கெஸ்ட் ஹவுஸுக்கு சாப்பிட வந்த இடத்தில்.. ரூமுக்குள் போய் தூக்கு.. பெண் டிஎஸ்பி எடுத்த ஷாக் முடிவு!

பெங்களூருவில் பெண் டிஎஸ்பி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கெஸ்ட் வீட்டிற்கு சாப்பிட போன டிஎஸ்பி லட்சுமி, ரெஸ்ட் எடுப்பதாக சொல்லி ரூமுக்குள் போய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த மர்ம மரணம் குறித்த விசாரணையை பெங்களூரு போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

பெங்களூரு நகர சிஐடி பிரிவில் டிஎஸ்பி ஆக வேலை பார்த்து வந்தவர் லட்சுமி... 33 வயதாகிறது.. கடந்த 2014ம் ஆண்டு தேர்வில், தேர்ச்சி பெற்று 2017 முதல் பெங்களூரு சிஐடி பிரிவில் டிஎஸ்பி ஆக பணியாற்றி வந்துள்ளார்.

Bengaluru CID branch Women DSP commits suicide

நேற்றிரவு, பெங்களூரு அன்னபூரணேஸ்வரி நகரில் உள்ள சொந்தக்காரர் வீட்டிற்கு சாப்பிட சென்றார்.. சாப்பிட்டு முடித்ததும், கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுப்பதாக சொல்லி, ஒரு ரூமுக்குள் சென்றார்..

ஆனால், ரொம்ப நேரமாக அவர் வெளியே வராததால், சந்தேகமடைந்த உறவினர்கள், ரூம் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது லட்சுமி தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், லட்சுமியின் சடலத்தை மீட்டு, தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு டிஎஸ்பியே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. லட்சுமியை பொறுத்தவரை மிக நேர்மையான அதிகாரியாம்.. ஒருவேளை மிக நேர்மைதான் லட்சுமியின் மரணத்துக்கு காரணமா? அல்லது பணி நெருக்கடியா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+