ஒரே ஒரு பாய்ச்சல்.. கணவனை தாக்கிய சிஇஓ சுசேனா சேத்? அரண்ட பெங்களூர்.. "அந்த 7 நாட்கள்" ரூமில் பகீர்
பெங்களூரு சிஇஓ சுசானா சேத், கோவாவில் உள்ள காண்டோலிம் என்ற பகுதியில் உள்ள ஸ்டார் ஓட்டலில் கடந்த ஜனவரி 6 முதல் 8ம் தேதி வரை தங்கியிருந்துள்ளார். அப்போது தன்னுயைட 4 வயது மகனை கொலை செய்து, உடலை சூட்கேசில் மறைத்து வைத்து டாக்சி மூலம் பெங்களூரு வந்துள்ளார்.

அங்கே போலீசாரால் கைது செய்யப்பட்டு, தற்போது விசாரணையின் பிடியில் உள்ளார்.. தன்னுடைய மகனை கொன்றது எப்படி என்று போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து வருகிறார்.
ஆவேசம்: 2 நாட்களுக்கு முன்பு, போலீஸாரிடம் இரண்டரை மணி நேரத்திற்கு இந்த கொலை சம்பவம் குறித்து இறுதி வாக்குமூலம் காெடுத்திருப்பதாக அதிகாரிகள் சொல்கிறார்கள்.. அப்போது, தன்னுடைய மகனை எங்கு, எப்படி படுத்திருந்தார் என்பதையும், தன்னுடைய குழந்தையின் உடலை மறைத்து எடுத்துச் சென்ற சூட்கேஸ், எங்கு வைக்கப்பட்டிருந்தது என்பதையும் கூறினார்.
அத்துடன், அந்த சூட்கேஸில் குழந்தையின் சடலத்தை மறைத்து வைத்திருந்தது எப்படி என்பதையும் போலீசாரிடம் சொன்ன சுசேனா சேத், தன்னுடைய குழந்தையை கொல்லும்போது, தாலாட்டு பாடி தூங்க வைத்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார். கணவர் மீதிருந்த கோபத்திலும், கணவருக்கு தன்னுடைய குழந்தை கிடைத்துவிடக்கூடாது என்பதற்காகவும் இந்த கொலையை செய்தாக கூறியிருக்கிறார்.. இப்போது மேலும் சில தகவல்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மெசேஜ்: ஜனவரி 6ம் தேதியன்று, கணவர் வெங்கட் ராமனுக்கு மெசேஜ் ஒன்றை அனுப்பினாராம் சுசேனா சேத்.. அதில், மறுநாள் அதாவது 7ம் தேதி வந்து குழந்தையை சந்திக்குமாறு மெசேஜ் அனுப்பியிருக்கிறார்.. ஆனால், பெங்களூரு வீட்டிற்கு வெங்கட்ராமன் வந்து பார்த்தபோது, அங்கு யாருமே இல்லையாம். அப்படியானால், கணவருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு, சுசேனா சேத் எங்கே சென்றிருப்பார்? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், குழந்தையை சந்திக்கலாம் என்று வெங்கட்ராமனுக்கு கோர்ட் அனுமதி தந்திருந்தது.. இதற்காகவே, கடந்த டிசம்பர் 31ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) குழந்தைகயை சந்திக்க கோவாவுக்கு வந்திருக்கிறார் வெங்கட்ராமன். ஆனால், அப்போது குழந்தையை சந்திக்க வெங்கட்ராமனை, சுசேனா சேத் அனுமதிக்கவில்லையாம். குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்று வெங்கட்ராமனிடம் சொன்னாராம்.. இப்படியே 2 வாரமும் ஏமாற்றியிருக்கிறார் சுசேனா சேத்.
புத்தாண்டு: அதுமட்டுமல்ல, புத்தாண்டை கொண்டாடுவதற்காக, 31 ம் தேதியே கோவாவுக்கு குழந்தையுடன் வந்துவிட்டாராம் சுசேனா சேத்.. புத்தாண்டையும் கொண்டாடியிருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜனவரி 10ம் தேதி வரை அந்த ஹோட்டல் ரூமையும் புக் செய்திருக்கிறார். ஆனால், 7ம் தேதியே ரூமை காலி செய்துள்ளார். அன்றைய தினமே போலீசில் சடலத்துடன் பிடிபட்டுள்ளார்.
வெங்கட்ராமன், சுசனா சேத் இருவரையும் ஒன்றாக வைத்து போலீசார் விசாரித்திருக்கிறார்கள்.. அப்போது என் மகனின் சாவுக்கு நீ தான் காரணம் என்று வெங்கட்ராமன், மனைவியை பார்த்து ஆவேசமாக சத்தம் போட்டாராம். இதைக்கேட்டும்கூட, எந்தவிதமான குற்ற உணர்ச்சியும் இல்லாமல், சலனமேயில்லாமல் நின்று கொண்டிருந்தாராம் சுசனா சேத்.
இவ்வளவு ஆவேசமா?: ஆனால், கணவர் தன்னை திட்டியதுமே, ஆவேசமாகி, அவர் மீது பாய்ந்து தாக்கினாராம் சுசேனா சாத்.. பதிலுக்கு அவரும் வாக்குவாதம் செய்துள்ளார்.. இருவருமே சிறிது நேரம் கைகலப்பிலும் ஈடுபட்டுவிட்டார்களாம். உடனே போலீசார் அவர்களை சமாதானம் செய்து ஆசுவாசப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.. அப்போது 2 பேரின் வாக்குமூலத்தையும் பதிவு செய்து கொண்டதாகவும் தெரிகிறது. ஆனால், கணவர் மீது பாய்ந்து, ஆவேசத்தை கொட்டிய சுசனோ சேத்தை பார்த்து, போலீசார் அதிர்ந்தே போய்விட்டார்களாம்.
இதில் அதிர்ச்சி என்னவென்றால், போலீசில் பிடிபடும் முன்பே, அதாவது ஒருவாரத்துக்கு முன்பே குழந்தையை கொன்றிருப்பதாக புது தகவல் வெளியாகியிருக்கிறது.
கைது செய்து, 6 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த சுசேனா சேத், நேற்று திங்கட்கிழமை கோவா குழந்தைகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.. ஆனால், விசாரணை இன்னும் முடிவடையாததால், அவரது காவலை நீட்டிக்குமாறு போலீசார் கோரினார்கள்..
அவகாசம்: அதுமட்டுமல்ல, குற்றம் சாட்டப்பட்டுள்ள சுசேனா சேத், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லையாம்.. அதனால், அவரை விசாரிக்க கூடுதல் காவல் அவகாசம் வேண்டும் என்றும், அவரது டிஎன்ஏ மாதிரியை சோதிப்பது மற்ற பணிகளையும் செய்ய வேண்டியிருப்பதால் அவரது காவலை நீட்டிக்குமாறும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, சுசனே சேத்தின் காவலை மேலும் 5 நாட்களுக்கு நீட்டித்து கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது.
கணவர் வெங்கட்ராமனின் வாக்குமூலத்தை பதிவு செய்யும் பணி ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், சுசேனே சேத் வாக்குமூலம் இன்னும் முடியவில்லை.. விசாரணைக்கும் அவர் ஒத்துழைக்கவில்லை..இதுவரை எந்த உண்மையையும் வெளிப்படையாக சொல்லவும் இல்லை. போலீசாரையே குழப்பி குழப்பி சுற்ற விட்டுக் கொண்டிருப்பதால், மேலும் 5 நாள் கூடுதலாக அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.
குழப்பம்: இப்படிப்பட்ட சூழலில்தான், குழந்தையை கொன்று 1 வாரம் ஆகியிருக்கலாம் என்றும் புது தகவல் கிளம்பி உள்ளது. இதுகுறித்தெல்லாம், வரப்போகும் 5 நாளும் போலீசார் விசாரிப்பார்கள் என்று நம்பப்படுகிறது.. ஆனால், அப்போதும் சுசேனா சேத் வாய் திறக்காவிட்டால்???
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications