பஸ் டிக்கெட் ஜாஸ்தியாம்.. முதியவரை சாக்கு பையில் கட்டி கூரியர் அனுப்ப முயன்ற குடும்பம்! பெங்களூரில் ஷாக்
பெங்களூர்: பெங்களூரில் முதியவர் ஒருவரை சாக்குப்பையில் கட்டி கூரியர் அனுப்பும்படி ஒரு குடும்பம் கூறிய சம்பவம் நடந்துள்ளது. கூரியர் அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் சந்தேகப்பட்டு சாக்குப்பையை திறந்து பார்த்தபோது இந்த சம்பவம் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. இதுபற்றிய விசாரணையில் அந்த முதியவரை சாக்குப்பையில் கட்டி கூரியர் அனுப்புவதற்கு அந்த குடும்பம் சொன்ன பதில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பெங்களூர் வயாலிகாவல் பகுதியில் கூரியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்துக்கு நேற்று மாலையில் 4 பேர் வந்தனர். 2 ஆண்கள், 2 பெண்கள் வந்தனர்.

முதலில் 2 பெண்கள் அலுவலகம் உள்ளே நுழைந்தனர். அவர்களை தொடர்ந்து பின்னால் 2 ஆண்கள் அலுவலகத்துக்குள் வந்தனர். அப்போது ஆண்கள் இருவரும் வெள்ளை நிறத்தில் சாக்கு மூட்டையை வைத்திருந்தனர்.
சாக்குப்பையில் கேட்ட சத்தம்
அந்த சாக்கு மூட்டையை ஊழியரிடம் காண்பித்தவர்கள் இந்த பார்சலை கூரியர் அனுப்ப வேண்டும் என்று கூறினர். அப்போது சாக்கு பையின் உள்ளே இருந்து சத்தம் வந்தது. இது ஊழியர்களுக்கு சந்தேகத்தை எழுப்பியது. இதனால் அவர்கள் சாக்குப்பையை திறந்து பார்க்க சென்றனர். ஆனால் சாக்குப்பை பார்சலை கொண்டு வந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சாக்குப்பையை திறந்து பார்க்க வேண்டாம். கூரியர் மட்டும் அனுப்பினால் போதும் என்று கூறினர்.
बैंगलोर में एक लड़की ने प्रैंक Video बनाने के लिए बुजुर्ग व्यक्ति को बोरे में पैक किया और पार्सल बनाकर कोरियर शॉप पर पहुंच गई। शक होने पर पार्सल खोला गया तो उसमें बुजुर्ग निकला। तब लड़की ने बताया कि वो Video बनाकर ये बताना चाह रही थी कि फेस्टिव सीजन में बस–ट्रेन से घर पहुंचना… pic.twitter.com/ZDGGbemX4W
— Sachin Gupta (@Sachingupta) March 18, 2026
மூச்சுத்திணறிய முதியவர்
இது ஊழியர்களுக்கு கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் ஊழியர்கள் அவர்களின் பேச்சை கேட்கவில்லை. சாக்குப்பையை அவிழ்த்து காண்பிக்கும்படி கூறினர். இதையடுத்து ஒருவர் சாக்குப்பையை அவிழ்த்தார். அப்போது அதில் இருந்து மூச்சுத்திணறிய நிலையில் முதியவர் ஒருவர் வெளியே வந்தார். இது ஊழியர்களுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்தது. ஊழியர் யார் இவர்? எதற்காக இப்படி செய்தீர்கள்? என்று கேள்வி கேட்டனர்.
கடும் வாக்குவாதம்
ஆனால் ஊழியர்களுக்கு அந்த கும்பல் எந்த பதிலும் கிடைக்கவில்லை. மாறாக முதியவரை மீண்டும் சாக்குப்பையில் வைத்து கூரியர் அனுப்பி விடுங்கள். அதுதான் எங்களுக்கு தேவை. அதை மட்டும் செய்யுங்கள். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம் என்று இரக்கமே இன்றி அந்த 4 பேர் கும்பல் கூறியது. இதனை ஊழியர்கள் கண்டித்தனர். போலீசில் புகாரளிப்பதாக கூறினர். இதுதொடர்பாக இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
போலீசுக்கு போன தகவல்
இதையடுத்து ஊழியர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் கூரியர் அலுவலகத்துக்கு விரைந்த நிலையில் முதியவர் உள்பட 5 பேரும் அங்கிருந்து ஓடிவிட்டனர். இதுபற்றி போலீசார் விசாரணையை தொடங்கினர். இந்த வேளையில் அந்த கும்பல் மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டது.
ஷாக் காரணம்
அதில், ''ரம்ஜான், யுகாதி உள்ளிட்டவற்றால் பஸ் டிக்கெட் கட்டணம் அதிகரித்துள்ளது. இந்த பிரச்சனையை அனைவரின் கவனத்துக்கும் எடுத்து செல்ல விரும்பினோம். இதனால் தான் இப்படி செய்தோம். இது தவறு என்பதை நாங்கள் முதலில் உணரவில்லை. இப்போது தவறு என்று உணர்ந்துள்ளோம். எங்களை மன்னித்து விடுங்கள். இனி இப்படி செய்ய மாட்டோம்'' என்று அவர்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர். இதையடுத்துஅவர்களுக்கு வார்னிங் செய்யப்பட்டது.
இதற்கிடையே தான் அவர்கள் போட்ட நாடகம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. வீடியோ பார்க்கும் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
-
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications