பெங்களூரில் சொந்த வீடு.. மக்களே இனி கனவிலும் நடக்காது போலையே..!
பெங்களூரு ரியல் எஸ்டேட் சந்தையின் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே வருகிறது, குறிப்பாக மிடில் கிளாஸ் மக்களுக்கு பெங்களூரில் சொந்த வீடு கனவு என்பது எட்டாக் கனியாகி வருகிறது. இதனால் பல லட்சம் இளைஞர்கள் தற்போது சொத்து வீடு வாங்க முடியாமல் முடங்கியுள்ளனர்.
பெங்களூரு ரியல் எஸ்டேட் துறையில் பெரிய மாற்றம் நடந்து வருகிறது. ரூ.30 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையிலான நடுத்தர விலை கொண்ட வீடுகள், குறிப்பாக 2 BHK அபார்ட்மெண்ட்கள் புதிதாக கட்டப்படுவது குறைந்துள்ளது. இது மாத சம்பளம் பெறும் மிடில் கிளாஸ் மக்களுக்கு, முதல் முறை வீடு வாங்கும் இளைஞர்களுக்கும் பெரும் சவாலாக மாறியுள்ளது.

பில்டர்கள் எடுத்த முக்கிய முடிவு
பெங்களூரில் இருக்கும் பில்டர்கள் பொதுவாக பட்ஜெட் வீடுதளை தான் அதிகம் கட்டுவார்கள், ஆனால் டெவலப்பர்கள் தற்போது பெரிய அளவிலான 3 BHK வீடுகளை (ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரை) அதிக அளவில் கட்டி வருகின்றனர். இந்த பிரிவில் மட்டும் 22,000-க்கும் மேற்பட்ட புதிய வீடுகள் சந்தைக்கு வந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம், பிரீமியம் வீடுகளில் லாபம் அதிகம், பணம் வேகமாக கிடைக்கிறது, உயர் வருமானம் கொண்ட மக்கள் பெங்களூரில் அதிகமாக இருக்கும் காரணத்தாலும், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடும் காரணத்தால் பல ஊழியர்கள் தங்களிடம் இருக்கும் பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர், இதில் கிடைக்கும் பணம் பெரும் பகுதி ரியல் எஸ்டேட் சந்தைக்கு தான் வருகிறது.
இதேவேளையில் நிலத்தின் விலை, கட்டுமான செலவுகள், வட்டி விகிதமும் அதிகரித்துள்ளதால், மலிவு விலை வீடுகளை கட்டுவது டெவலப்பர்களுக்கு சிரமமாகிவிட்டது. இதனால் ப்ரீமியம் வீடுகளுக்கு சென்றுவிட்டனர்.
மிடில் கிளாஸ் மக்கள்
இதனால் காலம் காலமாக முதல் முறை வீடு வாங்குபவர்களின் நுழைவாயிலாக இருந்த ரூ.30-50 லட்சம் பிரிவில் புதிய வீடுகள் குறைந்து வருகிறது. இதனால் மிடில் கிளாஸ் மக்கள் தற்போது வீடு வாங்க வேண்டும் என்றால் தங்கள் பட்ஜெட்டை விட அதிக விலைக்கு உதாரணமாக ரூ.80 லட்சம் அல்லது 1 கோடிக்கு மேல் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இது பெரிய வீட்டுக் கடன், நீண்ட தவணை காலம், அதிக நிதி அழுத்தம் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. இதனால் பலர் வீடு வாங்குவதையே ஒத்திவைக்கிறார்கள் அல்லது நகரத்துக்கு வெளியே செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
பிரீமியம் பிரிவிலும் ஆபத்து
விசித்திரமாக, பிரீமியம் வீடுகளை அதிகம் கட்டும் அதே நேரத்தில், அந்த பிரிவிலும் விற்கப்படாத வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ரூ.1 கோடிக்கு மேல் உள்ள வீடுகளில் விற்பனை சற்று சிறப்பாக இருந்தாலும், எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஐடி துறையில் ஏற்பட்ட மந்த நிலையில், பிரீமியம் வீடுகளை தேவைக்கு அதிகமாக கட்டப்பட்டதால் தற்போது விற்பனை ஆகாமல் உள்ளது.
பெங்களூரில் ஒருபுறம் பிரீமியம் திட்டங்கள் வேகமாக வளர்கின்றன. மறுபுறம் மலிவு விலை மற்றும் நடுத்தர வீடுகள் குறைந்து வருகின்றன. இந்த இடைவெளி மிடில் கிளாஸ் மக்களுக்கு தலைவலியாக மாறி வருகிறது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications