மகாலட்சுமி பகீர் ஸ்கெட்ச்.. முந்திய காதலன்.. பெங்களூரில் 50 துண்டாக வெட்டப்பட்ட வழக்கில் டிவிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் ஷாப்பிங் மாலில் பணியாற்றி வந்தவர் மகாலட்சுமி. இவர் கடந்த மாதம் கொடூரமாக கொல்லப்பட்டு, அவரின் உடல் பாகங்கள் 50 துண்டுகளாக வெட்டப்பட்டு ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்டிருந்தது.

இந்த கொலையில் ஈடுபட்ட மகாலட்சுமியின் காதலன் முக்தி ராஜன் தற்கொலை செய்துவிட்டார். தற்கொலைக்கு முன்பு அவர் எழுதிய கடிதத்தில் மகாலட்சுமியின் பகீர் திட்டம் குறித்து சொல்லப்பட்டுள்ளது.

banglore muder

திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர் மகாலட்சுமி (வயது 30). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. ஆனால் கணவரிடம் இருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். கர்நாடகா மாநிலம், பெங்களூர், வயாலிக்காவல் பகுதியில் தங்கி, ஒரு ஷாப்பிங் மாலில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம், மகாலட்சுமியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து காவல்துறையினர் வீட்டுக்கு சென்றபோது சுத்தமாக தான் இருந்துள்ளது. பெரிதாக ரத்தக்கறை கூட தென்படவில்லை. ஆனால் ஃபிரிட்ஜை திறந்து பார்த்தபோது காவல்துறை அதிர்ந்து போனார்கள். அதில் மகாலட்சுமியின் உடல் 56 துண்டுகளாக வெட்டி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த கொடூரமான கொலை கர்நாடகாவையே உலுக்கியது. பிரேத பரிசோதனை முடிவில் மகாலட்சுமி கொலை செய்யப்பட்டு 15 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கும் என்று தெரிய வந்தது.

இதுகுறித்து காவல்துறையினர் நான்கு தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர். சிசிடிவி கேமராக்களில் தீவிர ஆய்வு நடத்தப்பட்டது. மகாலட்சுமியின் கணவர், உறவினர்கள், நண்பர்கள் என பலர் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்பட்டனர். மகாலட்சுமியின் செல்போன், அவரின் சமூகவலைதள கணக்குகள் குறித்து தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் மகாலட்சுமி உடன் பணியாற்றும் முக்தி ராஜன் என்ற ஆணுடன் அவர் நெருங்கி பழகியது தெரியவந்தது. தினசரி மகாலட்சுமியை வீட்டில் இருந்து பிக்கப், டிராப் செய்வது எல்லாமே ராஜன் தான்.

ஆனால், அவர் செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்து தலைமறைவாகிவிட்டார். காவல்துறை அவரின் செல்போனை டிராக் செய்தபோது அது கடைசியாக ஒடிசாவில் இருப்பது தெரியவந்தது. காவல்துறை அங்கு செல்வதற்குள், முக்தி ராஜன் ஒரு மரத்தில் தற்கொலை செய்து இறந்துவிட்டார்.

முக்தி ராஜன் தற்கொலைக்கு முன்பு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதை காவல்துறையினர் கைப்பற்றினர். அதில் பல அதிர்ச்சி தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. நானும், மகாலட்சுமியும் ரிலேசன்ஷிப்பில் இருந்தோம். தொடக்கத்தில் எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. நாளடைவில் மகாலட்சுமி என்னிடம் அடிக்கடி சண்டை போட்டு என்னை அடித்து வந்தார்.

நான் மகாலட்சுமிக்கு ரூ.7 லட்சம் பணம், கோல்டு செயின் வாங்கிக் கொடுத்தும் அவர் என்னை அடிப்பதை நிறுத்தவில்லை. மேலும், திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியும் என்னை டார்ச்சர் செய்தார். மகாலட்சுமியின் டிமேண்ட் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அதை நான் நிறைவேற்றாததால் மகாலட்சுமி என்னை கொலை செய்ய திட்டமிட்டார்.

என்னை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி வீச திட்டமிட்டிருந்தார். உடல்பாகங்களை வைக்க அவர் ஒரு சூட்கேஸ் வாங்கினார். என்னுடைய தற்காப்புக்காக, மகாலட்சுமியை கொலை செய்ய நான் முடிவு செய்தேன். மார்க்கெட்டுக்கு சென்று ஷார்ப்பான கத்தி வாங்கினேன். பிறகு அவரை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்தேன் என கூறியுள்ளார்.

இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் இந்த வழக்கில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+