மாயமான நெக்லஸ்.. பக்காவாக திருடி.. அபத்தமாக சிக்கிய பெங்களூர் வேலைக்கார அக்கா
பெங்களூர்: திருட்டு, கொலை உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் சம்மந்தப்பட்டவர்கள் ஏதாவது தடயத்தை விட்டு செல்வார்கள் என்று சொல்லப்படும். ஒருவேளை தடயமே இல்லாமல் குற்றம் செய்தாலும், பிற்காலத்தில் அவர்கள் ஏதாவது ஒரு வகையில் சிக்குவார்கள். பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது போலத்தான் பெங்ளூரில் அபார்ட்மென்ட் வீட்டில் கைவரிசை காட்டி, சில மாதங்களில் அபத்தமான செயலால் சிக்கியுள்ளார்.
கர்நாடக மாநிலம், பெங்களூர் மரதஹல்லியில் ஒரு அபார்ட்மென்ட் உள்ளது. அந்த அபார்ட்மென்டில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஸ்ருதிகா ப்ரிஜேஷ் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. கடந்த மார்ச் மாதம் அவர்கள் வீட்டில் இருந்த 65 கிராம் தங்க நகைகள் திருடப்பட்டன. 1 தங்க நெக்லஸ், 2 வளையல், 2 மோதிரம், 2 கம்மல், ஒரு செயின் ஆகியவை திருடப்பட்டிருந்தன. இதுகுறித்து ஸ்ருதிகாவின் கணவர் ப்ரிஜேஷ் தாமி காவல்நிலையத்தில் புகாரளித்திருந்தார்.

அதனடிப்படையில் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அவர்களின் வீட்டில் வேலைக்கார பெண் ரேணுகா உள்ளிட்ட சிலரிடமும் விசாரித்தனர். ஆனால் வழக்கில் எந்த முன்னேற்றமும் நடக்கவில்லை. இதனால் காவல்துறையும் தடுமாறிக் கொண்டிருந்தது. நகை மாயமாகி நான்கு மாதங்களான நிலையில், செல்போன் மூலம் ஸ்ருதிகாவுக்கு ஒளி கிடைத்துள்ளது. ஸ்ருதிகா எதேச்சையாக ரேணுகாவின் வாட்ஸ் அப் டிபியை பார்த்துள்ளார். அப்போது ரேணுகாவின் கழுத்தில் ஸ்ருதிகாவின் மாயமான நெக்லஸ் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதுகுறித்து அவர்கள் போலீஸை அலெர்ட் செய்யவே, ரேணுகாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதுகுறித்து, ஸ்ருதிகா கூறுகையில், "அதை பார்த்தவுடனே அது என் நெக்லஸ் என்று தெரிந்துவிட்டது. என் அம்மாவும் அதை உறுதிபடுத்தினார். காவல்துறை விசாரணையில் ரேணுகாவும் எங்கள் வீட்டில் திருடிய நகை என்பதை ஒப்புக் கொண்டார். கடந்த தீபாவளி பண்டிகைக்கு பிறகு அந்த நெக்லஸை நான் பயன்படுத்தவில்லை. என் நகையை ரேணுகா கவனித்துள்ளார். எங்கள் வீட்டில் 4 பணியாட்கள் இருந்தனர்.
ரேணுகா மட்டும் வேலையை விட்டு நின்றார். அப்போதே எனக்கு சந்தேகம் வந்தது. அவர் இதேபோல பல பிளாட்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதனால் அவர்களின் நடவடிக்கையை தொடர்ந்து கண்காணித்து வந்தோம். கடந்த மாதம் அவர்கள் ஊர் திருவிழாவுக்காக ரேணுகா கணவருடன் சென்றுள்ளார். அப்போது செல்ஃபி எடுத்துள்ளார். திருடி மாதக்கணக்கில் ஆகிவிட்டது என்பதால் எல்லோரும் மறந்திருப்பார்கள் என்று நினைத்து அதை டிபியாக வைத்து சிக்கிவிட்டார்.” என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications