மேனேஜரிடம் பொய் சொல்லி ஆர்சிபி போட்டிக்கு போன பெண்! சிக்க வைத்த நேரலை.. கடைசியில் செம ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: வீட்டில் அவசர வேலை இருப்பதாக பொய்சொல்லிவிட்டு கணவருடன் ஜாலியாக ஆர்சிபி மேட்ச் பார்க்க சென்ற பெண் டிவி நேரலையால் மேனேஜரிடம் சிக்கினார். இதையடுத்து மேனேஜர், அந்த பெண் ஊழியருக்கு அனுப்பிய மெசேஜ் தான் தற்போது பேசும் பொருளாகி உள்ளதோடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடங்கி நடந்து வருகிறது. தற்போது வரை ஒரு முறை கூட ஆர்சிபி எனும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சாம்பியன் ஆகவில்லை. இருப்பினும் அந்த அணிக்கு நாடு முழுவதும் நிறைய ரசிகர்கள் உள்ளனர். போட்டியிலும் ஜெயித்தாலும், தோத்தாலும் சரி ஆர்சிபியின் ரசிகர்களாவே அவர்கள் தொடர்ந்து வருகின்றனர்.

Bangalore woman left work early for family emergency but the manager spotted her on RCB -LSG Match live tv

மேலும் ஒவ்வொரு முறை ஐபிஎல் சீசன் தொடங்கும்போதும் ‛‛இ சாலா கப் நம்தே(இந்த முறை கப் நமக்கு தான்)'' என்ற ‛டயலாக்' உடன் ரசிகர்கள் போட்டியை காண தொடங்குகின்றனர். ஆனால் வழக்கம்போல் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைக்கிறது. இந்நிலையில் தான் இந்த சீசனிலும் ஆர்சிபி அணி தொடர் தோல்விகளால் துவண்டு போய் உள்ளது.

இதுவரை 5 போட்டிகளில் விளையாடி உள்ள ஆர்சிபி அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 2 புள்ளிகளுடன் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. முதல் பாதி போட்டியே இன்னும் முடியாத நிலையில் ஆர்சிபி 4 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளதால் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்துக்கு உள்ளாகி உள்ளனர். இந்நிலையில் தான் ஆர்சிபியின் வெறித்தனமான பெண் ரசிகை ஒருவர் அலுவலகத்தில் பொய் சொல்லிவிட்டு மைதானத்தில் கிரிக்கெட் போட்டியை பார்க்கப்போய் மேனேஜரிடம் சிக்கி உள்ளார்.

அதாவது கடந்த 2ம் தேதி கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ அணியும், ஆர்சிபி அணியும் விளையாடியது. இதில் முதலில் பேட் செய்த லக்னோ 20 ஓவர்களில் 5 விக்கெட் இழந்த 181 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி 19.4 ஓவர்களில் 153 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இந்த போட்டியில் ஆர்சிபி அணியை லக்னோ 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்த போட்டி பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியை காண தனியார் நிறுவன ஊழியர் நேகா திவேதி முடிவு செய்து டிக்கெட் முன்பதிவு செய்தார். இதையடுத்து அவர் போட்டி நாளில் தனது மேலாளரிடம் வீட்டில் அவசர வேலை இருப்பதாக கூறி ஏமாற்றிவிட்டு தனது கணவருடன் மைதானத்தில் போட்டியை ரசித்தார். அப்போது 16.3வது ஒவரில் லக்னோ அணியின் நிகோலஸ் பூரன் அளித்த கேட்ச் வாய்ப்பை ஆர்சிபி கீப்பர் வீணடித்தார். இந்த வேளையில் ரசிகர்கள் ரியாக்சன் டிவியில் நேரலை செய்யப்பட்டது. அதில் நேகா திவேதியின் முகம் நேரலையில் காட்டப்பட்டது.

இதனை வீட்டில் இருந்து அவரது மேனேஜர் பார்த்தார். இதையடுத்து மறுநாள் அவர் நோகா திவெதிக்கு மெசேஜ் அனுப்பினார். ‛‛நீங்கள் ஆர்சிபி ரசிகையா?'' என அனுப்பினார். அதற்கு நேகா, ‛ஆமாம், ஏன் கேட்கிறீர்கள்?'' என பதில் கேள்வி கேட்டார். அதற்கு, ‛‛நேற்று நீங்கள் கண்டிப்பாக ஏமாற்றம் அடைந்து இருப்பீர்கள். 16.3வது ஓவரில் கீப்பர் கேட்ச்சை மிஸ் செய்தபோது நேற்றைய ஆர்சிபி பீல்டிங்கின்போது உங்களின் வாடிய முகத்தை நான் பார்த்தேன்'' என கேட்டார்.

இதை பார்த்ததும் தான் நேகாவுக்கு தனது முகம் நேரலையில் வந்தது நினைவுக்கு வந்தது. இப்படியாக அவர் தனது மேனேஜரிடம் பொய்சொல்லி கிரிக்கெட் பார்க்க சென்று நேரலை மூலம் சிக்கி உள்ளார். இன்னும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதிர்ஷ்டவசமாக அவர் தப்பியுள்ளார். இத்தகைய சூழலில் தான் தற்போது இந்த ஸ்கிரீன்ஷாட் மற்றும் நேரலையில் அவரது முகம் காட்டப்பட்ட வீடியோவை அவர் ஒன்றாக இணைத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதனை பார்க்கும் பலரும் வேடிக்கையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+