ஆட்டோவுக்குள் கிடந்த உடல்.. கள்ளக்காதலனால் 4 குழந்தைகளின் தாய்க்கு நேர்ந்த கதி.. அலறிய பெங்களூர்
பெங்களூர்: பெங்களூரில், கணவரை இழந்த 4 குழந்தைகளுடன் வசித்து வந்த பெண் ஆட்டோவில் பிணமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கள்ளக்காதலன் அவரை கொன்று உடலை ஆட்டோவில் வீசிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூர் திலக் நகரில் நேற்று மாலையில் ஆட்டோ ஒன்று நின்றது. அந்த ஆட்டோவின் பின் இருக்கையில் போர்வையில் சுற்றப்பட்டு பெண் உடல் ஒன்று கிடந்தது. இதனை பார்த்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

உடனடியாக, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து அந்த ஆட்டோவில் இருந்த பெண்ணின் உடலை மீட்டனர். அப்போது அவரது தலையில் காயங்கள் இருந்தது.
இதனால் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். யாரோ அவரை அடித்து கொன்று உடலை ஆட்டோவில் வீசி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு போலீசார் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் சல்மா என்பதும், அவருக்கு 35 வயது என்பதும் தெரியவந்தது.
அதுமட்டுமின்றி சல்மாவுக்கு திருமணம் ஆகி 4 குழந்தைகள் உள்ளன. அவரது கணவர் இறந்தும், சல்மா 4 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்ததும் தெரியவந்தது. இந்த சமயத்தில் தான் சல்மாவுக்கு சுப்பிரமணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் இருவருக்கும் கள்ளக்காதலாக மாறி உள்ளது.
சல்மாவுக்கு அவ்வப்போது பணம் கொடுத்து சுப்பிரமணி உதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் நேற்று சல்மாவை, அவரது கள்ளக்காதலன் சுப்பிரமணி சந்தித்துள்ளார். அப்போது அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணி கட்டையை எடுத்து சல்மாவின் தலையில் அடித்துள்ளார்.
இதில் சல்மா மயங்கி கீழே விழுந்து இறந்துள்ளார். இதனால் என்ன செய்வது என்று அறியாத சுப்பிரமணி அருகே இருந்த ஆட்டோவின் பின் இருக்கையில் அவரது உடலை போர்வையால் சுற்றி போட்டுவிட்டு எஸ்கேப் ஆனது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சுப்பிரமணியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
மேகதாதுவின் மோதலும்.. பெங்களூருவின் வலியும்.. தமிழகத்தை பாதிக்காமல் மாற்று வழி உள்ளதா? -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
அமைச்சர் பதவிக்கு குட்பை? பெங்களூர் வளர்ச்சி துறையின் பல்லை பிடுங்கிய டிகே சிவக்குமார்.. கிருஷ்ணபைரே கவுடா அதிருப்தி -
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
கரப்பான் பூச்சி கட்சியுடன் கைகோர்க்கும் பிரகாஷ் ராஜ்! கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ்! பெங்களூரில் ஷாக் -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
பெங்களூரில் நடக்கும் கொடுமை..! திடீர் திடீரென வீட்டை காலி செய்யச் சொல்லும் வீட்டு ஓனர்கள்.. ஏன்? -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
சட்டம் ஒழுங்கில் பெரிய ஓட்டை.. நாமக்கல்லில் தலைதூக்கிய துப்பாக்கி கலாச்சாரம்! 20 சவரன் நகை அபேஸ்! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications