மகனை கொன்றுவிட்டு உடலுடன் 19 மணி நேரம் இருந்த பெண் அதிகாரி.. வெளிவந்த புதிய 'திடுக்' தகவல்
பெங்களூர்: பெங்களூர்: தனியார் நிறுவன சிஇஒவான சுசானா சேத் தனது மகனை ஓட்டலுக்கு சென்ற 2 மணி நேரத்திலேயே கொலை செய்ததாகவும், மேலும் தொடர்ந்து 19 மணி நேரம் மகனின் உடலுடனேயே அவர் இருந்துள்ளதாகவும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடக மாநிலம் பெங்களூர் யஷ்வந்தபுரம் ரெசிடன்சி சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சுசனா சேத் என்ற பெண் வசித்து வந்தார். தனியார் நிறுவன சிஇஒ -வாக இருந்தார். தனது கணவர் வெங்கட்ராமனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு 4 வயதில் சின்மையை என்ற மகன் இருந்தான். இந்த நிலையில், தனது மகனுடன் கோவாவுக்கு சென்ற சுசனா சேத், அங்குள்ள ஒரு ஹோட்டலில் வைத்து தனது மகனை கொலை செய்தார்.

இதன் பின்னர் மகனின் உடலை சூட்கேசில் வைத்துக் கொண்டு பெங்களூருக்கு வாடகைக்கு கார் பிடித்து புறப்பட்டு சென்றார். ஆனால், ஹோட்டலில் அறையை புக் செய்யும் போது மகனுடன் வந்த அவர் செல்லும் போது தனியாக சென்றதும், இதேபோல் அறையில் ரத்தக்கறை இருந்ததும் ஹோட்டல் ஊழியர்களுக்கு சந்தேகத்தை கொடுத்தது. இதனால் அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் போலீசார், சுசானா சேத் சென்ற கார் டிரைவரை தொடர்பு கொண்டு சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் தாலுகா ஐமங்களா காவல் நிலையம் செல்லுமாறு கூறினர். அதன்படி காரை டிரைவரும் ஐமங்களா காவல் நிலையம் ஓட்டி சென்றார். பின்னர் போலீசார் காரில் இருந்த சூட்கேசை திறந்து பார்த்த போது தான், சுசனா சேத் மகனை கொன்று உடலை சூட்கேசில் திணித்து பெங்களூரு கொண்டு செல்ல திட்டமிட்டது வெளிச்சத்திற்கு வந்தது.
19 மணி நேரம்: சினிமாவை மிஞ்சும் வகையில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுசானாவை கைது செய்த போலீசார் அவை 6 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், சுசானா சேத் தனது மகனை ஓட்டலுக்கு சென்ற 2 மணி நேரத்திலேயே கொலை செய்ததாகவும், மேலும் தொடர்ந்து 19 மணி நேரம் மகனின் உடலுடனேயே அவர் இருந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக போலீஸ் விசாரணையில், "சம்பவத்தன்று ஓட்டலுக்கு சென்ற சுசானா சேத் தனது மகனை ஓட்டலுக்கு சென்ற 2 மணி நேரத்திற்குள்ளேயே கொலை செய்துள்ளார். பின்னர் மகனின் உடலுடன் சுமார் 19 மணி நேரமாக அங்கே இருந்துள்ளார். இதன் பிறகே அவர் மகனின் உடலை சூட்கேசில் அடைத்துக்கொண்டு ஓட்டலில் இருந்து வாடகை காரில் வெளியே சென்றுள்ளார்.
5 வாரங்களாக பார்க்கவில்லை: இதற்கிடையே தான் வரும்போது மகனுடன் ஓட்டலுக்கு வந்த அவர் போகும் போது தனியாக சென்றதாலும், மேலும் அவரது அறையில் ரத்தக்கறை இருந்ததாலும் சந்தேகமடைந்து ஓட்டல் ஊழியர்கள்போலீசில் தெரிவித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. முன்னதாக, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் விவகாரத்து கோரியும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இதனிடையே, இந்த கொடூர கொலை சம்பவம் நடந்த உடனேயே இந்தோனேஷியாவில் இருந்த பெண்ணின் கணவர் வெங்கட்ராமன் பெங்களூருக்கு விரைந்தார்.
அவரிடம் கடந்த 13 ஆம் தேதி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "தனக்கும் தனது மனைவிக்கும் இடையே விவாகாரத்து நடைமுறைகள் சென்று கொண்டிருந்தாதாக வெங்கட் ரமணன்" கூறினார். மேலும், மகனை பார்க்க தனக்கு உரிமை இருந்தாலும் சுச்சனா சேத், கடந்த 5 வாரங்களாக பார்க்க அனுமதி அளிக்கவில்லை என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications