ஒரு நாள்தான் பழக்கம்.. ஃபேஸ்புக் நண்பருடன் ஜாலியாக சுற்றி.. கடைசில நம்பவே முடியல? இப்படி ஒரு பெண்ணா

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: இந்தியாவில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.. குடும்ப வன்முறைகள் பெருகி வருவதால், விவாகரத்துகள் அதிகமாவதாக நீதிபதிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.. தம்பதிக்குள் புரிதல் இல்லாததால், தற்கொலைகள் அதிகமாவதாக, மனநல மருத்துவர்கள் வருத்தத்துடன் கூறுகிறார்கள். இந்நிலையில், தகாத உறவுகள் மூலம் ஏற்படும் கொலைகளும் பெருகிவருவது அதிர்ச்சியை உண்டுபண்ணி வருகிறது. பெங்களூரில் என்ன நடந்தது?

உல்லாசத்துக்கு அழைத்து தொந்தரவு செய்த பேஸ்புக் தோழியை கல்லால் சரமாரி தாக்கி கொன்ற ஆண் நண்பர் கைது செய்யப்பட்டார்.

bangalore bengaluru lodge

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ளது ஹொசகொப்பலு என்ற கிராமம். இங்கு வசித்து வருபவர் பிரீத்தி.. திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.. இவருக்கு 38 வயதாகிறது.. ஹாசனில் செயல்பட்டு வரும் ஒரு கார்மென்ட்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.. இவரது கணவர் ஆட்டோ டிரைவராக உள்ளார்.

ஃபேஸ்புக்கில் மூழ்கினார்

பிரீத்தி எந்நேரமும் சோஷியல் மீடியாவிலேயே நேரத்தை செலவிட்டு வருவாராம்.. அந்தவகையில், பேஸ்புக் , இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாகவே இருந்து வந்துள்ளார்.. இப்படித்தான் கடந்த 19ம் தேதி இரவும் ஃபேஸ்புக்கில் மூழ்கியிருந்துள்ளார்.. அப்போது புனித் என்ற 26 வயது நபர் ஆன்லைனில் இருப்பதை green light மூலம் அறிந்துள்ளார்.

மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை கரோடி என்ற கிராமத்தை சேர்ந்தவர்.. உடனே அவருக்கு friend request தந்துள்ளார் பிரீத்தி.. உடனே புனித்தும் அந்த நட்பின் அழைப்பை ஏற்றுள்ளார்.. உடனே இரவு முழுவதும் இருவரும் சாட்டிங் செய்து வந்துள்ளனர்.. மறுநாள் அதாவது 20ம் தேதி காலையிலேயே பிரீத்திக்கு போன் செய்த புனித், நேரில் சந்திக்க வேண்டும் என்று சொல்லவும், அதற்கு பிரீத்தியும் சம்மதித்துள்ளார்..

நேரில் சந்திப்பு

பிறகு 22ம் தேதி புனித், தன்னுடைய நண்பரின் காரில் கிளம்பி வந்தார்.. பிரீத்தியும் தோழியை சந்திக்க போவதாக, தன்னுடைய வீட்டில் சொல்லிவிட்டு கிளம்பி வந்துவிட்டார்.

பிரீத்தி புனித் இருவருமே நேருக்கு நேர் சந்தித்து பேசினார்கள்.. அப்போது ப்ரீத்தி, காரில் எங்கேயாவது தன்னை கூட்டிச்செல்லுமாறு சொல்லவும், புனித்தும், மைசூருக்கு காரிலேயே அவரை அழைத்து சென்றிருக்கிறார்.. அங்கே ஊரெல்லாம் சுற்றிவிட்டு, மண்டியாவில் KRS அணை அருகே ஒரு லாட்ஜில் சென்று ரூம் எடுத்து தங்கி உல்லாசமாக இருந்துள்ளனர்.. பிறகு மீண்டும் உல்லாசத்துக்கு பிரீத்தி அழைத்தபோது புனித் மறுத்துவிட்டாராம்.

காட்டுப்பகுதியில் தகராறு

ரூமை காலி செய்துவிட்டு கத்தரகட்டே வனப்பகுதிக்கு இருவரும் காரில் சென்றுள்ளனர். அப்போதும் மீண்டும் உல்லாசத்துக்கு பிரீத்தி அழைத்ததற்கு புனித் மறுத்துவிட்டாராம். இதனால் இருவருக்கும் தகராறு வெடித்துள்ளது.. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த புனித், பிரீத்தியை கடுமையாக தாக்கி, கீழே கிடந்த கல்லை எடுத்து, பிரீத்தியின் தலையில் போட்டுவிட்டார்.. இதில் பிரீத்தி ரத்த வெள்ளத்தில் இறந்துவிட்டார்.

பிறகு தன்னுடைய பண்ணையிலேயே பிரீத்தியின் சடலத்தை வீசிவிட்டு, அவரிடமிருந்த நகைகளை மட்டும் எடுத்து தப்பிவிட்டார்.

கார் டிரைவர் பேசறேன்

இதற்கிடையே பிரீத்தி வீடு திரும்பாததால் பதற்றம் அடைந்த அவரது கணவர் போலீசில் புகார் தந்துள்ளார்.. அப்போது போலீசார் பிரீத்தியின் செல்போனுக்கு போன் செய்தபோது, புனித் எடுத்து பேசினாராம்..

அவர் பேசும்போது "நான் வாடகை கார் டிரைவர் பேசுகிறேன். பிரீத்தி என்னுடைய காரில் பயணிக்கும்போது செல்போனை மறந்து விட்டுச் சென்றுவிட்டார்" என்று சொல்லி, அத்துடன் தலைமறைவாகி இருக்கிறார். இதற்கு பிறகே கே.ஆர்.பேட்டை போலீசார் இதுபற்றி வழக்குப்பதிந்து தலைமறைவாக இருந்த புனித்தை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+