50% பெங்களூர் வெள்ளத்தில் மிதக்கிறது.. கனமழையால் முடங்கிய இயல்பு வாழ்க்கை
பெங்களூர்: தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா என தென்னிந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கர்நாடகா மாநிலம் பெங்களூரில் கடந்த ஒரு வாரமாக கனமழை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. சென்னை, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் சென்னைக்க ரெட் அலெர்ட் எச்சரிக்கை விட,ப்பட்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக பெரியளவுக்கு மழை வரவில்லை. ஆனால் அந்த மழைக்கே தாங்காமல் சென்னை, கோவையில் பல இட்ங்களில் பாதிப்பு ஏற்பட்டது.

இதேபோல கர்நாடகா மாநிலத்திலும் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தலைநகர் பெங்களூரில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இந்தியா - நியூஸிலாந்து இடையே நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டது.
நேற்றும், இன்றும் பெங்களூரின் பல பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்திய வானிலை மையம் அறிவிப்பு படி, பெங்களூரில் நேற்று இரவு முதல் 18 செ.மீ மழை பெய்திருக்கிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் பெங்களூரில் இன்றும் கனமழை பெய்யும் என்று மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ராஜராஜேஷ்வரி நகர், கெங்கரி, ஹெபல் சந்திப்பு, நாகவாரா, ஹோரமாவு, ஹென்னூர், கஸ்தூரி நகர், ராம்மூர்த்தி நகர் கனமழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்தப் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்து மக்களுக்கு சிரமம் கொடுத்துள்ளது. அரசாங்கம் மீட்பு பணிகளில் ஈடுபட்டும் பாதிப்பு குறையவில்லை. இதனால் சமூகவலைதளங்களிலும் பெங்களூர் மழை பாதிப்புகள் குறித்து அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
கனமழை, வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் பகுதி நிலவரங்களை சமூகவலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். பெங்களூரின் 50 சதவீதம் வெள்ளத்தில் மிதக்கிறது என்பதை சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் சொல்ல முடியும் என ஒரு நெட்டிசன் பதிவிட்டுள்ளார்.
மேலும் சிலர், கருமேகங்கள் சூழ்ந்த பெங்களூர் வானத்தில் சூரியனை பார்த்தே நீண்ட நாட்களானது போல உணர்வு ஏற்படுகிறது. எப்போது சூரியனை பார்ப்போம் என்று ஆவலுடன் காத்திருக்கிறோம் என்று கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.
பெங்களூரில் சாதாரண நாட்களிலேயே கடுமையான போக்குவரத்து நெரிசல் இருக்கும். மழை, வெள்ளம் காரணமாக போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமலும் மக்கள் தவிக்கின்றனர். அப்பார்ட்மென்ட்களிலும் தண்ணீர் அதிகம் புகுந்துள்ளது.
பல பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் உள்ளது. இதனால் விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சில ரயில் மற்றும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டும் தாமதாகவும் இயங்கி வருகின்றன.
பெங்களூரில் கடந்த அக்டோபர் 16 ஆம் தேதியில் இருந்து மழை பெய்து வருகிறது. வரும் நாட்களில் மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது மக்களுக்கு அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் பெரும்பாலான பகுதிகளில் வருகிற 22 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்ள்ள்தாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பெங்களூரில் காதலி ஏமாற்றியதால், காதலன் தவறான முடிவு.. 2 கே கிட்ஸ் அறிய வேண்டிய பாடம் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை!












Click it and Unblock the Notifications