பெங்களூரு வீரபத்திரா நகர் பேருந்து நிலையத்தில் பயங்கர தீ விபத்து.. கொளுந்து விட்டு எரியும் பஸ்கள்
பெங்களூர்: பெங்களூரு வீரபத்திரா நகரில் உள்ள பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்துகள் தீப்பிடித்து எரிந்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த பேருந்துகள் பயங்கரமாக புகை மற்றும் நெருப்புடன் கொழுந்து விட்டு எரியும் காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
பெங்களூரு வீரபத்ரா நகர் பேருந்து நிலையத்தை ஒட்டிய டிப்போவில் 40க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி கர்நாடகா ஊடகங்கள் வெளியிட்ட தகவலின் படி, அங்கு நிறுத்தப்பட்டிருந்த குறைந்தது நான்கு தனியார் பேருந்துகள் முழுமையாக எரிந்துள்ளன.

தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இரண்டு தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். முதற்கட்ட தகவல்களின்படி, தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 10க்கும் மேற்பட்ட பேருந்துகள் தீயில் சிக்கி எரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடங்களில் செய்தி நிறுவனங்களில் வெளியிடப்பட்டுள்ளன. பெங்களூரு வீரபத்திரா நகர் பேருந்து நிலையத்தை ஒட்டிய டிப்போவில் இருந்து கரும் புகை மேலே விண்ணை முட்டும் அளவிற்கு எழுவதும், பேருந்துகள் தீயில் பயங்கரமாக எரிந்து கொண்டிருப்பதும் வீடியோ காட்சிகளில் உள்ளன. இந்த விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை.. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
#WATCH | Private buses parked in a bus depot in Bengaluru's Veerabhadranagar catch fire
— ANI (@ANI) October 30, 2023
Detailed awaited. pic.twitter.com/gC0WAmksCZ
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications