இவரும் பெண்தானா? அதிகாலை 4 மணி வரை குழந்தை போட்ட அத்தப்பூ கோலம்! 1 செகன்ட்டில் காலால் அழித்த கொடூரம்
பெங்களூர்: பெங்களூரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஓணம் பண்டிகைக்காக குழந்தைகளால் போடப்பட்ட அத்தப்பூ கோலத்தை பெண் ஒருவர் ஆக்ரோஷமாக கலைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
பெங்களூர் சம்பீஹள்ளி போலீஸ் எல்லைக்குள்பட்ட தானிசன்ட்ரா ஹெக்டே நகரில் மோனார்க் செரினிட்டி அபார்ட்மென்ட் உள்ளது. இங்கு வசிக்கும் குடும்பத்தினர் எந்த பேதமும் இன்றி ஓணம் பண்டிகையை கொண்டாடினர். அப்போது அபார்ட்மென்டின் பொது இடமான லாபியில் அழகிய பூக்கோலமான அத்தப்பூ கோலம் போடப்பட்டிருந்தது.

இந்த பூக்கோலத்தை அந்த அபார்ட்மென்ட் குழந்தைகள் போட்டிருந்தனர். அப்போது அதே அபார்ட்மென்ட்டில் வசிக்கும் சிமி நாயர் என்ற கேரளத்தை சேர்ந்த பெண் வந்தார். அந்த கோலத்தை அப்படியே ரசித்தார், அப்படியெல்லாம் இல்லைங்க.
அந்த கோலத்தை பார்த்ததும் குழந்தைகளை அழைத்து பாராட்டாமல் கத்தி கூச்சல் போட்டுக் கொண்டிருந்தார். எதுவாக இருந்தாலும் உங்கள் வீடுகளுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். எதற்காக பொதுவெளியில் இது போல் செய்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.
பின்னர் யாரும் எதிர்பாராத நிலையில் அந்த கோலத்தின் மீது ஏறி நின்ற சிமி நாயர், சிறிது நேரம் மீண்டும் வாக்குவாதம் செய்துவிட்டு காலால் அழித்தார். அப்படியும் விடாமல் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மாறி மாறி வாக்குவாதம் செய்தபடி கோலத்தை அழித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசிகளில் சிலர் அந்த சம்பவத்தை வீடியோ எடுத்தனர்.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலர், ஒரு பெண் இப்படி செய்வாரா, அவரும் மலையாளிதானே. எதற்காக இத்தனை கோபம், படித்தால் போதுமா, நாகரிகம் வேண்டாமா என கேட்டு வருகிறார்கள். கோலம் குழந்தைகள் போட்டது, அதை அழிக்காதீர்கள் என பலர் மன்றாடியும் அந்த பெண்ணிற்கு மனம் இறங்கவில்லை.
அபார்ட்மென்ட்டில் வசிக்கும் குழந்தைகள் பலர் இரவு முழுவதும் விழித்திருந்து அதிகாலை 4 மணிக்கு கோலத்தை போட்டு முடித்தனர். இவ்வளவு முயற்சி செய்து அந்த கோலத்தை அவர்கள் போட்ட நிலையில் அதை சில நொடிகளில் அலங்கோலம் செய்துவிட்டாரே என விமர்சனங்கள் எழுந்துள்ளன. அபார்மென்ட் சார்பில் அந்த பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஓணம் என்பது 10 நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகை. அந்த கோலத்தை மிதிக்காமல் அதன் அழகை ரசித்த நிலையில் சிமி நாயரோ வித்தியாசமாக அந்த கோலத்தை கலைத்துவிட்டார். அந்த பூக்கோலம் போட்டத்தில் என்ன தவறு இருக்கிறது. இந்த பெண் எதற்காக பைத்தியம் போல் நடந்து கொள்ள வேண்டும் என பலர் கேள்வி எழுப்புகிறார்கள்.












Click it and Unblock the Notifications