Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெண்ணை நிர்வாணப்படுத்தி ஊர்வலம்.. மகாபாரதத்தின் திரெளபதியை சுட்டிக்காட்டி விளாசிய கர்நாடகா ஹைகோர்ட்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெலகாவி மாவட்டத்தில் மகன் காதலியுடன் வீட்டை விட்டு ஓடிய நிலையில் அவரது தாயை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்று மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் நடந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம் மகாபாரதத்தில் வரும் திரெளபதி கதையை கூறி பொதுமக்களை கடுமையாக சாடியது.

கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் அசோக் (வயது 24). இவருக்கும் 18 வயது நிரம்பிய இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள். இதற்கிடையே தான் அவர்கள் இடையேயான பழக்கம் காதலாக மாறியது.

Belagavi Naked Parad Case: karnataka High Court slams people with mention of Draupadi in Mahabharatam

இதையடுத்து அசோக்கும், அந்த இளம்பெண்ணும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் இந்த திருமணத்துக்கு இளம்பெண்ணின் வீட்டில் சம்மதம் என்பது கிடைக்காது என அவர்கள் நினைத்தனர். இதையடுத்து கடந்த 11ம் தேதி அசோக்கும், அந்த இளம்பெண்ணும் வீட்டை விட்டு வெளியேறினர்.

இதுபற்றி அறிந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் அசோக்கின் வீட்டுக்கு சென்றனர். அங்கு அவரது 42 வயது நிரம்பிய தாயார் இருந்தார். அவரிடம் அசோக் பற்றி அவர்கள் விசாரித்தனர். அப்போது அவர் மகன் அசோக் பற்றிய விபரம் தெரியவில்லை என கூறினார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அசோக்கின் தாயாரை தாக்கி நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்றனர். அதோடு மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கினர்.

இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி கைது நடவடிக்கையை தொடங்கி உள்ளனர். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது உயர்நீதிமன்றம் மகாபாரதத்தில் வரும் திரெளபதியின் கதையை கூறி வருத்தம் தெரிவித்தது. அதாவது, ‛‛இந்த துயர சம்பவம் நடந்தபோது கிராம மக்கள் வேடிக்கை பார்த்துள்ளனர். ஆனால் யாரும் உதவவில்லை. இது மொத்த மக்களின் கோழைத்தனத்தை காட்டுகிறது. தற்போதைய காலத்திலும் துரியோதனன்கள், துஷானர்கள் உள்ளனர். திரௌபதியே கேள்.. ஆயுதங்களை எடு.. இப்போது கோவிந்த் யாரும் காப்பாற்ற வரமாட்டார்கள்'' என கூறினார். அதாவது பெண்கள் தங்களை தானே பாதுகாக்க வேண்டும் என்பதற்காக இதனை சொல்வார்கள். இத்தகைய சூழலில் தான் நீதிமன்றம் இப்படி கருத்து தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு முன்னாள் கவர்னர் ஜெனரல் லார்ட் வில்லியம் பெண்டிங்க் காலத்தில் இதுபோன்ற ஒரு சம்பவத்துக்கு அனைத்து கிராம மக்களுக்கு பொறுப்பேற்க கூறப்பட்டது. நல்லது பற்றி வாயால் பேசுபவர்கள் நல்லவர்கள் அல்ல. தீமை நடக்கும்போது ஊமைப்பார்வையாளராக இருக்கக்கூடாது. யாராவது தடுக்க முயற்சி செய்திருக்கலாம் என அனைவரையும் பொறுப்பேற்க வைத்தார்'' மேலும் வழக்கு குறித்து சிஐடி போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+