மாலை ஆபீஸில் இருந்து கிளம்பியவர்கள் வீடு திரும்பவே நள்ளிரவு வரை கூட ஆனது.
பெங்களூர் டிராபிக்: டிராபிக் சிக்கலைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் போதிலும், அதற்குப் பெரியளவில் பலன் கிடைப்பதாகத் தெரியவில்லை. இதற்கிடையே பெங்களூர் மக்களுக்கு உதவும் வகையில், டிராபிக் சார்ந்த அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் அறிந்து கொள்ளும் வகையில் புதிய செயலி ஒன்றைப் பெங்களூர் டிராபிக் போலீசார் வெளியிட உள்ளனர்.
அடுத்த இரண்டு மாதங்களில் இந்த சூப்பர் செயலியை அறிமுகப்படுத்தப் பெங்களூர் டிராபிக் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதன் செயலி மூலம் ரியல் டைமில் டிராபிக் எப்படி இருக்கிறது என்பதை பெங்களூர்வாசிகளால் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும். மேலும், இந்த செயலியிலேயே விபத்துகள் குறித்து ரிப்போர்ட் செய்ய முடியும்.
தனித்துவம் என்ன: பெங்களூர் டிராபிக்கை சமாளிக்கச் ஏற்கனவே பல செயலிகள் உள்ளன. ஆனால், எல்லா தகவல்களும் ஒரே இடத்தில் கிடைக்காது. இதனால் இப்போது பெங்களூர் டிராபிக்கை சமாளித்து வண்டி ஓட்ட பல செயலிகள் கூட சமூக வலைத்தளங்களில் வரும் அப்டேட் என 360 டிகிரிக்கு தகவல் தேவைப்படுகிறது. அவை அனைத்தையும் நீக்கி, இந்த ஒரே இடத்தில் தேவையான அனைத்து தகவல்களையும் திரட்டிக் கொண்டு வருவதே இந்த சூப்பர் செயலியின் நோக்கமாகும்.
இந்த செயலியில் விபத்துகள் மட்டுமின்றி விதிமீறல் குறித்தும் கூட போட்டோவுடன் புகார் அளிக்கலாம். இதில் அவர்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமலேயே புகார் அளிக்கலாம் என்பது மற்றொரு சிறப்பாகும்.
21 காரிடார்கள்: இந்த புதிய செயலி தற்போதுள்ள ASTraM செயலியிலிருந்து வேறுபட்டதாக இருக்கும். ஏற்கனவே உள்ள ASTraM செயலியை டிராபிக் போலீசார் மட்டுமே போக்குவரத்தைக் கண்காணிக்கப் பயன்படுத்தும் வகையில் இருக்கிறது.. ஆனால், புதிய செயலியை அனைத்து மக்களும் பயன்படுத்தலாம். மேலும், இந்த செயலி ஒட்டுமொத்தமாகப் பெங்களூர் சிட்டியை கவர் செய்யும் வகையில் 21 முக்கிய காரிடர்களை உள்ளடக்கியதாக இருக்கும்.
இது தொடர்பாகப் பெங்களூர் டிராபிக் போலீஸ் இணை ஆணையர் எம்.என்.அனுசேத் பிரபல ஆங்கில ஊடகத்திடம் கூறுகையில், "இது ஒரு சூப்பர் செயலியாக இருக்கும். இதில் ஒருவர் 5-கிலோமீட்டர் சுற்றி இருக்கும் போக்குவரத்து நெரிசல் குறித்துத் தெரிந்து கொள்ளலாம். விபத்துகள் குறித்தும் மக்களால் ரிப்போர்ட் செய்ய முடியும். இதற்கு டெண்டர் விடும் பணிகளை இந்த மாத இறுதிக்குள் முடித்துவிடும். ஜனவரி மாதம் செயலி ரெடியாகிவிடும்" என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications