கம்மாக்கரையில் காதலனை "தூக்கிய" போலீஸ்.. பின்னாடியே வந்த அந்த "உடல்".. பெங்களூரில் இப்படியொரு பெண்?
பெங்களூர்: பெங்களூரில் இந்த காதல் ஜோடி செய்த சம்பவத்தை கண்டு, பொதுமக்கள் பதறிப்போயிருக்கிறார்கள்.. இதுகுறித்த விசாரணையையும் போலீசார் நடத்தி வருகிறார்கள். அப்படி என்ன நடந்தது?
கர்நாடகா மாநிலம், பெங்களூரு தலகட்டாபுரா அருகே உள்ளது அஞ்சனாபூர் என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் அஞ்சனா.. 20 வயதாகிறது.. அங்குள்ள கல்லூரி ஒன்றில் BBA படித்து வந்திருக்கிறார்..

காதல் ஜோடி: இவர் கோனானகுண்டே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்ற 24 வயது இளைஞரை காதலித்து வந்தார்.. ஸ்ரீகாந்த் பி.காம் படித்திருக்கிறார்.. சில வருடங்களாகவே இவர்கள் காதலித்து வந்துள்ளனர். ஆனால், ஸ்ரீகாந்த்துக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. இது தெரிந்தும் ஸ்ரீகாந்த்தை உயிருக்கு உயிராக நேசித்து இருக்கிறார் அஞ்சனா.
மகளின் காதல் விவகாரம் வீட்டுக்கு தெரியவந்ததையடுத்து, அவரது பெற்றோர் பயங்கரமாக எதிர்த்தார்கள். ஏற்கனவே திருமணமானவரை காதலிப்பது தவறு என்று அறிவுறுத்தினார்கள். ஆனாலும் அஞ்சனா பெற்றோர் பேச்சை கேட்கவில்லை. நாளுக்கு நாள் பெற்றோர் அட்வைஸ் செய்யவும், எரிச்சலடைந்த அஞ்சனா, கடந்த 1-ம் தேதி திடீரென வீட்டிலிருந்து காணாமல் போனார்.
திடீர் மாயம்: அதுபோலவே, ஸ்ரீகாந்த்தும் அவரது வீட்டிலிருந்து மாயமானார்.. இதனால் பதறிப்போன இரண்டு குடும்பத்தினரும், கோணனகுண்டே மற்றும் தலகட்டாப்புரா ஆகிய போலீஸ் ஸ்டேஷனில் தனித்தனியாக புகார் தந்தார்கள்.
இந்த புகார்களின் அடிப்படையில் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்... அப்போதுதான் நைஸ் சாலை அருகே உள்ள ஏரியில் இந்த ஜோடி சடலமாக கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது.. போலீசார் ஏரிக்கரைக்கு சென்று பார்த்தபோது, அஞ்சனாவும், ஸ்ரீகாந்தும் கயிற்றால் தங்களது கைகளை கட்டிய நிலையில் இறந்து கிடந்தார்கள்.. பின்னர் 2 பேரின் சடலங்களையும் மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்த போலீசார் விசாரணையையும் நடத்தினார்கள்.
விசாரணை: இதுகுறித்து, தெற்கு பிரிவு டிசிபி லோகேஷ் ஜகலாசர் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "காதலர்கள் 2 பேருமே ஒரே மாதிரியாக கைகளை கட்டிக் கொண்டு, ஒன்றாகவே ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிகிறது.
ஆனால், அஞ்சனா இறப்பதற்கு முன்பு, தன்னுடைய செல்போனில் வீடியோ ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.. அந்த வீடியோவில், "எங்களை ஒன்றாக வாழ விட மாட்டீர்கள்.. நாங்களும் ஒன்றாக வாழ முடியாது. அதனால் தற்கொலை செய்து கொள்கிறோம்" என்று பேசி செல்போனில் ரிக்கார்ட் செய்துள்ளார்.
ரிக்கார்டிங்: பிறகு ஏரிக்கரை பகுதியில் நின்றிருந்த ஒரு ஆட்டோவில் செல்போனை வைத்து விட்டு, ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. முதலில் ஏரியில் ஸ்ரீகாந்தின் சடலம் கண்டெடுக்கப்பட்டது... அவரது உடலை தூக்கும்போது தான் அஞ்சனாவின் சடலமும் சேர்ந்து வெளியே வந்தது... அப்போது தான் அவர்கள் கைகளில் கயிறு இறுக்கி கட்டப்பட்டிருந்தது எங்களுக்கு தெரிய வந்தது" என்றார்.
-
Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்! -
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி












Click it and Unblock the Notifications