இனி Smoking Zone கட்டாயம்.. ஹோட்டல் - பார் - பப்களுக்கு பறந்த உத்தரவு.. மீறினால் லைசென்ஸ் ‛கேன்சல்'
பெங்களூர்: பெங்களூரில் செயல்பட்டு வரும் ஹோட்டல், பப், பார், ரெஸ்டாரண்ட்டுகளில் புகைப்பிடிப்பதற்கு தனி இடம் ஒதுக்க வேண்டும். மீறினால் முதலில் நோட்டீஸ் வழங்கப்படும். அதன்பிறகும் கண்டுக்கொள்ளாவிட்டால் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்று பெங்களூர் மாநகராட்சி சார்பில் வார்னிங் கொடுக்கப்பட்டுள்ளது.
புகைப்பிடித்தல் உடலுக்கு கேடானது. புகைப்பிடிப்பது நமக்கு மட்டுமின்றி நம்முடன் இருப்போரையும் பாதிக்கும். இதனால் பொதுவெளிகளில் புகைப்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் கூட பலரும் பொது இடங்களில் புகைப்பிடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

மேலும் ஹோட்டல், பப், பார், ரெஸ்டாரண்ட்டுகளில் புகைப்பிடிப்போருக்கு தனியாக Smoking Zone அமைத்து கொடுக்க வேண்டும் என்று பெங்களூர் மாநகராட்சி நிர்வாகம் அறிவுரை வழங்கி உள்ளது. அதோடு மீறுவோரின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது கடந்த 15 நாட்களுக்கு முன்பாக பெங்களூர் மாநகராட்சி அதிகாரிகள் சார்பில் சுமார் 300 இடங்களில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஹோட்டல், ரெஸ்டாரண்ட், பார், பப் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடந்தது. அப்போது பல இடங்களில் Smoking Zone இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதன் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்நிலையில் தான் தற்போது இந்த உத்தரவை பெங்களூர் மாநகராட்சி கடுமையாக பின்பற்ற முடிவு செய்துள்ளது. அதன்படி ஹோட்டல், ரெஸ்டாரண்ட், பார், பப்களில் தனியாக Smoking Zone அமைக்க வேண்டும்.
இதை மீறுவது கண்டுபிடிக்கப்பட்டால் 2வது முறை நோட்டீஸ் வங்கி லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தனியாக வழக்குப்பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பெங்களூர் மாநகராட்சி சார்பில் அடிக்கடி சோதனைகள் நடத்தப்படும். அப்போது Smoking Zone இல்லாத ஹோட்டல், ரெஸ்டாரண்ட், பார், பப் முதல் முறை அதனை அமைக்கும்படி நோட்டீஸ் வழங்கப்படும். 2வது முறை சோதனையிலும் Smoking Zone இல்லாவிட்டால் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications