தமிழகத்தின் பக்கத்தில்.. பிரமாண்டமாக வருது பெங்களூரின் 2வது கிரிக்கெட் மைதானம்! அடிக்கல்லுக்கு தயார்
பெங்களூர்: பெங்களூரில் 2வது பிரமாண்ட கிரிக்கெட் மைதானம் தமிழ்நாட்டின் எல்லையில் அமைய உள்ளது. சுமார் 80 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கூடிய வகையில் உருவாக்கப்படும் இந்த கிரிக்கெட் மைதானத்துக்கு வரும் 23ம் தேதி கர்நாடகா முதல்வர் சித்தராமையா அடிக்கல் நாட்டுகிறார். இந்த ஸ்டேடியம் குறித்த முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை முதன் முதலாக ஆர்சிபி எனும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கியது. அதன்பிறகு பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழநதனர். இதுபற்றி ஓய்வு நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா ஆணையம் விசாரணை நடத்தினார்.

அப்போது இடநெருக்கடி தான் முக்கிய காரணம் என்பதும், சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் 33 ஆயிரம் இருக்கைகள் மட்டுமே உள்ளன. இதனால் நெருக்கடியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்துக்கு மாற்றாக பெங்களூரில் பிரமாண்டமான கிரிக்கெட் மைதானம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி பெங்களூர் புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகாவில் உள்ள சூர்யா சிட்டியில் 2வது கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படுகிறது. இதற்கு முதல்வர் சித்தராமையா வரும் 23ம் தேதி அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த சூர்யா சிட்டி என்பது எலக்ட்ரானிக் சிட்டி, பொம்மசந்திரா மற்றும் ஓசூர் ரோட்டில் இருந்து மிகவும் பக்கத்தில் உள்ளது. மொத்தம் 80000 இருக்கைகளுடன் மைதானம் அமைய உள்ளது. இதனால் இந்த மைதானம் கட்டி முடிக்கப்படும்போது இது இந்தியாவின் 2வது பெரிய மைதானமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதற்கட்டமாக இந்த மைதானம் பணிக்கு கர்நாடகா வீட்டு வசதி வாரியம் டெண்டர் கோரியது. இதன் மதிப்பு ரூ.943.46 கோடியாகும். இந்த தொகை முதற்கட்ட பணிக்கானது தான். முதறகட்ட பணி என்பது கிரிக்கெட் மைதானம் மற்றும் மைதானத்தின் உள்கட்டமைப்பு, மைதானத்தை இணைக்கும் ரோடு மற்றும் அதனை சார்ந்த பணிகளை உள்ளடக்கி உள்ளது. இந்த பணி தொடங்கும் பட்சத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் முடிக்கப்பட உள்ளது.
மைதானம் அமையும் சூர்யா சிட்டி என்பது தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து வெறும் 19 கிலோமீட்டர் தொலைவில் தான் உள்ளது. இது ஓசூரில் இருந்து தற்போதைய சின்னச்சாமி மைதானத்துக்கு செல்வதை விட குறைந்த தொலைவிலேயே அமைந்துள்ளது.
திட்ட ஆவணங்களின்படி இந்த கிரிக்கெட் மைதானம் மொத்தம் 1 லட்சத்து 8 ஆயிரத்து 963 சதுர மீட்டர் தொலைவுக்கு பரவி இருக்கும். இதில் போடியம் மட்டும் 1 லடசத்து 21 ஆயிரத்து 713 சதுர மீட்டராக இருக்கும். இருக்கைகளை எடுத்து கொண்டால் 76,500 சீட்டுகள் பொதுமக்களுககானது. 2 ஆயிரம் இருக்கைகள் விஐபிக்களுக்கானது. 1,000 இருக்கைகள் விவிஐபிக்களுக்கானது. 800 இருக்கைகள் மாற்றுத்திறனாளிகளுக்கானது என கூறப்பட்டுள்ளது.
இந்த மைதானம் என்பது வெறும் கிரிக்கெட் தாண்டி பிற பயன்பாட்டுக்கும் பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டு வருகிறது. அதன்படி சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை நடத்தும், கான்சர்ட், விழாக்கள் மற்றும் என்டர்டெயின்மென்ட் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications