தொடையில் கை வைத்து! ஆளில்லாத ரோட்டில் நிறுத்தி.. நள்ளிரவில் டாக்சியில் பெங்களூர் பெண்ணுக்கு துயரம்
பெங்களூர்: பெங்களூரில் வசிக்கும் பெண் ஒருவர் இரவு நேரத்தில் டாக்சி பயணத்தின்போது தனக்கு நேர்ந்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அந்தப் பெண் இரவு 11 மணியளவில் விமான நிலையத்திலிருந்து வீட்டிற்குத் திரும்பும்போது டாக்ஸி டிரைவர் நடந்து கொண்ட விதம் மிகவும் பாதுகாப்பற்றதாக உணர வைத்ததாகக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவரது போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இன்னுமே இரவு நேரங்களில் பெண்களால் தைரியமாக வெளியே சென்றுவர முடியாத சூழலே நிலவுகிறது. இரவு நேரங்களில் பெண்களுக்குத் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அப்படித் தான் பெங்களூர் பெண் ஒருவருக்கு மிக மோசமான சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூர் பாதுகாப்பான நகரமா
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "பெங்களூர் பாதுகாப்பானது என்று சொன்னது யார்? நேற்று இரவு விமான நிலையத்திலிருந்து திரும்பும்போது டாக்ஸியில் எனக்கு நடந்த சம்பவம் மிகவும் அச்சுறுத்துவதாக இருந்தது" என்று கூறி தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அவரது போஸ்ட் இப்போது இணையத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அதாவது பயணம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே டிரைவர் அந்தப் பெண்ணை முறைத்துப் பார்க்கத் தொடங்கினாராம். கன்னடம் தெரியுமா எனக் கேட்ட டிரைவர் பிறகு, யூடியூப்பில் மிக சத்தமாகப் பாடல்களைப் போட்டுவிட்டாராம். தொடைகளைத் தட்டிக் கொண்டே சத்தமாகப் பாடவும் தொடங்கியுள்ளார். பாடல் சத்தத்தைக் குறைக்கச் சொன்னபோதும் அவர் கேட்கவே இல்லை.
புகை பிடித்தார்
ஒரு கட்டத்தில் வண்டியை ஓட்டிக் கொண்டே புகைபிடிக்கவும் தொடங்கிவிட்டாராம். இரவு நேரத்தில் இதுபோல நடந்து கொண்டது தன்னை அச்சுறுத்துவதாக இருந்ததாகவும் இதனால் தனது மூன்று நண்பர்களிடம் போன் செய்து, பயணம் முடியும் வரை அவர்களுடன் பேசிக் கொண்டே சென்றதாகவும் அந்தப் பெண் கூறினார். மேலும், லொகேஷனை பகிர்ந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "பெங்களூர் பாதுகாப்பானது என்று யார் சொன்னது? நேற்று இரவு 11 மணியளவில் விமான நிலையத்திலிருந்து டாக்ஸி மூலம் வீடு திரும்பினேன். அப்போது எனக்கு மிகவும் பயங்கரமான அனுபவம் ஏற்பட்டது. டாக்ஸி டிரைவர் அச்சுறுத்தும் வகையில் என்னை முறைத்துக் கொண்டே இருந்தார்.
முறைத்துப் பார்த்தார்
எனக்குக் கன்னடம் தெரியுமா என்று கேட்ட அவர் பிறகு திடீரென யூடியூபில் அதீத சத்தத்தில் பாடல்களைப் போடத் தொடங்கினார். சத்தமாக பாட தொடங்கிய அவர், தொடைகளைத் தட்டிக் கொண்டே இருந்தார். நான் சத்தத்தைக் குறைக்கச் சொன்னபோது, அந்த நபர் மீண்டும் முறைத்துப் பார்த்தார். கொஞ்சம் மட்டுமே சத்தத்தைக் குறைத்தார்.
ஆள் இல்லாத ரோட்டில் டீ
திடீரென்று டிரைவர் புகைபிடிக்கத் தொடங்கினார். நான் மீண்டும் புகைபிடிக்க வேண்டாம் எனச் சொல்ல வேண்டி இருந்தது. நான் தனியாக இருந்தேன்.. இரவு நேரமாகிவிட்டது.. இதனால் எனது 3 நண்பர்களுக்குக் கால் மற்றும் மெசேஜ் அனுப்பி, லொகேஷனையும் பகிர்ந்து கொண்டேன். பிறகு எங்கோ ஆள் நடமாட்டம் இல்லாத ரோட்டில் வண்டியை நிறுத்திவிட்டு மேடம் டீ குடித்துவிட்டு வருகிறேன் என்றார். நான் பையா ரோட்டில் யாருமே இல்லையே எனச் சொன்னபோதிலும் அவர் அதைக் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டார்.
ஷாக் சம்பவம்
ஒரு 10 நிமிடங்களுக்குப் பிறகு திரும்பி வந்து வண்டியை எடுத்தார். ஆனால், அதன் பிறகு 5 நிமிடங்களுக்கு ஒருமுறை என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தார். நான் உண்மையாகவே பயந்துவிட்டேன். பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். அதிர்ஷ்டவசமாக நான் பத்திரமாக வீடு திரும்பினேன். ஆனால், டாக்ஸி டிரைவர்கள் பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைச் சம்பந்தப்பட்ட டாக்ஸி நிறுவனங்கள் தங்கள் டிரைவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்" என்றார்.
இந்தச் சம்பவம் இணையத்தில் டிரெண்டானது. பலரும் இது குறித்துப் பல விதக் கருத்துகளைத் தெரிவித்தனர். இதையடுத்து பெங்களூர் போக்குவரத்து போலீசாரும் இது குறித்து, "உங்கள் மொபைல் நம்பரை எங்களுக்கு மெசேஜ் செய்யுங்கள். இந்தச் சம்பவம் குறித்து விசாரிப்போம்" என்று பதிவிட்டுள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications