ஓலா ஸ்கூட்டரை வாங்காதீங்க.. அப்புறம் கஷ்டப்படுவீங்க.. வைரலான பெங்களூர் பெண்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ஓலா ஸ்கூட்டரில் பல்வேறு பழுதுகள் ஏற்பட்டு வருவதாகப் புகார் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர் ஓலா ஸ்கூட்டரை தயவுசெய்து வாங்காதீங்க.. அப்பறம் உங்க வாழ்க்கையில ரொம்ப கஷ்டப்படுவீங்க என்று ஸ்கூட்டரிலேயே பதாகை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து வரும் நிறுவனம் ஓலா. ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து பொதுமக்களிடையே அந்த வாகனத்துக்கு பெரும் வரவேற்பு இருந்தது. ஓலா நிறுவனம் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 37 ஆயிரம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வந்தது. ஓராண்டில் கிட்டத்தட்ட மூன்று லட்சம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை இந்நிறுவனம் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

banglore ola electric scooter

ஒருபக்கம் விற்பனையில் சாதனை படைத்து வந்தாலும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாகவும், அடிக்கடி பழுது ஏற்படுவதாகவும், சில சமயங்களில் இந்த பழுதுகளால் தீ விபத்து உள்ளிட்டவை ஏற்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணமாகவே உள்ளன. இந்நிலையில், பெங்களூரில் ஓலா பைக்கை வாங்க வேண்டாம் என்று ஓலா ஸ்கூட்டரில் பதாகை வைத்து பொதுமக்களுக்கு பெண் ஒருவர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சம்பவம் வைரலாகி உள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த கெளரி என்ற அப்பெண், தனது ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் விழிப்புணர்வுப் பதாகை ஒன்றை கட்டி வைத்துள்ளார். இந்தப் புகைப்படத்தை எக்ஸ் தள பக்கத்தில் பதிவு செய்துள்ள அப்பெண் அந்தப் பதிவில், அன்புள்ள கன்னடர்களே.. ஓலா பைக் பயனற்ற ஒரு இருசக்கர வாகனம் ஆகும். தயவுசெய்து ஓலா எலெக்ட்ரிக் பைக்கை வாங்காதீர்கள்..

ஓலா எலெக்ட்ரிக் பைக்கை வாங்கினால், உங்கள் வாழ்க்கை மிகவும் கடினமாக இருக்கும்... இப்படிக்கு விரக்தியடைந்த ஓலா வாடிக்கையாளர்.. என்று அதில் எழுதியுள்ளார். மேலும், ஓலா எலக்ட்ரிக் பைக்குக்கு எதிராக நான் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் ஓலா பைக்கால் தங்களுக்கும், தங்களது நண்பர்களுக்கும் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்த பதிவுகளை கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதேபோல, கர்நாடகாவில் எலெக்ட்ரிக் பைக்கில் ஏற்பட்ட பழுதை முறைப்படி சரிசெய்யாததால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர் ஓலா ஷோரூமை பெட்ரோல் ஊற்றி தீவைத்த சம்பவம் நேற்று முன்தினம் நடந்தது குறிப்பிடத்தக்கது. முகமது நதீம் என்பவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஓலா எலக்ட்ரிக் பைக்கை வாங்கியுள்ளார். அந்த பைக்கில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது.

முகமது நதீம் ஓலா ஷோரூமுக்கு செ்று பழுதை சரிசெய்யும்படி கூறியுள்ளார். அவர்களும் பழுதை சரிசெய்து கொடுத்துள்ளனர். ஆனாலும், அடிக்கடி தொடர்ந்து பழுதாகி வந்ததால் வேறு பைக் தர வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால், அந்த ஷோரூமில் புதிய பைக் வழங்காமல் பழுதை மற்றும் நீக்கி தந்துள்ளனர்.

இருப்பினும், அடுத்தடுத்து தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டு வந்ததால் ஆத்திரமடைந்த நதீம் ஷோரூமிற்கே தீ வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, முகமது நதீமை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் ஓய்வதற்குள் பெங்களூர் பெண்ணின் ஓலா பைக் தொடர்பான பிரச்னை சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+